India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஷால் விரைவில் சிங்கம் போல மீண்டு வருவான் என்று ஜெயம் ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஷால் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அவனை விட ஒரு தைரியசாலி யாரும் கிடையாது என்றார். அவன் இப்போது ஒரு மோசமான கட்டத்தில் இருப்பதாகவும், அவனுடைய தைரியம் அவனை காப்பாற்றும் என்றும் கூறியுள்ளார். அவனுடைய நல்ல மனசுக்கும், அவனது குடும்பத்தினரின் நல்ல மனசுக்கும், சீக்கிரம் மீண்டு வருவான் என்றார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, TN முழுவதும் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பு நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கார்டுதாரர்களுக்கு டபுள் டமாக்காவாக, பரிசுத் தொகுப்போடு இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது. இதன்மூலம், அலைச்சலின்றி ஒரேநேரத்தில் கார்டுதாரர்கள் பரிசுத் தொகுப்பு, வேட்டி, சேலையை பெற்றுக்கொள்ளலாம்.
குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு ₹84,000 ஊக்கத்தொகை வழங்க ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. உக்ரைனுடனான போர் உள்ளிட்ட காரணங்களால் ரஷ்யாவில் பிறப்பு விகிதம் 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. கடந்தாண்டின் முதல் பாதியில் 5,99,600 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. ரஷ்யாவில் 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் இரண்டாவதாக தாய்மை அடையும் பெண்களுக்கு ₹8 லட்சம் வழங்கப்படுகிறது.
குடியிருப்புகள், மத வழிபாட்டுத் தலங்கள் அருகில் TASMAC கடைகள் இருப்பதை மாற்றி அமைப்பது குறித்து ஆராய டிஜிபி தலைமையில் குழு அமைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு கூடுதல் வழக்கறிஞர் உள்ளிட்டோர் அடங்கிய இந்தக் குழு 6 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில், மக்கள் எதிர்ப்புகள் உள்ள பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மாற்றி அமைக்கப்பட வாய்ப்புள்ளது.
பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று காலை தொடங்கியது. வழக்கமாக ரேஷன் கடைகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை ஆகும். ஆனால் பொங்கல் தொகுப்பு வழங்க ஏதுவாக, அனைத்து ரேஷன் கடைகளும் இன்று திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆதலால் டோக்கனில் குறிப்பிடப்பட்ட எண்கள் வைத்திருப்போர் பொங்கல் தொகுப்பை நேரில் பெற்று கொள்ளலாம்.
பெரியார் விவகாரத்தில் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க நினைத்தால், சட்டம் தன் கடமையை செய்யும் என சீமானை மினிஸ்டர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேசமாட்டார்கள் என கூறிய அவர், யாருக்கோ ஏஜெண்டாக இருக்கும் சில தற்குறிகள் இங்கே அரசியல் செய்ய முயல்வதாகவும், தமிழகத்தை ஏன் பெரியார் மண் என்கிறோம் என்பது சில மண்ணாந்தைகளுக்கு புரியாது என்றும் விமர்சித்துள்ளார்.
சத்தீஸ்கரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் காெல்லப்பட்டனர். சுக்மா மாவட்டம் பலிகுடா அருகே பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்று முதல் மக்கள் சொந்த ஊர் பயணிக்க உள்ளனர். இதற்காக, ஜன.13ம் தேதி வரை மட்டும் 1.4 லட்சம் பேர் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்துள்ளதாக அச்சங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆன்லைனில் அதிக கட்டணம் விதித்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்ச கட்டண விவரத்தை www.aoboa.co.in என்ற இணையத்தில் பயணிகள் அறியலாம் என்றும் கூறினர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது 2002இல் தொடரப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. 22 ஆண்டுகளாக நடந்த விசாரணையில் காவல்துறை தரப்பில் 70க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு நாளை இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு நாளை இரவு 11.35 மணிக்கும், எழும்பூரில் இருந்து மதுரைக்கு நாளை காலை 10.45 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கான <
Sorry, no posts matched your criteria.