news

News January 10, 2025

ரயிலில் தட்கல் டிக்கெட் ஈஸியாக புக் செய்வது எப்படி?

image

ரயிலில் சில நிமிடங்களில் விற்றுத் தீரும் தட்கல் டிக்கெட்டுகளை ஈஸியாக புக் பண்ண இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. *அதிவேக Internet உள்ள பகுதியில் இருங்கள். *ACக்கு காலை 9.58க்குள்ளும், Sleeperக்கு 10.58க்குள்ளும் IRCTCயை லாகின் செய்து உள்ளே சென்றுவிடுங்க. *Captcha Codeஐ கவனமாக Enter செய்யுங்க.*கிரெடிட் கார்டை வைத்து புக் செய்வதை விட, IRCTC ewallet (அ) UPI மூலம் விரைவாக புக் செய்யலாம். Happy Pongal..

News January 10, 2025

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. பொங்கல் பண்டிகை விடுமுறையால், இன்றும், ஜன.13, 17ல் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும். தொடர்ந்து, ஜன.18ல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஜன.20ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். இந்நிலையில், இன்று முதல் ஆளாக சுயேட்சையாக போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

News January 10, 2025

பெண்ணை பின்தொடர்ந்தால் இனி 5 ஆண்டுகள் சிறை

image

பெண்ணை பின்தொடர்ந்தால் பிணையில் விடுவிக்காதபடி, 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தத்தை பேரவையில் CM ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார். அதில், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 ஆண்டுகளை வரை சிறை தண்டனை விதிக்கவும், ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

News January 10, 2025

யுவராஜ் சிங் கரியர் முடிவுக்கு கோலியே காரணம்: உத்தப்பா

image

யுவராஜ் சிங் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்ததற்கு விராட் கோலி தான் காரணம் என ராபின் உத்தப்பா குறை கூறியுள்ளார். கேன்சரில் இருந்து மீண்டுவந்த யுவராஜுக்கு Fitness தேர்வில் எந்த தளர்வும் அளிக்கப்படவில்லை. அவராகவே தேர்வுபெற்றார். எனினும் நுரையீரல் திறன் குறைந்ததாக கூறி, கோலி அவரை வெளியேற்றினார். கேன்சரை வென்றதே பெரிய போராட்டம். ஒரு கேப்டனுக்கு டீமை எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியம் என்கிறார்.

News January 10, 2025

கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

image

கவர்னர் RN.ரவியை நீக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜெய்சுகின் என்பவர் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார். கவர்னரின் செயல்பாடுகள் அரசியலமைப்புக்கு எதிராக உள்ளதால் அவரை நீக்க வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கவர்னர் – TN அரசு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில், சட்டப்பேரவையில் அரசின் உரையை வாசிக்காமல் கவர்னர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

News January 10, 2025

90 மணி நேரம் வேலை: கொதித்த எம்.பி சு.வெங்கடேசன்

image

தொழிலாளர்கள் வாரம் 40 மணி நேரம் வேலை செய்தே, L&T நிறுவனத் தலைவர் சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் ₹51 கோடியாக உள்ளது என MP சு.வெங்கடேசன் சாடினார். அவர் மேலும் லாபமடைய தொழிலாளர்களை 90 மணி நேரம் உழைக்கச் சொல்வதாகவும் குற்றஞ்சாட்டினார். தொழிலாளர்களின் இணையர்களை கொச்சைப்படுத்தும் துணிவை தங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த வெறியை முறிக்கவே உழைப்பாளரின் உரிமையை உலகம் போற்றிப் பாதுகாப்பதாக கூறினார்.

News January 10, 2025

அரசு அலுவலகம், பள்ளிகளுக்கு 8 நாள்கள் விடுமுறை

image

அரசு அலுவலகம், பள்ளிகளுக்கு அடுத்தடுத்து 8 நாள்கள் விடுமுறை வருகிறது. அதாவது, நாளை (டிச.11), நாளை மறுநாள் (டிச.12) விடுமுறை. டிசம்பர் 13ஆம் தேதி திங்கள்கிழமை வேலை நாள். பின்னர் பொங்கலையொட்டி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதையடுத்து டிசம்பர் 18 சனி, 19 ஞாயிறு ஆகிய நாள்கள் விடுமுறை ஆகும். இதனால் மாநிலத்தில் அடுத்தடுத்து 8 நாள்கள் விடுமுறை வருகிறது.

News January 10, 2025

Game Changer படம்.. பட்டாசா? புஸ்வானமா?

image

ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் இன்று வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ‘படத்த முடிச்சு விட்டீங்க’ என்கிற அர்த்தத்தில் #GameOver ஹேஷ்டேக் டிரெண்டாகிறது. தமிழ்நாட்டிலும் பெரியளவு வரவேற்பு இல்லை என்பதை Ticket Booking Screen காட்டுகிறது. இதனால் ராம் சரண் Fans வருத்தத்தில் உள்ளனர். நீங்க படம் பார்த்துவிட்டீர்களா?

News January 10, 2025

10 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

image

பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகள் 10 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. தாம்பரம் – நாகர்கோவில், எழும்பூர் – மதுரை, எழும்பூர் – நெல்லை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கிய நிலையில், 8.10க்கே வெயிட்டிங் லிஸ்ட் வந்துவிட்டது. இதனால், முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேக்கு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 10, 2025

வியாபாரிக்கு ரூ.210 கோடி மின்கட்டண பில்

image

இமாச்சலை சேர்ந்த வியாபாரிக்கு ரூ.210 கோடி மின்கட்டணம் கட்டக்கோரி பில் வந்துள்ளது. லலித் திமனுக்கு டிசம்பருக்கான பில் வந்தது. அதில் ரூ.210,42,08,405 செலுத்தும்படி காேரப்பட்டிருந்தது. கடந்த மாதம் ரூ.2,500 மட்டுமே செலுத்தியிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்து மின்வாரியத்திற்கு சென்று அவர் புகார் அளிக்க, தொழில்நுட்ப கோளாறு காரணம் எனத் தெரிந்தது. அது சரி செய்யப்பட்டு ரூ.4,047 செலுத்தியுள்ளார்.

error: Content is protected !!