news

News January 10, 2025

மாதாந்திர மின்கட்டணம்: அமைச்சர் புதிய அறிவிப்பு

image

மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என 2021 தேர்தலில் DMK வாக்குறுதி அளித்தது. எனினும், தற்போது வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், பேரவையில் இன்று இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நாட்டிலேயே TNல் தான் மின் கட்டணம் குறைவாக இருப்பதாகவும், மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும் எனவும் உறுதியளித்தார்.

News January 10, 2025

சும்மா இருப்பதுதான் வேலை. அதில் இவ்வளவு வருமானமா?

image

ஜப்பானில் 41 வயதான ஷோஜி மோரமோடோ எதுவும் செய்யாமல் இருந்து ஆண்டுக்கு ரூ.69 லட்சம் சம்பாதிக்கிறார். இதனை Do Nothing Job என்கிறார்கள். தன்னை தானே வாடகைக்கு விடுகிறார் ஷோஜி. மாரத்தான் ஓடும்போது தண்ணீர் கொடுக்க, வீடு சுத்தம் செய்யும்போது பேசிக் கொண்டிருக்க, கான்செர்ட்டுக்கு துணையாக இவரை Clients புக் செய்கிறார்கள். ஆண்டுக்கு 1,000 புக்கிங் மேல் வருகிறதாம். நல்ல வேலையா இருக்கே.

News January 10, 2025

இந்தியாவிடம் எத்தனை செயற்கைக்கோள் உள்ளன?

image

உலகில் எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை செயற்கைக்கோள்கள் உள்ளன என்ற புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. USAவிடம் 8,530 செயற்கைக்கோள்கள், ரஷ்யாவிடம் 1,545 , சீனாவிடம் 724 செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. இங்கிலாந்திடம் 658, ஜப்பானிடம் 208, பிரான்ஸிடம் 105, இந்தியாவிடம் 105 செயற்கைக்கோள்கள் உள்ளன. ஐரோப்பிய யூனியன் விண்வெளி நிறுவனத்திடம் 95 செயற்கைக்கோள்கள் இருக்கின்றன.

News January 10, 2025

TNக்கு ₹7,057 கோடி நிதியை விடுவித்த மத்திய அரசு

image

மாநில அரசுகளுக்கு ₹1,73,000 கோடி வரிப்பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது. GST உள்ளிட்ட வரிகளை மொத்தமாக வசூலிக்கும் மத்திய அரசு, அதில் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை வழங்கி வருகிறது. தமிழகத்திற்கு ₹7,057.89 கோடி வரிப்பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக, உ.பி.க்கு ₹31,039 கோடியும், அடுத்ததாக பீகாருக்கு ₹17,403 கோடியும், 3வதாக ம.பி.க்கு ₹13,582 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

News January 10, 2025

IND அணிக்கு 239 ரன்கள் இலக்கு

image

அயர்லாந்து vs இந்திய மகளிர் அணிகள் மோதும் முதல் ODI போட்டி இன்று நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த IREW அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் கேபி லெவிஸ் 92, லியா பால் 59 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில், ப்ரியா மிஸ்ரா அதிகபட்சமாக 2 விக்கெட்களை கைப்பற்றினார். இந்த ODI தொடரில் மொத்தம் 3 போட்டிகள் நடைபெற உள்ளன.

News January 10, 2025

இன்னும் 3 நாள்களில் முடிவடையும் சென்னை Book Fair!

image

சென்னை புக் ஃபேர் முடிவடையும் தேதி நீட்டிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலை பபாசி அமைப்பு மறுத்துள்ளது. டிச.27ஆம் தொடங்கி சென்னை நந்தனம் YMCAவில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி, முன்பே அறிவித்தபடி ஜன.12ஆம் தேதியோடு நிறைவடையும் என்றும், அதற்கு இன்னும் 3 நாள்களே இருப்பதால் திரளாக வந்து பங்கேற்குமாறு பொதுமக்களை பபாசி கேட்டுக் கொண்டுள்ளது. நீங்க புக் ஃபேர் போனீங்களா? என்ன புத்தகம் வாங்கினீங்க?

News January 10, 2025

நடிகர் காதல் சுகுமார் மீது துணை நடிகை புகார்

image

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, நடிகர் காதல் சுகுமார் மீது துணை நடிகை சென்னை வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமணமாகி தாம் கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாகவும், தன்னை திருமணம் செய்வதாக கூறி, சுகுமார் 3 ஆண்டுகளாக நகை, பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும், பிறகு திருமணமான தகவலை அவர் (சுகுமார்) தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News January 10, 2025

இணக்கமாக இல்லாத 3 பேரை ஓரங்கட்டிய புஸ்ஸி ஆனந்த்!

image

விஜய் இன்றி TVK பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வரும் ஆனந்த், தன்னிடம் இணக்கமாக இல்லாதவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆரம்பம் முதலே மாவட்ட பொறுப்பாளர்கள் விவகாரத்தில் கவனமாக இருக்கும் அவர், காஞ்சி நெப்போலியன், நாகை சேகர், தூத்துக்குடி அஜிதா ஆகியோரை அழைக்கவில்லை எனத் தெரிகிறது. இந்த விவகாரம் தவெகவில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

News January 10, 2025

நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு காயம்

image

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது நடிகை ரஷ்மிகாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவரை ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஷூட்டிங் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பரில் சிறிய விபத்தில் சிக்கிய ரஷ்மிகா மந்தனா, மெல்ல மீண்டு வந்த நிலையில், தற்போது ஜிம்மில் காயத்திற்கு ஆளாகியுள்ளார். விரைவில் மீண்டு வாருங்கள் ‘எக்ஸ்பிரஷன் குயின்’ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News January 10, 2025

பெண்ணுக்கு எதிரான குற்றம்: தண்டனைகள் என்னென்ன?

image

கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால் 24 மணி நேரத்தில் போலீசில் புகார் அளிக்க வேண்டும், மீறினால் ₹2 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் <<15115376>>சட்டத்திருத்தம்<<>> மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறை ஊழியரோ, அவரது நெருங்கிய உறவினரோ பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், விதிக்கப்படும் தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!