India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
”எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?” என்று முதல்வர் ஸ்டாலினின் அதே கேள்வியை EPS இன்று முதல்வரிடமே கேட்டார். 2020ஆம் ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அது அரசியல் செய்வதாக EPS பேசியிருந்தார். அதற்கு ஸ்டாலின் அப்போது இந்த பதிலை அளித்தார். இன்று சட்டப்பேரவையில் EPS அரசியல் செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியபோது EPS அதே பதிலை கொடுத்து அதிர வைத்தார்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதையொட்டி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், அரசு பஸ் எனில், 9445014436, தனியார் ஆம்னி பஸ் எனில் 18004256151, 04424749002, 04426280445, 04426281611இல் புகார் தெரிவிக்குமாறு அரசு கூறியுள்ளது.
இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் வருண் ஆரோன், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர், 9 டெஸ்ட், 9 ODI போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் 29 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2010-11 ரஞ்சி டிராபி தொடரில், 152 km/h வேகத்தில் பந்துவீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஆனால், தொடர் காயங்கள் காரணமாக அவரது கெரியரில் பின்தங்கினார்.
தினசரி பின்வரும் பழக்கங்களை பின்பற்றினாலே புற்றுநோய்கள் வரும் வாய்ப்புகளை குறைக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்: *பிளாஸ்டிக்கை தவிருங்கள் *ஸ்டீல் (அ) கிளாஸ்வேர், பீங்கான் பாத்திரங்கள் பயன்படுத்துங்கள் *சமையலுக்கு Non-stick தவிர்த்து, ஸ்டீல் பாத்திரங்கள் பயன்படுத்தலாம் *பாக்கெட்டில் அடைத்த கேக்குகளை தவிர்க்கவும் *பழங்கள், காய்கறிகளை பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் கழுவி, பின் துடைத்து உண்ணவும்.
ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் இன்று வெளியாகியுள்ளது. மறைந்த IAS அதிகாரி டி.என்.சேஷனை இன்ஸ்பிரேஷனாக வைத்தே, ஹீரோ கேரக்டர் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சேஷன், 1990களில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த போது, தேர்தல் முறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்தார். அதனால் ஆட்சியில் உள்ளோர், அரசியல்வாதிகளுடன் மோதல்கள் ஏற்பட்ட போதும் அஞ்சாமல் செயல்பட்டார்.
திருவள்ளுவர் தினமான ஜனவரி 15ஆம் தேதி, டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார். கள்ளுண்ணாமையை வலியுறுத்தியவர் திருவள்ளுவர். அந்த வகையில், திருவள்ளுவர் தினத்தில் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, முதல் மாவட்டமாக சென்னையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் அறிவிப்பு வெளியாகும்.
விவசாய நிலங்களை சேதப்படுத்துவதால், பல பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் சுட்டுக்கொல்லப்படுகின்றன. எனினும், வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி இது குற்றமாகும். மேலும், இதற்கு அபராதமும், சிறைத்தண்டனையும் உண்டு. இந்நிலையில், காப்பு காடுகளில் இருந்து 1-3 கி.மீ. தொலைவுக்கு வரும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி அளிக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
காட்டுப் பன்றி இறைச்சி சுவையாக இருக்கும் என சட்டப்பேரவையில் கூறி, எம்.எல்.ஏ வேல்முருகன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருக்கும் காட்டுப் பன்றி இறைச்சியை அவர் எப்படி சுவைத்தார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். காப்புக் காடுகளிலிருந்து 3 KM தூரம் வரும் பன்றிகளை மட்டும் சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணியின் கீப்பருக்கான ரேஸில் ராகுல், பண்ட், சாம்சன் இடையே போட்டி உள்ளது. இவர்களில் இருவர் அணியில் சேர்க்கப்படுவர். ODIல் 77 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல், 2,851 ரன்களை எடுத்துள்ளார். பண்ட் 31 போட்டிகளில் 871 ரன்களையும், சாம்சன் 16 போட்டிகளில் 510 ரன்களையும் எடுத்துள்ளனர். இவர்களில் யார் அணியில் இருந்தால் நல்லது என நீங்கள் நினைக்கிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.