news

News April 21, 2025

விரைவில் 1 கிராம் தங்கம் ரூ.10,000.. வியாபாரிகள் சூசகம்

image

நாள்தாேறும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரிக்கிறது. சென்னையில் இன்று 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.9,834ஆகவும், 1 சவரன் ரூ.78,672ஆகவும் விற்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.9,015ஆகவும், 1 சவரன் ரூ.72,120ஆகவும் விற்பனையாகிறது. இந்த விலை குறைய வாய்ப்பில்லை, வரும் நாள்களில் 1 கிராம் ரூ.10,000ஆகவும், சவரன் ரூ.80,000ஆகவும் அதிகரிக்கும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.

News April 21, 2025

மே.வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சுவலி

image

மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்படவே, அவர் உடனடியாக கொல்கத்தா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உரிய பரிசோதனைக்கு பின்னர் அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இச்செய்தியை அறிந்து அம்மாநில CM மம்தா பானர்ஜி, உடனே ஹாஸ்பிடலுக்கு விரைந்து கவர்னரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

News April 21, 2025

அடுத்த போட்டியிலும் சஞ்சு விளையாட மாட்டார்

image

RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், வரும் 24-ம் தேதி நடைபெறவிருக்கும் RCB-க்கு எதிரான போட்டியிலும் விளையாட மாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 16-ம் தேதி DC-க்கு எதிரான போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், கடந்த போட்டியை சஞ்சு தவறவிட, ரியான் பராக் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், அடுத்த போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது

News April 21, 2025

கேன்சரால் உயிருக்கு போராடும் நடிகர்

image

நடிகர் சூப்பர் குட் சுப்ரமணி கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளார். 4-ம் கட்ட கேன்சரோடு, கடும் நிதி நெருக்கடியில் அவர் போராடி வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மனம் படைத்தவர்கள் உதவ முன் வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘பரியேறும் பெருமாள்’, ‘ஜெய் பீம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சுப்ரமணி.

News April 21, 2025

JEE மெயின்ஸ் தேர்வில் அசத்திய கிராமம்… 40 பேர் தேர்ச்சி

image

JEE முதன்மைத் தேர்வில் பிஹாரை சேர்ந்த கிராமம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பட்வ டோலி என்ற கிராமத்தில், இலவச பயிற்சி அளிக்கும் ‘விருக்ஷா சன்ஸ்தான்’ நிறுவனத்தில் பயிற்சிபெற்ற 28 பேர் உள்பட 40 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இக்கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பொறியாளர் இருக்கின்றார். இதுபோன்ற தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு மற்ற கிராமங்களுக்கும் கிடைத்தால் நாட்டுக்கே மாற்றம் கிடைக்கும்.

News April 21, 2025

சச்சின் ரீ-ரிலீஸ்.. வசூல் என்னனு தெரியுமா?

image

2005-ம் ஆண்டு வெளியான விஜய்யின் சச்சின் படம் கடந்த 18-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைக்கு வந்த சச்சின் படத்தை புதுப்படம் போல உற்சாகமாக விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். 3 நாள்களில் இப்படம் உலகளவில் ₹5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்களுக்கு விஜய்யோடு எந்த படம் ரீ – ரிலீஸ் செய்யனும்னு ஆசை?

News April 21, 2025

CSK டிக்கெட் விற்பனை மந்தம்… அதிருப்தியில் ரசிகர்கள்

image

வழக்கமாக CSK போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிடும். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தொடர்ந்து தோல்விகளை சென்னை அணி சந்தித்து வருவதால் SRH-க்கு எதிரான போட்டிக்கான டிக்கெட் விற்பனை வழக்கத்துக்கு மாறாக மந்தமாக உள்ளது. டிக்கெட் வாங்க ரசிகர்கள் விரும்பாததை வைத்தே அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது.

News April 21, 2025

சிறுவனை கடத்தி ரேப்.. பெண்ணுக்கு 20 ஆண்டு ஜெயில்

image

ராஜஸ்தானில் சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 16 வயது சிறுவனை லாலிபாய் மோஹியா (30) என்ற பெண் விரும்பியுள்ளார். அவனுடன் உடலுறவில் ஈடுபட விரும்பி கடத்தி, ஓட்டலில் அடைத்து வைத்து மதுவை அளித்து 7 நாள்கள் வரை ரேப் செய்துள்ளார். போலீசார் லாலிபாயை கைது செய்து சிறுவனை மீட்டனர். இந்த வழக்கில் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

News April 21, 2025

பிஎம் இன்டர்ன்சிப் திட்டம்: நாளையே கடைசி

image

படித்த வேலையில்லா இளைஞர்களை தேர்வு செய்து, தனியார் நிறுவன பங்களிப்புடன் அவர்களுக்கு மத்திய அரசு ஓராண்டு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கிறது. அப்போது மாதம் தலா ரூ.5,000, ஒரு முறை மட்டும் ரூ.6,000 மத்திய அரசு அளிக்கிறது. இதற்கு <>https://pminternshipscheme.com/ <<>>இணையதளத்தில் பதிவு நடைபெற்று வருகிறது. நாளையுடன் இந்த பதிவு நிறைவடையவுள்ளது. SHARE IT.

News April 21, 2025

REWIND: தமிழ் கவிஞர் பாரதிதாசன் மறைந்த நாள்

image

தமிழ் இலக்கிய உலகில் மிகவும் போற்றப்படுபவர்களில் பாரதிதாசனும் ஒருவர். பெண்கள் விடுதலை,அழகின் சிரிப்பு, குயில் பாடல்கள் என பாரதிதாசன் படைத்த படைப்புகள் இன்றும் அவர் புகழ் பாடுகின்றன. பாரதியாரின் வழியில் அவரை அடியொற்றித் துடித்தெழுந்து தொண்டாற்றியவர் பாரதிதாசன். அவரின் பெயரையே தனது பெயராகவும் அவர் மாற்றிக் கொண்டார். கடந்த 1964-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இதே நாளில்தான் அவர் இன்னுயீர் நீத்தார்.

error: Content is protected !!