news

News January 10, 2025

டங்ஸ்டன் திட்டம்: 17ஆம் தேதி நல்ல செய்தி

image

டங்ஸ்டன் திட்டம் எந்த காரணத்தை கொண்டும் வராது என அண்ணாமலை உறுதியளித்துள்ளார். வரும் 17ஆம் தேதி TNக்கு வரும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும், மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்காததால் தான் ஏலம் விடப்பட்டதாகவும், இந்த திட்டத்தால் மத்திய அரசுக்கு ₹1 கூட வருமானம் வராது எனவும் கூறியுள்ளார்.

News January 10, 2025

ஒரே நாளில் ₹5.5 லட்சம் கோடி நஷ்டம்

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவை சந்தித்தன. நிஃப்டி வெறும் 86 புள்ளிகளை மட்டுமே இழந்திருந்தாலும் Indexஇல் இல்லாத பங்குகள் கடும் சரிவை சந்தித்ததாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால், இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ₹5.5 லட்சம் கோடி நஷ்டம் அடைந்துள்ளனர். டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப், கோல் இந்தியா நிறுவனங்கள் கடும் சரிவை கண்டன.

News January 10, 2025

ஜஸ்ட் மிஸ்.. கோலியை ஓவர்டேக் பண்ணியிருப்பாங்க!

image

இன்றைய IREக்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி மந்தனா 41 ரன்களை எடுத்து, பல சாதனைகளை படைத்துள்ளார். *ODIகளில் வேகமாக 4000 ரன்கள் எடுத்த 15ஆவது வீராங்கனை. IND அளவில் 2ஆவது (முதலில் மிதாலி ராஜ்). *100க்கும் குறைவான இன்னிங்ஸ்களில் விளையாடி, இந்த சாதனையை செய்த 4ஆவது வீராங்கனை. IND அளவில் முதலிடம் (95 இன்னிங்ஸ்). *ஆடவர் கிரிக்கெட்டையும் சேர்த்தால், கோலிக்கு (93 இன்னிங்ஸ்) அடுத்த 2ம் இடத்தை பிடித்துள்ளார்.

News January 10, 2025

காலனித்துவ ஆதிக்க கல்வி முறையை மாற்ற NEP: ஆளுநர்

image

காலனித்துவ ஆதிக்க கல்வி முறையை மாற்றவே புதிய கல்விக் கொள்கை (NEP) கொண்டு வரப்படுகிறது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். தென்மண்டல பல்கலை., VC கருத்தரங்கில் பேசிய அவர், துரதிருஷ்டவசமாக நாம் நமது பாரம்பரியத்தை இழந்துவிட்டோம். மீண்டும் முந்தைய இந்திய கல்வி முறைக்கு மாற முயற்சி செய்கிறோம் என்றார். மேலும், மனப்பாடம் செய்தல், கற்றல், தேர்வு முறை போன்றவற்றில் இருந்து NEP மாறுபடுவதாகவும் தெரிவித்தார்.

News January 10, 2025

சினிமாவை விட்டு விலகும் விஜய், அஜித்

image

சினிமாவின் உச்சத்தில் இருக்கும் விஜய், அஜித் இருவரும் துறையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. விஜய் கட்சி தொடங்கிவிட்டதால், இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். அஜித் கார் ரேஸ்களில் ஆர்வம் காட்டுவதால் சில மாதங்கள் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதனால், தமிழ் சினிமாவின் தன்மை மாறவுள்ளது. நீங்க என்ன நினைக்குறீங்க?

News January 10, 2025

மக்களின் பசி தீர்க்க.. முழு சாப்பாடு ரூ.9 மட்டும்!

image

மகா கும்பமேளா தொடங்கவுள்ளதையொட்டி உ.பி. CM யோகி ஆதித்யநாத், ‘அம்மாவின் சமையலறை’ உணவகத்தை தொடங்கி வைத்தார். நந்தி சேவா சன்ஸ்தான் என்கிற NGOஆல் நடத்தப்படும் இந்த உணவகத்தில் ரூ.9-க்கு 4 ரொட்டி, பருப்பு, சோறு, இனிப்பு உள்பட ஃபுல் மீல்ஸ் வழங்கப்படுகிறது. 2000 சதுர அடியில் அமைந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 150 பேர் அமர்ந்து சாப்பிடலாமாம். ஏழை மக்கள் இதனால் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.

News January 10, 2025

Fire Mode-ல் இபிஎஸ் கேட்ட கேள்விகள்

image

திமுக கூறிய வாக்குறுதிகளில் 10-15% மட்டுமே நிறைவேற்றி உள்ளதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். பெட்ரோலுக்கு ₹5, டீசலுக்கு ₹3 ஏன் குறைக்கவில்லை? சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ₹100 மானியம் கொடுப்பதாக கூறியது என்னாச்சு? என அடுத்தடுத்து அவர் கேள்விகள் எழுப்பினார். சட்டப்பேரவையை 100 நாள்கள் நடத்துவதாக கூறினீர்கள், ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அப்படித்தான் நடக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 10, 2025

இந்தியாவில் இண்டர்ஸ்டெல்லார் ரீ-ரிலீஸ்

image

உலகளவில் பல கோடி ரசிகர்களை கொண்டிருக்கும் இண்டர்ஸ்டெல்லார் திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியாவில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. 2014ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் 10ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது படக்குழு உலகம் முழுக்க ரீ-ரிலீஸ் செய்தது. ஆனால் இந்தியாவில் புஷ்பாவின் தாக்கத்தால் இப்படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News January 10, 2025

ஆளுநரிடம் முறையிட்ட பிரேமலதா

image

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆளுநர் R.N.ரவியிடம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு நேரில் சென்ற அவர், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் ஆளுநருடன் கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குமுன் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் ஆகியோர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.

News January 10, 2025

WOW: இதுதான் அப்பா- மகள் பாசம்!

image

டெல்லி பெண் ப்ரியான்ஷி, தந்தைக்கு வேலை தேடி LinkedInல் போட்ட பதிவு, இதயத்தை தொட்டதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். Automobile துறையில் எந்தவொரு நிறுவனமும் பணியமர்த்த விரும்பும் கடின உழைப்பாளி தனது அப்பா, இந்த வாய்ப்பை நிறுவனங்கள் மிஸ் பண்ண வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பா சோஷியல் மீடியாவில் இல்லாததால், அவரது பெருமைமிகு மகளாக, தான் வேலை தேடுவதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!