news

News January 11, 2025

ஜனவரி 11: வரலாற்றில் இன்று

image

*1569 – முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டு இங்கிலாந்தில் பதிவு *1638 – புவியியலின் தந்தை நிக்கோலஸ் ஸ்டெனோ பிறப்பு *1922 – நீரிழிவு நோய்க்கான இன்சுலின் மருந்து முதன்முதலில் பயன்பாடு *1942 – இரண்டாம் உலகப்போர்: கோலாலம்பூரை கைப்பற்றியது ஜப்பான் *1972 – கிழக்கு பாகிஸ்தான் ‘வங்கதேசம்’ என பெயர் மாற்றம் *2022 – திரைப்பட தயாரிப்பாளர் முத்துராமன் மறைவு.

News January 11, 2025

போர் வீரர்களாக எங்களுடன் சேருங்கள்: ராகுல்

image

பிஹார் மாநிலம் பாட்னாவில் வரும் 18ஆம் தேதி அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு நடைபெறும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் அனைத்து உரிமைகளையும் பெற ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உண்டு எனவும், அரசியலமைப்பை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆகையால், தங்களுடன் சேருங்கள், நீதியின் போர் வீரராகுங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

News January 11, 2025

விவேகானந்தரின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

image

*அறிவு எனும் பரிசே இந்த உலகின் மிக உயர்ந்த பரிசு. *வேறுபாடு என்பது பெயரிலும் வடிவத்திலும் மட்டுமே உள்ளது. *இந்த உடலில் செயற்படும் அனைத்துச் சக்திகளும் உணவிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன, நாம் அதை அன்றாடம் காண்கிறோம். *இந்த உலகின் வரலாறு என்பது தங்களைத் தாங்களே நம்பிய ஒரு சில மனிதர்களின் வரலாறாகும். *யாரையும் குறை கூறாதீர்கள், அறிவற்றவர்கள் செய்யும் தவறைச் செய்யாதீர்கள்.

News January 11, 2025

வரும் 24இல் ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ ரிலீஸ்

image

‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படம், வரும் 24ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. யோகி பாபு, செந்தில், அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை ஷங்கர் தயால் இயக்கியுள்ளார். நகைச்சுவை கலந்த அரசியல் பேசும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சினிமா செய்திகள் குறித்து உடனுக்குடன் அறிய WAY2NEWS APPஐ டவுன்லோடு செய்யுங்கள்.

News January 11, 2025

ஓய்வு அறிவிக்கப் போகிறாரா ஜடேஜா?

image

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது டெஸ்ட் ஜெர்ஸியின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே டி20யில் இருந்து ஓய்வு பெற்றவர், தற்போது சர்வதேச டெஸ்ட்டில் இருந்தும் ஓய்வு அறிவிக்கப் போகிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்டிலும் அவர் சரியாக விளையாடவில்லை என்பதையும் இதற்கு காரணமாக கூறுகின்றனர்.

News January 11, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 145 ▶குறள்: எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. ▶பொருள்: இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

News January 11, 2025

ராகுல் காந்திக்கு ஜாமின்

image

சாவர்க்கரை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், ₹25,000 உத்தரவாத பத்திரத்தின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு புனே சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 2023ல் லண்டனில் சாவர்க்கருக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளை கூறியதாக, அவரது பேரன் சத்யகி சாவர்க்கர் புகார் அளித்தார்.

News January 11, 2025

இன்றைய (ஜன. 11) நல்ல நேரம்

image

▶ஜனவரி 11 ▶மார்கழி- 27 ▶கிழமை: சனி ▶ நல்ல நேரம்: 08:15 AM – 09:00 AM & 04.30 PM – 05.30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 09:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM ▶குளிகை: 06:00 AM – 07:30 AM ▶திதி: திரையோதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶நட்சத்திரம்: ரோஹிணி ▶சந்திராஷ்டமம்: சுவாதி

News January 11, 2025

திமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்: காங்கிரஸ்

image

ஈரோடு (கி) சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், CM ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தீவிர ஆலோசனைக்குப் பின் அத்தொகுதியை திமுகவுக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார். நாட்டில் ஜனநாயகம் மலரச் செய்ய திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

News January 11, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜன. 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

error: Content is protected !!