news

News January 11, 2025

ஜன. 22 பதிலாக ஏன் இன்றே 1ம் ஆண்டு கொண்டாடட்டம்?

image

அயோத்தி ராமர் பிரதிஷ்டை 2024 ஜன.22ம் தேதி நடைபெற்றது. 2025ல் இன்றே கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் சாஸ்திரப்படி, ஆங்கிலேயே நாட்காட்டிக்கு பதிலாக இந்த தேதி தேர்வாகியுள்ளது. ஒரே நேரத்தில் 10 மங்களகர யோகங்கள் உண்டாகும் பௌஷ் சுக்ல துவாதசி வருகிறது. 2024, ஜன.22ல் கூர்ம துவாதசி வந்ததால், அன்று பிரதிஷ்டை நடைபெற்றது. துவாதசி பாரம்பரியமாக இந்துக்களின் நம்பிக்கையின்படி, விஷ்ணுவிற்கு உகந்த நாளாகும்.

News January 11, 2025

வேட்பாளரை அறிவித்தது திமுக

image

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக அறிவித்தது திமுக. கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் இவர், 2011 முதல் 2016 வரை தேமுதிக சார்பில் MLAவாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தபோது இவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கட்சியில் இருந்து விஜயகாந்தால் நீக்கப்பட்டார்.

News January 11, 2025

ஆம் ஆத்மி MLA சுட்டுக்கொலை

image

பஞ்சாபில் ஆம் ஆத்மி MLA சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லூதியானா மேற்கு தொகுதி MLAவான குர்பிரீத் கோகியின் அறையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து, துப்பாக்கி குண்டு காயங்களுடன் இருந்த அவரை உடனடியாக மீட்டு ஹாஸ்பிட்டல் அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

News January 11, 2025

ஈரோடு கிழக்கில் போட்டியிடப் போவது யார்?

image

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் வி.சி.சந்திரகுமார் (அ) மாவட்ட துணைச் செயலாளார் செந்தில்குமாருக்கு வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருமே அத்தொகுதியில் செல்வாக்கு மிக்கவர்கள். அதனால், அவர்களில் ஒருவரை இன்று திமுக வேட்பாளராக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 11, 2025

வெற்றியின் ரகசியம்…..இந்த 5 டிப்ஸில் உள்ளது!!

image

* பிறர் சொல்லியோ, பிறரை வைத்தோ உங்களின் இலக்கை நிர்ணயிக்காதீர்கள். நீங்கள் தீர்மானியுங்கள் *வாழ்வில் நடப்பது நல்லதோ, கெட்டதோ அனைத்திற்கும் நீங்களே பொறுப்பு என்பதை மறவாதீர்கள் *எப்போதும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக மனதில் கொள்ளுங்கள். நடக்கும் சிறு சிறு தோல்விகளால் துவண்டு விட வேண்டாம் *என்றைக்கும் புது விஷயங்களை கற்று கொள்வதை நிறுத்தி விடாதீர்கள் *ரிஸ்க் எடுப்பதற்கு தயங்க வேண்டாம்.

News January 11, 2025

25 ஆண்டுகால கனவை நிறைவேற்றியது விசிக

image

திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ‘அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி’ என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது. அதேபோல, அக்கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1999இல் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு தேர்தல் களத்துக்கு வந்த விசிகவின் 25ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறியுள்ளது.

News January 11, 2025

இந்த ஆட்டின் விலை ஜஸ்ட் ₹13.6 லட்சம்தான்!

image

விலையை கேட்டதும் ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம், அது உண்மைதான். இது சாதாரண ஆடு இல்லை. இதனுடைய சிறப்பம்சத்திற்காகவே இந்த விலை. இந்த ஆடு மற்ற ஆடுகளைக் காட்டிலும் மிக நீளமான காதுகளை கொண்டிருக்கிறது. அதற்காகவே, சவுதி அரேபியாவில் நடந்த ஏலத்தில், 60,000 சவுதி ரியால்ஸுக்கு (இந்திய மதிப்பில் ₹13.60 லட்சம்) விலை போயுள்ளது. இதன் காரணமாகவே, இந்த ஆட்டின் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

News January 11, 2025

விமானம் விழுந்ததில் பைக்கில் சென்றவர்கள் பலி

image

கென்யாவில் சிறிய ரக விமானம் விழுந்ததில் பைக்கில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். மலிண்டி மாகாணத்தில் சிறிய ரக விமானத்தில் விமானி உட்பட 3 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கோளாறு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் நெடுஞ்சாலையில் விழுந்தது. இதில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். அதேவேளையில், விமானத்தில் பயணித்த மூவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

News January 11, 2025

2024தான் பூமியின் வெப்பமான ஆண்டு

image

2024ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டு என சர்வதேச வானிலை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் 2015 பருவநிலை ஒப்பந்தம் முதல்முறையாக மீறப்பட்டுள்ளது. அதாவது, 1800இல் தொழில்புரட்சி தொடங்குவதற்கு முன்பிருந்த புவியின் வெப்பநிலைக்கும் தற்போதைய வெப்பநிலைக்கும் உள்ள வேறுபாடு 1.5 டிகிரிக்குள் இருக்க வேண்டுமென சர்வதேச நாடுகள் ஒப்பந்தம் செய்தன. ஆனால், கடந்த ஆண்டு 1.6 டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது.

News January 11, 2025

முடங்கிவிடாமல் எழுந்து வருவேன்: ஜெயம் ரவி ❤️

image

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னையால் சற்று சோர்வடைந்துள்ள ஜெயம் ரவி, தான் மீண்டு வருவேன் என பேசியிருக்கிறார். இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கடந்த 2014இல் தனக்கு தொடர் தோல்வியாக அமைந்த போது, மிக கஷ்டமாக இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டு 3 ஹிட் படம் கொடுத்தேன். நான் திரும்ப எழுந்ததுதான் அதற்கு காரணம். அதேபோல, இந்த ஆண்டும் முடங்கி விடாமல் எழுந்து வருவேன் எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!