India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளால் உருவான சட்டப்பேரவையில் அபத்தமான காரணங்களைக் கூறி ஆளுநர், தனது உரையை நிராகரிப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை எனச் சாடிய அவர், நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் அளிக்கும் உற்சாக வரவேற்பே அதற்குச் சான்று என்றும் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கின் ஆதாரங்களை CM ஸ்டாலின், சபாநாயகரிடம் வழங்கினார். சட்டப்பேரவையில் நேற்று, இந்த வழக்கில் புகார் அளிக்கப்பட்ட 24 மணிநேரத்தில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக இபிஎஸ் பேசினார். அப்போது, குறுக்கிட்ட ஸ்டாலின், 12 நாட்களுக்கு பிறகே FIR பதிவு செய்யப்பட்டதாகவும், நான் சொல்வதில் ஏதேனும் தவறு இருந்தால் நீங்கள் சொல்லும் தண்டனையை ஏற்றுக் கொள்வதாகச் சவால் விட்டிருந்தார்.
விஜய் குறித்து கேள்வி எழுப்பியதற்காக தவெகவினர் தனக்கு மிரட்டல் விடுப்பதாக இயக்குநர் அமீர் குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சியின் கொள்கைத் தலைவர் பெரியாா் குறித்த சீமானின் தரம் தாழ்ந்த விமர்சனத்தை TVKவும், அதன் தலைவர்களும் வேடிக்கை பார்ப்பதாக சமூகவலைதளத்தில் விமர்சித்திருந்தார். இதனால், தனக்கு மிரட்டல் வருவதாக கூறிய அமீர், ‘தம்பிகளின் மிரட்டலுக்கு அடிபணியும் அண்ணன் நான் இல்லை’ என்றும் பதிவிட்டுள்ளார்.
நாக சைதன்யா – சமந்தா நினைவுகளை #ChaiSam இல் ரசிகர்கள் மீண்டும் அசைபோடுகின்றனர். சமந்தா உடனான காதலை நாக சைதன்யா அவரது வீட்டில் சொல்லப் பயந்தபோது ‘நீ சொல்லாவிட்டால் உன் கையில் ராக்கி கட்டி அண்ணனாக்கிவிடுவேன்’ என சமந்தா செல்லமாக மிரட்டினாராம். இதனை நினைவுகூறும் ரசிகர்கள் இவ்வளவு நல்ல ஜோடி பிரிந்துவிட்டதே என தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர். உங்க கமெண்ட் என்ன?
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மலேசியாவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கெனவே இலங்கையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட நிலையில், மலேசியாவிலும் மே மாதம் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அந்நாட்டு MP சரவணன் தெரிவித்துள்ளார். இதற்காக, அங்குள்ள காளைகள் தயார் செய்யப்படுகின்றன. ஒரு காலத்தில் மலேசியா வரை ஆட்சி செய்தவன் தமிழன். இன்றும் நம் புகழ் பரவட்டும்.
பொங்கல் விடுமுறையையொட்டி விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரயில் கட்டணம் போல அல்லாமல், விமானக் கட்டணங்கள் தேவைக்கேற்ப மாறுபவை. ஆகையால், இன்றும் நாளையும் சென்னையில் இருந்து மதுரை செல்ல ₹18,000, சென்னை – கோவை ₹12,000, சென்னை – தூத்துக்குடி ₹24,000 என உயர்ந்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கான டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது.
முன்பதிவில்லாத டிக்கெட்டை UTS செயலியில் எடுத்துவிட்டீர்கள் என்றால், 3 மணிநேரத்திற்குள் ரயிலில் ஏறிவிட வேண்டும். அதன் பின்னர் டிக்கெட் காலாவதியாகிவிடும். அப்படி, காலாவதியான பிறகு பயணிப்பது, டிக்கெட் இன்றி பயணிப்பதற்கு சமம். இதனை டிக்கெட் பரிசோதகர் கண்டறிந்துவிட்டால் இந்திய ரயில்வே விதிமுறையின்படி ₹250 அபராதம் விதிக்கப்படும். அதே போல, பயணத்திற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். SHARE IT.
பெரியார் குறித்து எதிர்மறையாகப் பேசி வரும் சீமானை முரசொலி பத்திரிகை கழிசடை என சாடியுள்ளது. மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒருவனுடன் போராட முடியாது என்ற பெரியாரின் கொள்கையை சுட்டிக்காட்டி, வாயை அடகு வைத்து வாழும் புதுப் பிராணி எனவும், ஒரு விஜயலட்சுமிதான் வெளியில் வந்துள்ளார். அவரையே இந்த மானங்கெட்டவனால் தாங்க முடியவில்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை TN அரசு வெளியிட்டுள்ளது. அதில், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ₹625 ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளது. 151 முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ₹195ம், 91 முதல் 151 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு ₹85ம் ஊக்கத்தொகையாக வழங்க ஆணையிட்டுள்ளது.
தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கனில் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை சுட்டிக்காட்டி பிரிட்டன், தென்னாபிரிக்கா நாடுகள் ஆப்கன் ஆடவர் அணியை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், உலகளவில் கிரிக்கெட்டை விரிவுபடுத்துவதே முதன்மையான நோக்கமாக கொண்டிருக்கும் ICC-க்கு, தடை விதிக்கும் திட்டத்தில் இல்லை என்றே கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.