India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனது தாயார் கமலா காமேஷ் நலமுடன் இருப்பதாகவும், தனது மாமியார் ரஷிதா பானு (72) தான் இறந்துவிட்டதாகவும் நடிகை உமா ரியாஸ்கான் தெரிவித்துள்ளார். அதாவது, மறைந்தது பிரபல வில்லன் நடிகரான ரியாஸ் கானின் தாயார் தான். ஆனால், ஊடகங்கள் இச்செய்தியை அவரது மனைவி உமா ரியாஸ்கானின் தாயார், நடிகை கமலா காமேஷ் இறந்துவிட்டதாக தவறுதலாக வெளியிட்டுள்ளன.
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தனி அலுவலர்கள் நியமனத்திற்கான மசோதாவைப் பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். அப்போது, காலம் தாழ்த்தாமல் விரைவாக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் வலியுறுத்தினார். பின்னர், பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக ஆட்சியில் 11 முறை தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதாகக் கூறினார்.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ராவை 2024ம் ஆண்டின் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராக அமெரிக்காவின் Track and Field பத்திரிக்கை தேர்வு செய்துள்ளது. இந்த தரவரிசையில் 2 முறை உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸை நீரஜ் சோப்ரா முந்தியுள்ளார். இவர் 2023ம் ஆண்டின் ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.
நிதி இல்லாத காரணத்தால் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருணை உள்ளது. ஆனால், போதுமான நிதி இல்லை எனக் குறிப்பிட்ட அவர், நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால்,மாநில நிதி ஆதாரம் தெரியாமல், பொய்யான வாக்குறுதிகளை திமுக அள்ளி வீசியதாக எதிர்க்கட்சிகள் சாடி வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் கிடைக்க வழிவகை ஏற்படும். ஓய்வுபெறும் போது கடைசி 12 மாதங்களில் பெற்ற சராசரி Basic Salaryஇல் 50% உறுதியாகக் கிடைக்கும். பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன் காதல் என தன்னை தொடர்புபடுத்தும் வதந்திகளை RJ மஹ்வாஷ் மறுத்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “கடந்த 2-3 நாட்களாக பரவி வரும் ஆதாரமற்ற பொய்யான செய்திகளால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். பிறரது தனிப்பட்ட பெயரைக் காப்பாற்ற எந்த PR குழுவும் எனது பெயரை பயன்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.
<<15123483>>மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் ரத்தானதற்கு<<>> அண்ணாமலை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். மோடி அரசு நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும்போது திமுக அரசு அதனை பின்னோக்கி இழுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனை எதிர்த்து, ஜனவரி 20ஆம் தேதி அருப்புக்கோட்டையில் பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பொங்கலுக்கு வெளியாவதாக கூறப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டு ரசிகர்களை ஏமாற்றிய அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் வரும் 23-ஆம் தேதி வெளியீடு என போஸ்டர் ஒன்று டிரெண்டாகியுள்ளது. இந்தத் தகவல் லைகா தரப்பில் இருந்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அஜித் ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர். அஜித், திரிஷா, அர்ஜுன் என பலர் நடித்துள்ள படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
விசிகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், அக்கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக CM ஸ்டாலின் தனது X பதிவில், விசிகவை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அறிவித்ததை அறிந்து மகிழ்வதாக கூறியுள்ளார். மேலும், திருமாவின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 உயர்ந்துள்ளது. நேற்று ₹58,280க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹58,520க்கு விற்பனையாகிறது. நேற்று ₹7,285ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், இன்று ₹30 உயர்ந்து ₹7,315ஆக விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ₹101க்கு விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.