India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
HMPV வைரஸ் தொற்று பீதியை உருவாக்கிய நிலையில், மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் விநோத வைரஸ் தொற்று பரவி வருகிறது. ‘டக்லா வைரஸ்’ எனப்படும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், அடுத்த 3 நாள்களில் முடியெல்லாம் கொட்டி தலை வழுக்கை விழுகிறதாம். பெண்கள், குழந்தைகள், முதியவர் என எல்லோருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது, அறிகுறிகள் என்ன என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
பொங்கலுக்கு ஊருக்கு போகும் போது, வீட்டை பூட்டி விட்டு எப்படி வெளியூர் போவது என தயக்கமா? வீட்டின் அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் சொன்னால் போதும், அவர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள். அனைத்து போலீஸ் ஸ்டேஷனிலும் ‘பூட்டியிருக்கும் வீடுகள்’ என்ற பதிவேடு உள்ளது. உங்கள் வீட்டின் தகவல், புறப்படும் – திரும்பும் நாள், விலை மதிப்பான பொருட்கள் உள்ளதா? போன்றவற்றை பதிவு செய்தால் போதும். SHARE IT
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17ஆம் தேதி தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருகிறார். நாடு முழுவதும் பாஜகவின் மாநிலத் தலைவர்களை மாற்றம் செய்ய கட்சித் தலைமை தீவிரம் காட்டி வருகிறது. அதோடு, அகில இந்திய தலைவரும் மாற்றம் செய்யப்படவுள்ளார். தமிழக பாஜகவிற்கு தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் அல்லது வானதி சீனிவாசன் தலைவராகலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர்களை நியமிக்கும் <<15125235>>சட்ட மசோதா<<>> மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு சட்டத் திருத்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேறின. பின்னர், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்.. என்ற MGR பாடலை சுட்டிக்காட்டி TN அரசை விஜய் விமர்சித்துள்ளார். நீட் ரத்து ரகசியம் தங்களுக்குத் தெரியும் என பிரச்சாரம் செய்த ஆட்சியாளர்கள், தற்போது அந்த அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதாக கூறுவது ஏமாற்றும் செயல் என்று சாடியுள்ளார். எந்தப் பொய்யையும் சொல்லி, மக்களை ஏமாற்றலாம் என்று கனவு காணும் ஆட்சியாளர்களின் எண்ணம், வரும் காலங்களில் ஈடேறாது என்றும் எச்சரித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா என பலர் நடித்து வெளியான கேம் சேஞ்சர் படம் முதல் நாளில் ₹186 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிங் சைஸ் எண்டர்டெயின்மெண்ட் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியன் படமாக வெளிவந்துள்ள படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
‘Pregnant Service’ என்ற பெயரில் பீகாரில் நடைபெற்ற பித்தலாட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிள்ளைகளற்ற பெண்ணை கர்ப்பமாக்க வேண்டும் என்றும் அதற்கு சன்மானமாக ₹10 லட்சம் வழங்கப்படும் என்றும் ஃபோன் கால் வரும். அதனை நீங்கள் ஏற்றுக் கொண்டால், ஆதார், போட்டோ ஆகியவற்றை வாங்கிக் கொண்டு ரெஜிஸ்டிரேஷன் மற்றும் ஹோட்டல் ரூமுக்கு பணம் கேட்பார்கள். அதை நீங்கள் கொடுத்துவிட்டால் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.
பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் ஜி.எஸ்.டி சாலையில் நேற்று முதல் கார்கள் சாரை சாரையாக வரிசை கட்டி செல்கின்றன. பேருந்துகளும் ரயில்களும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. விமானக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. நீங்க சொந்த ஊருக்கு போயிட்டீங்களா?
அடுத்த 2 ஆண்டுகளில் கையகப்படுத்தியுள்ள நிலத்தை சீர்செய்தும், புதிதாக நிலங்களை கையகப்படுத்தியும் ஏழை, எளிய பட்டியலின மக்களுக்கு 1 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன், திமுக அரசு பதவியேற்ற பின், ஏழை, எளிய பட்டியலின மக்களுக்கு 2,67,637 வீட்டு மனைகள் வரன் முறைப்படுத்தி இ-பட்டா வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவிக்கும் நபர்களை கண்டறிய, சில்வர் நோட்டீஸை INTERPOL அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில், இந்தியாவும் இணைந்துள்ளது. இதன் மூலம் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்களின் கருப்புப் பணம் குறித்த தகவலை பகிர்ந்துகொள்ள முடியும். அத்துடன் நடவடிக்கை எடுக்க உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிடம் 10 பொருளாதார குற்றவாளிகளின் பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.