news

News January 11, 2025

ஒரே நேரத்தில் அஜித்தின் சர்ப்ரைஸூம், அதிர்ச்சியும்

image

துபாயில் நடிகர் அஜித் பேசும்போது, ஜனவரியில் ஒருபடமும் (விடாமுயற்சி), ஏப்ரலில் ஒரு படமும் (குட் பேட் அக்லி) வெளியாகும் என்று சர்ப்ரைஸ் கொடுத்தார். இதனால், மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற ரசிகர்கள் #AjithKumarRacing, #VidaaMuyarachi ஆகிய ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்தனர். ஆனால், அவர்களின் மகிழ்ச்சி கொஞ்ச நேரம் கூட நிலைக்கவில்லை. தற்போது கார் ரேஸில் இருந்து விலகுவதாக அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

News January 11, 2025

இடைத்தேர்தல்: தேமுதிகவும் புறக்கணிப்பு

image

அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. திமுக சார்பில் சந்திரகுமார் போட்டியிடுகிறார். இதனால், அதிமுக ஆதரவுடன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், போட்டியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தொகுதியில் கடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வெறும் 1432 வாக்குகள் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.

News January 11, 2025

தினமும் கழிப்பறையில் அழுவேன்: பெண் CEO ஓபன் டாக்

image

வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை என L&T நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன் கூறியதை எடெல்வைஸ் நிறுவனத்தின் CEO ராதிகா குப்தா விமர்சித்துள்ளார். தான் வேலைக்கு சேர்ந்த புதிதில் வாரத்திற்கு 100 மணிநேரம் வேலை செய்ததாகவும், இதனால் தினமும் கழிப்பறையில் அழுததாகவும், ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கடின உழைப்பு என்பது வேலை நேரத்தை பொறுத்தது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 11, 2025

இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். திமுகவினர் ஆட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள். பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள், வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஒருவேளை தேமுதிக போட்டியிட்டால், அதிமுக ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 11, 2025

கடன் பெற்றே மாதம் ₹1000 : இபிஎஸ் சாடல்

image

பல்வேறு வகைகளில் கடன் பெற்றே மாதம் ₹1000 மகளிர் உரிமைத்தொகையை ஆளும் திமுக கொடுப்பதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். வாங்கும் கடனை திரும்பிச் செலுத்தும் திட்டமும் அரசிடம் இல்லை என்று சாடிய அவர், ₹1000 கொடுத்து உதவி செய்வதாக ஆளுங்கட்சி நாடகம் போடுகிறது என்றும் விமர்சித்தார். மேலும், திமுக ஆட்சிக்காலத்தில் அரிசி, பருப்பு, எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.

News January 11, 2025

New Ration கார்டுதாரர்களுக்கு விரைவில் ₹1000

image

பொது விநியோகத்திட்ட குறைத்தீர்க்கும் நாள் முகாம்கள் நடத்தப்பட்டு, புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் 1,83,610 பேருக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ₹1000 வழங்கப்படும் என தெரிகிறது.

News January 11, 2025

திமுக இரட்டை வேடம்: இபிஎஸ்

image

நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்ததும் நீட்டை ரத்து செய்வோம் என ஸ்டாலினும், உதயநிதியும் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதுவரை ரத்து செய்ய செய்யவில்லை. எப்போது ரத்து செய்யப்படும் என்பது குறித்து முதல்வர் உரிய விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

News January 11, 2025

காலாவதியான குளுக்கோஸால் கர்ப்பிணி பலி

image

மே.வங்கத்தில், அரசு ஹாஸ்பிடலில் காலாவதியான குளுக்கோஸ் ஏற்றப்பட்டதால் கர்ப்பிணி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 4 கர்ப்பிணிகள் ஆபத்தான நிலையில், சிகிச்சையில் பெற்று வருகின்றனர். இதுபற்றி அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஹாஸ்பிடலில் குளுக்கோஸ் ஏற்றும்போது, டாக்டரை நாம் முழுமையாக நம்பியே அதற்கு உடன்படுகிறோம். அதிலும் இப்படி ஒரு பிரச்னையா என நெட்டிசன்கள் கேட்கின்றனர். ALERT!

News January 11, 2025

கூடுதல் கட்டணமா… உடனே இந்த நம்பருக்கு அழைக்கவும்

image

பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களை 1800-425-6151 ( Toll Free Number) மற்றும் 044-24749002, 044 -26280445, 044-26281611ஆகிய எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம். அதேபோல், அரசு பேருந்து இயக்கம் குறித்து, 9445014436 என்ற தொலைபேசி எண்ணில் (24 ×7) மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

News January 11, 2025

ஈரோடு கிழக்கில் விஜயகாந்த் மகன் போட்டி?

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமான சந்திரகுமார் போட்டியிடுகிறார். இதனால், அவருக்கு எதிராக தங்கள் கட்சி வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று இபிஎஸ்-யிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாராம். இபிஎஸ் இசைவு தெரிவித்தால், விஜய பிரபாகரன் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!