India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று (நவ.1) கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹4.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ₹1,750-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ₹868.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.

அதிமுகவிலிருந்து நேற்று Ex அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டார். பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அதிமுகவை தன்வசப்படுத்திய EPS, சசிகலா, OPS, TTV உள்பட பல முக்கிய புள்ளிகளை நீக்கியுள்ளார். 2017-ல் CM ஆனது முதல் EPS நீக்கிய அதிமுக பெரும்புள்ளிகள் யார் யார் என்று, மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்கள்.

பித்ரு சாபத்திற்கு ஆளானவர்கள் & வருடம் ஒருமுறை கூட குலதெய்வ வழிபாட்டை செய்ய முடியாதவர்கள், வாழைத்தண்டு திரியால் தீபம் ஏற்றுவது பாவங்களில் இருந்து விடுபட செய்யும் என கூறப்படுகிறது. இந்த கடைகளிலேயே கிடைக்கும். இல்லையென்றால், வீட்டிலேயே மரத்தில் இருந்து வாழைத்தண்டை பிரித்து எடுத்து, நாரை வெயிலில் காய வைக்கவும். இந்த காய வைத்த நாரை கொண்டு அகல் தீபத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் போடுங்கள்.

சில படங்களில் கதாநாயகிகளை விட, அவர்களுடைய தோழிகளாக வரும் துணை நடிகைகள் கவனம் ஈர்ப்பர். அப்படி, ‘ஏழாம் அறிவு’ படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக வந்தவர் தன்யா பாலகிருஷ்ணா. இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், வாய்ப்பு கிடைத்தால் சூர்யா, பவன் கல்யாண், ரன்பீர் கபூர் ஆகியோருடன் நடிப்பேன் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். சூர்யாவுடன் நடித்திருந்தாலும், சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை.

இயக்குநரும், இசையமைப்பாளருமான பலாஷ் முச்சலை 6 ஆண்டுகளாக ஸ்மிருதி மந்தனா காதலித்து வருகிறார். இதனிடையே, விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக பலாஷ் அறிவித்தார் இந்நிலையில், இவர்களது திருமணம், நவ.20-ல் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மிருதியின் சொந்த ஊரான MH-ன் சங்க்லியில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு திருமணம் செய்வாரா ஸ்மிருதி?

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதால், இன்று (நவ.1) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மழை விடுமுறையை ஈடுசெய்ய, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் முழுநேரம் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடுகள், பள்ளிகளுக்கு வெளியே இயற்கை சூழல்களில் குழந்தைகள் விளையாடுவது, அவர்களின் உடல் & மனநலத்துக்கு பெரும் நன்மை செய்வதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வில் உறுதியாகியுள்ளது. `வெளியே’ என்பது கட்டடத்துக்கு வெளியே என்பதல்ல. மரம், செடிகள் மற்றும் இயற்கை தன்மை மிகுந்த இடங்களாக இருக்க வேண்டும் என்கின்றனர். ஆகவே, எப்போதும் ஸ்மார்ட்போனுடன் தலை கவிழ்ந்திருக்கும் நம் குழந்தைகளின் நிலையை மாற்ற வேண்டும்.

திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தால், அது வேலைக்கு ஆகாது என்பார்கள் என்று சம்யுக்தா கூறியுள்ளார். சினிமாவில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே அரிது என்ற அவர், நிறம் பார்ப்பார்கள், திருமணம் ஆகிவிட்டதா என்றும் கேட்பார்கள் என தெரிவித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மதராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற PM மோடியின் பேச்சு, தமிழர்களின் மீதான வன்மத்தின் வெளிப்பாடு என்று சீமான் விமர்சித்துள்ளார். திமுகவினர் பிஹார் மக்களை துன்புறுத்துவதாக மோடி கூறியதற்கு, திமுக கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அற்ப அரசியல் லாபத்திற்காக தமிழர்கள் மீது வரலாற்று பெரும் பழியை மோடி சுமத்தியுள்ளதாக சீமான் சாடியுள்ளார்.

*உணவுகளில் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது முட்டை தான். வைட்டமின்கள் B5, B2, B12, B6, K, E, மற்றும் D, கால்சியம், துத்தநாகம், செலினியம், ஃபோலேட், பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய நுண்சத்துகள் உள்ளன. *முட்டை நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. *புரதமும், பிற சத்துகளும் நிறைந்திருந்தாலும் குறைவான கலோரி கொண்டது. *உடனடி ஆற்றலை கொடுக்கும். இதிலுள்ள லூட்டின், வைட்டமின் A சத்துகள் பார்வை திறனை அதிகரிக்கும்.
Sorry, no posts matched your criteria.