India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆப்பிள் நிறுவன CEO டிம் குக், 2024-ல் ஆண்டு சம்பளமாக ரூ.643 கோடி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ரூ.544 கோடியாக இருந்த அவரது சம்பளம் இம்முறை 18% உயர்ந்துள்ளது. இதில் அடிப்படை சம்பளமாக ரூ.26 கோடி, ஷேர்ஸ் மூலமாக ரூ.500 கோடி, மற்ற ஆதாயங்கள் மூலம் ரூ.117 கோடியும் பெற்றிருக்கிறார். 2022-ல் அவரின் ஊதியம் ரூ.860 கோடி. ஆனால், 2023-ல் தன் சம்பளத்தை 40% அளவுக்கு அவர் குறைத்துக் கொண்டார். உங்க சம்பளம் எவ்வளவு?
பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் பல அடக்குமுறைகளை கடந்து 900வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின், முதல்முறையாக இதுபோன்ற முக்கிய பிரச்னைகளில் மக்களுக்கு ஆதரவாக விஜய் நேரடியாக களத்தில் இறங்கவுள்ளார். ஜன.19 (அ) ஜன.20இல் அனுமதி தரக்கோரி தவெக சார்பில் போலீசாரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காவது இபிஎஸ் வருவாரா? என்று அமைச்சர் எ.வ.வேலு கிண்டல் செய்துள்ளார். இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல; பழனிசாமி தலைமை அசிங்கப்படக்கூடாது என செய்யப்பட்ட ஏற்பாடு என்று விமர்சித்த அவர், பாஜக ஓட்டு வங்கிக்கு எந்த சேதாரமும் வந்துவிடக்கூடாது என்பதால் இபிஎஸ் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று கடுமையாக சாடினார்.
இந்திய ராணுவத்திலேயே மிக ஆபத்தான ரெஜிமென்ட் ஒன்று உள்ளது. அதுதான் ‘கோர்க்கா ரெஜிமென்ட்’. எதிரிகளை தோற்கடிக்கும் எண்ணத்தில் மற்ற படைகள் புறப்படும் என்றால், களத்தில் சாகும் ஆசையுடன் செல்பவர்கள் கோர்க்காக்கள். இந்திய எல்லையில் கால் வைக்க மற்ற நாடுகள் பயப்படுவதற்கு கோர்க்காக்களும் ஒரு காரணம். ‘ஜெய் மாகாளி; அயோ கோர்க்காளி’ என்கிற அவர்களின் கோஷம் இன்றைக்கும் பிற நாடுகளை நடுங்க செய்து கொண்டிருக்கிறது.
கொளத்தூரில் CM ஸ்டாலின் சமத்துவப் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அப்போது பேசிய அவர், பொங்கலை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதால், 17ஆம் தேதியும் கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. இதை ஒத்துக்கொள்கிறேன், மிக விரைவில் நிறைவேற்றாத வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்தார்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பே மதுரை உள்ளிட்ட பல இடங்களில் வாழைத்தார்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி, சீர்வரிசை செய்வது, கோயில் பூஜைகளுக்கு அதிகளவு வாழைத்தார் தேவைப்படுகிறது. ஆனால், அதற்கு தகுந்தவாறு உற்பத்தியும், வரத்தும் இல்லை. இதனால், கடந்த வாரம் ₹200, ₹300க்கு விற்ற வாழைத்தார் நேற்று ₹600க்கு விற்கப்பட்டது. ஆனால், இன்று ஒரே நாளில் ₹1150ஆக விலை உயர்ந்துள்ளது.
விக்கிரவாண்டியை தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணித்துள்ளது. செல்வாக்கு உள்ள மேற்கு மாவட்டத்திலேயே அதிமுக போட்டியிடாது திமுகவின் வளர்ச்சியை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இன்னும் ஓராண்டில் சட்டமன்ற தேர்தல் வருகிறது. இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தலை புறக்கணிப்பது தொண்டர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். இது தெரிந்தும் EPS இப்படியொரு முடிவை எடுத்தாரா என்ற கேள்விகள் எழுகிறது.
‘உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா’ என பாட வேணும்னா நல்லா இருக்கும். ஆனா சூரிய ஒளியே படாமல் இருந்தால், 1 வாரத்தில் விட்டமின் டி, மெலடோனின் குறையும். தூக்கம் தொலையும் என்கிறார்கள் டாக்டர்ஸ். இதுவே நீடித்தால் சோர்வு, மன அழுத்தம், பதட்டம், தசை, மூட்டு பலவீனம் என உடலும் மனதும் படாதபாடு படும். இதிலிருந்து தப்பிக்க விட்டமின் டி உணவு சாப்பிடுவதும், வெயில் படுமாறு 20-30 நிமிடம் இருப்பதும் போதுமானது.
ஆப்பிள் நிறுவனம் 2024 Sep.இல் ‘ஐபோன் 16’ சிரீஸை வெளியிட்டது. இந்த மாடல் ஐபோன்களில் சார்ஜ் ஏற்றும்போது ஷாக் அடிப்பதாக பயனர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். 16 சிரீஸ் போன்களில் ஆக்ஷன் பட்டன், புதிதாக வைக்கப்பட்ட கேமரா பட்டன் பகுதிகளில் ஷாக் அடிப்பதாகவும், சார்ஜில் இருந்து நீக்கிவிட்டால் நார்மல் ஆகிவிடுவதாகவும் கூறுகின்றனர். இது குறித்து, ஆப்பிள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. நீங்கள் ஐபோன் பயனரா?
2025 புத்தாண்டின் முதல் சனிப்பிரதோஷம் இன்று. மற்ற பிரதோஷங்களை காட்டிலும், சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷமான சனிப்பிரதோஷத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த நாளில் காலை முதல் மாலை 6 மணி வரை விரதம் இருப்பது வழக்கம். அவ்வாறு விரதம் இருந்து மாலையில் சிவப்பெருமானை வழிபட்டால், கடந்த காலங்களில் செய்த பாவங்கள் நீங்கும். ஆரோக்கியம், செல்வம், ஞானம் பெருகும். அனைத்து வகையான இன்பங்களும் கிடைக்கும்.
Sorry, no posts matched your criteria.