news

News January 12, 2025

80 மாணவிகளின் சட்டையை கழட்டி அனுப்பிய பிரின்சிபல்

image

ஜார்கண்டில் 80 மாணவிகளின் சட்டையை கழட்டி, தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீட்டிற்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தேர்வு முடிந்ததும், மாணவிகள் ‘Pen Day’ கொண்டாடியுள்ளனர். இதை கண்டித்து தண்டனை கொடுக்க, பிரின்சிபல் இப்படி நடந்து கொண்டிருக்கிறார். சட்டை இல்லாமல் வெறும் பிளேசருடன் வந்த மகள்களை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 12, 2025

INDIA கூட்டணி என்ன செய்யப் போகிறது?

image

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டியிடப் போவதாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த அம்மாநில சட்டமன்ற தேர்தலில், INDIA கூட்டணி படுதோல்வியை சந்தித்ததை அடுத்து, சிவசேனா தற்போது இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸை ஓரம் கட்டிவிட்டு, டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

News January 12, 2025

இன்றைய (ஜன. 12) நல்ல நேரம்

image

▶ஜனவரி 12 ▶மார்கழி- 28 ▶கிழமை: ஞாயிறு ▶ நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 03.30 PM – 04.30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 AM – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 PM – 04:30 PM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶நட்சத்திரம்: மிருகசீரிடம் ▶சந்திராஷ்டமம்: விசாகம்.

News January 12, 2025

ஆனந்த் மஹிந்திராவின் தரமான ரிப்ளே

image

எவ்வளவு நேரம் தான் மனைவியை பார்த்துக் கொண்டே இருப்பீர்கள், வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்யுங்கள் என L&T நிறுவன சேர்மன் சுப்ரமணியன் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஆனந்த மஹிந்திரா, மனைவியை பார்த்துக் கொண்டிருப்பதில் தனக்கு அலாதி பிரியம் எனவும், எவ்வளவு நேரம் வேலை செய்கிறோம் என்பது முக்கியமல்ல, தரமாக வேலை செய்வதே முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 12, 2025

ஊரே பற்றி எரிந்தாலும் கம்பீரமாக நின்ற வீடு

image

கலிபோர்னியா காட்டுத்தீயில் அனைத்தும் நாசமாகி வருகிறது. லாஸ் ஏஞ்செலஸ் நகரில் ஓரிடத்தில், சுற்றிலும் வீடுகள் எரிந்து சாம்பலாக, ஒரு வீடு மட்டும் கம்பீரமாக பளிச்சென சேதமின்றி நிற்கிறது. ரூ.78 கோடி மதிப்புள்ள தன் 3 மாடி வீடு தப்பியது ஓர் அதிசயம் என்று சொல்லும் அதன் ஓனர் டேவிட் ஸ்டீனர், fire proof கூரை, stucco மற்றும் கல் சுவர்கள், 50 அடி ஆழ ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் தான் அதன் பின்னுள்ள ரகசியம் என்கின்றார்.

News January 12, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜன. 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News January 12, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜன. 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News January 12, 2025

ரொமான்டிக் GIRL FRIEND தேடுறீங்களா..?

image

ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் இல்லையே என வருத்தப்படுபவர்களுக்காக புதிய ஏஐ ரோபோவை தயாரித்துள்ளது கனடாவின் ரியல் பொடிக்ஸ் நிறுவனம். பார்ப்பதற்கும், தொடுவதற்கும் அச்சு அசல் இளம்பெண்ணை போலவே உள்ள இந்த ரோபோ, உங்களுடன் ஜாலியாக பேசும். சோகமாக இருந்தால் ஆறுதல் கூறும், அரவணைக்கும். ரொமாண்டிக் பார்ட்னராகவும் இருக்கும். ஆண்களுடன் மிக நெருக்கமாக இது பழகுமாம். என்ன விலைதான் கொஞ்சம் இடிக்குது. ரூ.1.50 கோடியாம்.

News January 12, 2025

ராசி பலன்கள் (12-01-2025)

image

➤மேஷம் – கவனம் ➤ ரிஷபம் – பரிசு ➤மிதுனம் – மகிழ்ச்சி ➤கடகம் – சிரமம் ➤சிம்மம் – இன்பம் ➤கன்னி – பக்தி ➤துலாம் – ஆதரவு ➤விருச்சிகம் – புகழ் ➤தனுசு – சோர்வு ➤மகரம் – உற்சாகம் ➤கும்பம் – நன்மை ➤மீனம் – நற்செயல்.

News January 12, 2025

Career Catfishing டிரெண்ட் தெரியுமா?

image

Gen Z தலைமுறை ஊழியர்களை பணியில் அமர்த்தவே கார்ப்பரேட் நிறுவனங்கள் யோசிக்கின்றன. Gen Z-களின் ஒர்க் பாலிசி அப்படி. இந்த நிலையில் Career Catfishing என்கிற Trend பிரபலமாகிறது. வேலைக்கு தேர்வாகி, ஆபர் லெட்டர்லாம் பெற்ற பிறகு, வேலையில் சேர வேண்டிய முதல் நாள் டிமிக்கி கொடுப்பதை Career Catfishing என்கிறார்கள். அப்படி காணாமல் போகிறவர்களில் Gen Z தலைமுறையினர் தான் அதிகம் என ஆய்வு சொல்கிறது. நீங்க எப்படி?

error: Content is protected !!