India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சொந்த மண்ணில் தோற்பதற்கும் மைதானத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என RCB வீரர் படிக்கல் தெரிவித்துள்ளார். இது தங்களுக்கு விடுக்கப்பட்ட சவால் எனவும், இதிலிருந்து மீள்வதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார். மற்ற மைதானங்களில் நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றதும், சொந்த மண்ணில் நடந்த அனைத்து போட்டிகளிலும் தோற்றதும் தற்செயல் என தெரிவித்துள்ளார்.
‘ஸ்பேஸ் டாக்கிங்’ பரிசோதனை திட்டத்தின் கீழ் விண்வெளியில் செயற்கைக் கோள்களை மீண்டும் வெற்றிகரமாக இணைத்து இஸ்ரோ அசத்தியுள்ளது. ஒரே சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட 2 செயற்கைக் கோள்கள் ஜன. 16-ல் வெற்றிகரமாக இணைக்கப்பட்டன. தற்போது, 2-வது முறையாக செயற்கைக் கோள்களை இஸ்ரோ இணைத்துள்ளது. 2035-க்குள் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க இஸ்ரோ இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கவர்னர் ரவி தலைமையில் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக தடுத்து நிறுத்த வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். SC கண்டித்து தீர்ப்பளித்த பிறகும், அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காமல் கவர்னர் அடாவடித்தனமாக செயல்படுவதாக அவர் வன்மையாக கண்டித்துள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் கவர்னர் ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
▶ஏப்ரல் 22- சித்திரை- 09 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶ குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: தசமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: தேய்பிறை
குஜராத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் சாய் சுதர்ஷன், இந்த ஐபிஎல் சீசனில் முதல் ஆளாக 400 ரன்களை கடந்து ஆரஞ்ச் தொப்பியை தனதாக்கிக் கொண்டுள்ளார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய அவர், 5 போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார். மொத்தமாக இந்த சீசனில் 42 பவுண்டரிகள், 15 சிக்சர் உள்பட 417 ரன்களை அவர் குவித்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாய் சுதர்ஷன் இந்திய அணியில் இடம்பெறுவாரா?
மகாராஷ்டிரா ஹிந்தி திணிப்பு விவகாரத்தை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அங்கு ஹிந்தி கட்டாயம் என்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அதனை திரும்பப் பெற்றது. இதனை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், பாஜக ஆளும் மாநிலத்திலேயே ஹிந்தி கட்டாயமில்லை எனக் கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (ஏப்ரல் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (ஏப்ரல் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
போப் பிரான்சிஸ் உயிரிழந்ததை தொடர்ந்து, அடுத்த போப் யார் என்பதுதான் உலகம் முழுவதும் பேசுபொருளாக உள்ளது. அந்தவகையில், அடுத்த போப்பாக கீழ்காணும் 5 பேருக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. *லூயிஸ் டேக்ளே (பிலிப்பைன்ஸ்) *பீட்ரோ பரோலின் (இத்தாலி) *ஜீன்-மார்க் ஆவ்லின் (ஃபிரான்ஸ்) *வில்லெம் இஸ்கியூர்டோ (நெதர்லாந்து) *மால்கம் ரஞ்சித் (இலங்கை).
ஒரு சில உணவுகளை சாப்பிடுவது ஆண்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் தினமும் அதிகளவில் மது அருந்துவது விந்தணுக்கள் குறைபாட்டை அதிகரிக்கும் என அவர்கள் அலெர்ட் கொடுக்கின்றனர். மேலும், குளிர்பானங்கள், எனர்ஜி பானங்கள், அதிக கொழுப்புள்ள கிரீம்கள் மற்றும் சீஸ் ஆகியவற்றைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகிறார்கள்.
Sorry, no posts matched your criteria.