news

News October 30, 2025

விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்

image

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட 7 ஒன்றியங்களிலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், பசும்பொன்னில் அமைத்துள்ள தேவர் நினைவிடத்தில் இன்று CM ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.

News October 30, 2025

வீட்டிற்குள் கோலம் போடலாமா?

image

வீட்டின் வாசலுக்கு முன்னால் கோலம் போடுவது வழக்கம். லட்சுமி தேவியின் நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவேற்பதை முதன்மையான நோக்கமாக கொண்டு, கோலத்தில் ஓம், ஸ்வஸ்திக், லட்சுமி தேவியின் பாதங்கள் போன்றவை பயன்படுத்துவார்கள். வீட்டினுள் கோலம் போடுவதால், அவற்றை மிதிக்க வாய்ப்புள்ளது. இது மங்களகரமான ஆற்றலை மிதிப்பது போன்றது என்பதால், வீட்டினுள் கோலம் போட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.

News October 30, 2025

2 மாதங்கள் ஓய்வில் ஷ்ரேயஸ்?

image

ஆஸி.,க்கு எதிரான கடைசி ODI போட்டியின்போது ஷ்ரேயஸுக்கு விலா எலும்பில் அடிபட்டது. இதனையடுத்து ICU-வில் சிகிச்சை பெற்ற அவர், ஹாஸ்பிடலிலேயே உள்ளார். அவரது உடலில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக BCCI தெரிவித்தது. இந்நிலையில், 2 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 மாதங்களும் ஷ்ரேயஸ் முழு ஓய்வில் இருக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. Get well soon..

News October 30, 2025

அதிமுகவுக்கு இதுதான் வாடிக்கை: சேகர்பாபு

image

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, எவையெல்லாம் தமிழகத்திற்கு உகந்ததாக இல்லையோ, அதையெல்லாம் வரவேற்பதுதான் அதிமுகவின் வாடிக்கையாக உள்ளது என விமர்சித்தார். திமுகவின் திராவிட மாடல் ஆட்சியை எப்போதும் இகழும் பணியிலேயே அதிமுக, பாஜக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News October 30, 2025

திருப்பதி சால்வை கொள்முதலில் முறைகேடா?

image

திருப்பதி கோயிலுக்கு வரும் VVIP-களுக்கு சால்வை அணிவிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இந்த சால்வை கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹400 மதிப்புள்ள சால்வையை ₹1,300-க்கு வாங்கியதாக கணக்கு காட்டி, ₹50 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக புலனாய்வு விசாரணை நடத்த, கோயில் அறங்காவலர் குழு உத்தரவிட்டுள்ளது.

News October 30, 2025

விஜய்யுடன் கூட்டணி… முடிவை அறிவித்தார்

image

கரூர் துயருக்கு பிறகு, அதிமுக, பாஜக கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், NDA-வில் விஜய் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜய்யை NDA-வில் இணைப்பது குறித்து, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் NDA கூட்டணியை விரிவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார். இது விஜய்யுடனான கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாகவே தெரிகிறது.

News October 30, 2025

விஜய்யை நெப்போலியன் எதிர்ப்பதற்கு காரணம் இதுவா?

image

‘போக்கிரி’ பட ஷூட்டிங்கில், விஜய்யை சந்திக்கச் சென்றுள்ளார் நெப்போலியன். அப்போது காத்திருக்க சொன்ன விஜய்யின் உதவியாளர்களை நெப்போலியன் திட்ட, கேரவனிலிருந்து வெளியே வந்த விஜய், அங்கிருந்த பலரது முன்னிலையிலேயே தனது உதவியாளருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனாலேயே நெப்போலியனுடனான நட்பு கசப்பாகியுள்ளது. இதை மனதில் வைத்தே, ஒரு Ex அரசியல்வாதியாக நெப்போலியன், விஜய்யை விமர்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 30, 2025

கவின் ஆணவக்கொலை: குற்றப்பத்திரிகை தாக்கல்

image

தமிழகத்தையே உலுக்கிய நெல்லை கவின் ஆணவக்கொலை தொடர்பான குற்றப்பத்திரிகையை CBCID தாக்கல் செய்துள்ளது. நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகை, 32 ஆவணங்கள், 83 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 3-வது முறையாக ஜாமின் கோரிய SI சரவணனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

News October 30, 2025

ஃபைனல் செல்லுமா இந்திய மகளிர் அணி?

image

ODI மகளிர் உலகக் கோப்பையின் 2-வது அரையிறுதி போட்டி இந்தியா – ஆஸி., இடையே இன்று நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, தெ.ஆப்பிரிக்காவுடன் ஃபைனலில் விளையாடும். முன்னதாக, 1997, 2017 ஆண்டுகளில் ஆஸி.,க்கு எதிரான செமி ஃபைனல்களில் தோல்வி, வெற்றி என இந்தியா முடிவை சந்தித்துள்ளது. இதனால் இன்றைய செமி ஃபைனலில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. கோப்பை வெல்லும் முனைப்பை வெளிப்படுத்துமா இந்திய மகளிர் அணி?

News October 30, 2025

வெளிநாடுகளில் ஷூட்டிங் செல்லும் மாரி செல்வராஜ்

image

தனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாகவே ‘D56′ இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ‘கர்ணன்’ படத்துக்கு பிறகு தனுஷுடன் மீண்டும் இணையும் மாரி, இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு நாடுகளில் நடைபெறவுள்ளதாகவும் அவர் அப்டேட் கொடுத்துள்ளார். மாரியின் வழக்கமான களத்தை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!