news

News November 1, 2025

அதிதீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலம்!

image

அதிதீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளதாக அம்மாநில CM பினராயி விஜயன் அறிவித்துள்ளார். உலக வங்கியின் வரையறைப்படி தீவிர வறுமை என்பது தனிநபரின் தினசரி வருமானம் ₹180 ஆகும். கேரளாவில் 2021-ல் 64,006 குடும்பத்தினர் இந்த பட்டியலில் இருந்தனர். அரசின் உதவிகளால் அவர்கள் வறுமை கோட்டிற்கு மேலே சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. TN-ல் 2024 தகவலின்படி 2.2% பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

News November 1, 2025

கரூரில் விஜய் பேசிய இடத்தை 2-வது நாளாக அளக்கும் CBI

image

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக CBI அதிகாரிகளின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி விடுமுறைக்கு பின் நேற்றிலிருந்து மீண்டும் அவர்கள் விசாரணையை தொடங்கினர். கூட்டம் நடைபெற்ற சாலையின் பரப்பு, அமைப்பு ஆகியவற்றை நேற்று நவீன கருவிகளுடன் ஆய்வு செய்தனர். இந்நிலையில், இன்றும் 2-வது நாளாக வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடைபெற்ற சாலையை அளவிட்டு ஆய்வு செய்தனர்.

News November 1, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு!

image

மாதத்தின் முதல் நாளான இன்று(நவ.1) தங்கம் உயர்வுடன் தனது வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 22 கேரட் தங்கம், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹11,310-க்கும், சவரன் ₹90,480-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹166-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,66,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலையில் நேற்று மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2025

இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது: EPS

image

கட்சியில் இருந்த துரோகிகள் போய்விட்டனர்; தற்போதுதான் நிம்மதி ஏற்பட்டுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் நெருஞ்சில் முள்ளாக இருந்த சிலரை எப்படி அகற்றுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால், அவர்களாகவே தவறு செய்துவிட்டு, தங்களை துரோகிகள் பக்கம் இணைத்து கொண்டு வெளியேறி விட்டனர். இனி அவர்கள் அனைவரும் நம்முடைய எதிரிகள்தான் என்று செங்கோட்டையனை மறைமுகமாக குறிப்பிட்டார்.

News November 1, 2025

நாடு முழுவதும் ஆதார் கட்டணம் உயர்ந்தது

image

நாடு முழுவதும் இன்று முதல் ஆதார் கட்டணம் உயர்கிறது. *பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை புதுப்பிக்க இனி ₹75 வசூலிக்கப்படும் (முன்பு ₹50) *கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க ₹125 கட்டணம் (முன்பு ₹100), *வீட்டிலிருந்தே ஆதார் சேவைகளை பெற, முதல் நபருக்கு ₹700 & அதே முகவரியில் உள்ள ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் ₹350 கட்டணம் வசூலிக்கப்படும்.

News November 1, 2025

MP கார்த்தி சிதம்பரத்துக்கு வந்த சிக்கல்!

image

INX மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் டெல்லியிலுள்ள ₹16 கோடி சொத்துகளையும், 7 வங்கி கணக்கில் இருந்த சுமார் ₹7 கோடி பணத்தையும் முடக்கி ED நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் PMLA தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணை முடிவில், சொத்துகளை முடக்கிய ED நடவடிக்கை செல்லும் என்று கூறி, கார்த்தி சிதம்பரத்தின் வாதத்தை தள்ளுபடி செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

News November 1, 2025

அதிசயமே அசந்து போகும் அழகி ஐஸ்வர்யா ராய்!

image

8-வது உலக அதிசயம் என கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று பிறந்தநாள். 1994-ல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட அவர், சினிமாவிலும் உச்சம் தொட்டார். அழகான ஹீரோயினாக மட்டுமின்றி, ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தையும் இத்தனை தேஜஸுடன் நடிக்க முடியும் என பொன்னியின் செல்வன் படத்தில் நிரூபித்து காட்டி, ரசிகர்களை அசத்தினார். உங்களுக்கு பிடிச்ச ஐஸ்வர்யா ராய் படம் எது?

News November 1, 2025

வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்த ₹2.5 கோடி ஷேர்

image

‘திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு வந்ததாம் கல்யாணம்’ என்ற பழமொழிக்கு ஏற்ற சம்பவம் ஒன்று குஜராத்தில் நடந்துள்ளது. தாத்தா இறந்த பிறகு, வீட்டை சுத்தம் செய்த பேரனுக்கு ₹2.5 கோடிக்கான பங்கு சான்றிதழ்கள் கிடைத்தது. தாத்தா உயிலில் சொத்துகளை பேரன் பெயரில் எழுதி வைத்தாலும், தனக்கும் பங்கு வேண்டும் என தாத்தாவின் மகன் கோருகிறார். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், இருவரும் கோர்ட்டை நாடியுள்ளனர்.

News November 1, 2025

ஏன் அர்ஷ்தீப் சிங் இல்லை.. விளாசிய அஸ்வின்

image

Experiment செய்ய வேண்டும் என்றால், பும்ராவை நீக்கிவிட்டு அணியில் அர்ஷ்தீப் சிங்கை சேர்க்கலாமே என அஸ்வின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பும்ரா விளையாடினாலும், பிளேயிங் XI-ல் அர்ஷ்தீப் இருக்க வேண்டும் என தெரிவித்த அஸ்வின், T20-யில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்பது புரியவில்லை எனவும் கூறினார். அர்ஷ்தீப் சிங் அடுத்த மேட்ச்சில் விளையாடணுமா?

News November 1, 2025

3,740 கோயில்களில் கும்பாபிஷேகம்: சேகர்பாபு

image

திராவிட மாடல் ஆட்சியில், இதுவரை 3,740 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர், வெள்ளித்தேர், மரத்தேர்களை ஓட வைத்த பெருமையும் திமுக அரசுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!