news

News November 1, 2025

திமுகவின் B டீமா? செங்கோட்டையன் விளக்கம்

image

திமுகவின் ‘B’ டீமாக தான் இல்லை, கோடநாடு வழக்கில் இபிஎஸ் தான் A1 ஆக இருப்பதாக செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். கட்சியில் நீண்ட காலமாக இருந்த தன்னை ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காமல் நீக்கம் செய்திருப்பது வேதனையளிப்பதாக கூறினார். இபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு, அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வி அடைவதால் கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என குரல் கொடுத்ததாக கூறினார்.

News November 1, 2025

சற்றுமுன்: மாத முதல் நாளிலேயே ₹1,000 உயர்ந்தது

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வந்ததால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், தற்போது மீண்டும் ஏற்றத்தை நோக்கி செல்கிறது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ₹1 உயர்ந்து ₹166-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,66,000-க்கும் விற்பனையாகிறது.

News November 1, 2025

எந்த உணவை எத்தனை நாள் ஃபிரிட்ஜில் வைக்கலாம்?

image

உணவுகளை எத்தனை நாள் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் என்பதற்கான கால அளவை FDA பரிந்துரைத்துள்ளது. அந்த கால அளவை மீறினால் உணவு நஞ்சாகி வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பிரச்னை ஏற்படலாம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கம் Swipe செய்து முழு விவரத்தை தெரிஞ்சிக்கோங்க. நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. முடிந்த வரையில் ஃப்ரிட்ஜில் உணவுகள் வைப்பதை தவிருங்கள். ஆரோக்கியம் காக்க ஃப்ரெஷ்ஷாக சாப்பிடுங்கள்.

News November 1, 2025

BREAKING: செங்கோட்டையன் வெளியிடும் ஆடியோ

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்னும் சற்று நேரத்தில் முக்கிய ஆடியோ ஒன்றை வெளியிட உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 30 நிமிடங்களாக தனது ஆதரவாளர்களுடன் ஈரோடு புறநகர் அதிமுக அலுவலகத்தில் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சரியாக 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

News November 1, 2025

ருக்மணி வசந்த் இவருக்கு ஜோடியா?

image

பொதுவாக நடிகர் – நடிகைகள் ஜோடி போடும்போது, நடிகர்களுக்கு தான் வயது அதிகமாக இருக்கும். ஆனால் தன்னை விட குறைந்த வயது நடிகருடன் ஜோடி சேர உள்ளார் ‘நேஷனல் கிரஷ்’ ருக்மணி வசந்த். லிங்குசாமி இயக்கத்தில், இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ருக்மணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர்ஷவர்தனை விட 3 வயது மூத்தவர் ருக்மணி வசந்த்.

News November 1, 2025

அயோடின் உப்பை ஒதுக்குபவரா நீங்க.. உஷாரா இருங்க!

image

அயோடின் உப்பை விட பிங்க் சால்ட் தான் ஹெல்தியானது என அயோடின் உப்பை பலரும் குறைத்து வருகின்றனர். ஆனால், அயோடின் குறைவால், உடலில் தைராய்டு பிரச்னை ஏற்படும் ஆபத்து உள்ளது. 1990-களில் தைராய்டு பிரச்னை இந்தியாவில் அதிகரித்த நிலையில், அரசு அயோடின் உப்பை ஊக்குவித்து அதை சமாளித்தது. எனவே, உணவில் கொஞ்சம் அயோடின் உப்பை சேர்ப்பதற்கு மறக்காதீர்கள். இத்தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.

News November 1, 2025

முடிவை அறிவிக்கிறார் செங்கோட்டையன்

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்னும் சற்றுநேரத்தில் செய்தியாளர்களை சந்தித்து, பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக பேசவிருக்கிறார். தற்போது கோபியில் உள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு வந்த செங்கோட்டையனுடன் முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 1, 2025

தேசிய கபடி வீரர் சுட்டுக்கொலை!

image

பஞ்சாபில் தேசிய கபடி வீரர் தேஜ்பால் சிங் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சொந்த வேலையாக லூதியானாவுக்கு சென்றபோது காவல்துறை(SSP) அலுவலகம் அருகிலேயே, அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. அப்போது, ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து, தேஜ்பால் சிங்கின் மார்பில் சுட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனால், பதற்றம் உருவானதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News November 1, 2025

CSK-வில் பிருத்வி ஷா?

image

அடுத்த சச்சின் இவர்தான் என ஒரு காலத்தில் கணிக்கப்பட்ட பிருத்வி ஷா, ஃபார்ம் அவுட்டாகி பெரும் பின்னடைவுகளை சந்தித்தார். IPL தொடரிலும் சொதப்பிய அவர், தற்போது மீண்டும் அதிரடிக்கு திரும்பி வருகிறார். நடப்பு ரஞ்சி தொடரில் இரட்டை சதம் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஷாவை, அணியில் சேர்க்க CSK முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. CSK அணிக்கு பிருத்வி ஷா சரியான சாய்ஸா?

News November 1, 2025

அதிதீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலம்!

image

அதிதீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளதாக அம்மாநில CM பினராயி விஜயன் அறிவித்துள்ளார். உலக வங்கியின் வரையறைப்படி தீவிர வறுமை என்பது தனிநபரின் தினசரி வருமானம் ₹180 ஆகும். கேரளாவில் 2021-ல் 64,006 குடும்பத்தினர் இந்த பட்டியலில் இருந்தனர். அரசின் உதவிகளால் அவர்கள் வறுமை கோட்டிற்கு மேலே சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. TN-ல் 2024 தகவலின்படி 2.2% பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

error: Content is protected !!