India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திராவில் <<17336265>>₹3,500 கோடி மதுபான ஊழல்<<>> வழக்கில் நடிகை தமன்னாவை விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், வழக்கில் சிக்கிய வெங்கடேஷ் நாயுடுவுடன் தமன்னா இருக்கும் போட்டோக்கள் வைரலாகின்றன. தங்க நகை வியாபாரம் செய்து வரும் தமன்னா, தான்சானியாவில் வெங்கடேஷ் உடன் தங்க சுரங்கம் வாங்க பிளான் செய்ததாக கூறப்படுகிறது. திரையுலகில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை விரிவடைகிறதாம்.
டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு, இந்திய-அமெரிக்க உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. 1947 முதல் ரஷ்யாவுடன் நெருக்கத்தை பேணிய இந்தியா, 90-களுக்கு பிறகு அமெரிக்காவுடன் கைகோர்த்தது. ரஷ்யாவுடன் முழுவதுமாக உறவை துண்டித்தால், அது சீனா-ரஷ்யா உறவை வலுப்படுத்தி, ஆசிய பிராந்தியத்தில் தனக்கு பாதகமாக முடியும் என இந்தியா கருதுகிறது. இனி டெல்லியின் பார்வை மாஸ்கோவை நோக்கி திரும்பலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பத்தில் சில தகவல்களை பூர்த்தி செய்யாமல் சிலர் விட்டுவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டு எண், பேங்க் அக்கவுண்ட் எண், IFSC Code, ஆதார் எண் உள்ளிட்டவற்றை சரியாக பூர்த்தி செய்து, அதற்கான அசல் சான்றிதழ்களை வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தகவல்களை பூர்த்தி செய்வதில் சிலர் தவறு செய்வதாக குறிப்பிட்டுள்ள அரசு, முறையாக பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
‘பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது மூத்தோரின் நல்வாக்கு. தமிழர்களது பண்பாட்டின் அடையாளமாக திகழும் கோரைப்பாயில் படுப்பதால் அமைதியான உறக்கம் ஏற்படும். மூட்டு, சதை சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். உடலின் ரத்த ஓட்டம் சீராவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும். கோரைப்பாயின் மற்றொரு சிறப்பு கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான வெப்பத்தையும் அளிக்கும்.
அம்பானியாக இருந்தாலும், அன்றாடம் காட்சியாக இருந்தாலும் வாக்குரிமை அனைவருக்கும் சமம் தான். சமமான இந்த மதிப்பை ஏற்கும் கூட்டமாக பாஜக, RSS இல்லை என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பின் சிபிஎம் காணாமல் போகும் என EPS கூறியது குறித்து கேட்டதற்கு, ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதை போல் சிபிஎம் பற்றி இபிஎஸ் கவலைப்பட தேவையில்லை என்றார்.
பள்ளிக்கல்வியில் ‘திறந்த புத்தக தேர்வு முறை (Open Book Exam)’யை கொண்டுவர தமிழக அரசின் <<17343115>>கல்விக் கொள்கை<<>> பரிந்துரைத்துள்ளது. வெறுமனே மனப்பாடம் செய்வதை தவிர்த்து, புரிதலை மேம்படுத்த இது உதவும். இம்முறையில், தேர்வின் போது ‘தனி குறிப்புப் புத்தகம்’ வழங்கப்படும். அதைப் பார்த்து, புரிந்து தேர்வு எழுத வேண்டும். இது மன அழுத்ததை குறைத்து புரிந்து படிக்கும் திறனை வளர்க்குமாம். இதை வரவேற்கிறீர்களா?
ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுக போலி வாக்காளர்களை சேர்க்க மும்முரமாக உள்ளதாக இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். சாத்தூரில் மக்கள் மத்தியில் பேசிய அவர், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக வாய் திறக்காமல் இருப்பதா என திமுக தங்களை பார்த்து கேட்கலாமா என கேள்வி எழுப்பினார். சென்னை மாநகராட்சி முழுவதும் போலி வாக்காளர்கள் உள்ளதாகவும், அதை வைத்தே திமுக வெற்றி பெறுவதாகவும் கூறினார்.
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, கேரள சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டது. இதனால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா? நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கேரள அரசின் வணிக பார்ட்னரான ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டர் நிறுவனம், அர்ஜென்டீனா கால்பந்து கூட்டமைப்புக்கு (AFA) ₹130 கோடி கொடுத்துள்ளதாம். அப்படியும், எங்களால் இந்த ஆண்டு வரமுடியாது, வேண்டுமானால் அடுத்த ஆண்டு பாக்கலாம் என AFA கூறியுள்ளதாம். So sad!
நண்பர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாக PM மோடி தன் X பதிவில் தெரிவித்துள்ளார். உக்ரைன் விவகாரம் பற்றி தகவல்களை பகிர்ந்ததற்காக, புடினுக்கு நன்றி சொன்ன மோடி, இந்தியா- ரஷ்யாவின் சிறப்புவாய்ந்த உறவையும், நெருக்கத்தையும் மேலும் வளர்க்க உறுதி பூண்டதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் மோதல் வலுக்கும் சூழலில், நம்பகமான கூட்டாளியான ரஷ்யாவுடன் இந்தியா நெருங்குவதையே மோடி-புடின் பேச்சு உணர்த்துகிறது.
CBSE உள்ளிட்ட எந்த போர்டாக இருந்தாலும் தமிழை இனி கட்டாயமாக படிக்க வேண்டுமென அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் 11-ம் வகுப்பை மாணவர்கள் பயன்படுத்த வேண்டுமெனவும் கூறினார். கல்வியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு மாநில கல்வி கொள்கை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.