news

News November 1, 2025

மீண்டும் புயல் சின்னம்.. மழை வெளுக்கப் போகுது

image

வங்கக் கடலில் நாளை(நவ.2) பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என IMD கணித்துள்ளது. இது புயலாக மாறுமா என பின்னர் அறிவிக்கப்படும். காற்றழுத்தம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நவ.7 வரை மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மொன்தா புயலால் தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2025

உங்களுக்கு இப்படி போன் வருதா.. மாட்டிக்காதீங்க!

image

4G சிம்-ஐ 5G e-SIM-ஆக அப்டேட் செய்ய சொல்லி Call வந்தால், கொஞ்சம் கவனமாக இருங்கள். அது மோசடி அழைப்பாக இருக்கலாம். மும்பையை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு இப்படி போன் கால் செய்து, அவரின் அக்கவுண்டில் இருந்த ₹11 லட்சத்தை ஒரு கும்பல் அபேஸ் செய்துள்ளது. சிம் கார்டு முடக்கப்பட்டு விடும் என ஏமாற்றி, OTP-யை பெற்று பணத்தை திருடியுள்ளனர். உங்களுக்கும் இப்படியான அழைப்புகள் வரலாம். யாருடனும் OTP-யை பகிராதீங்க!

News November 1, 2025

டி20-யில் அதிக சிக்ஸர்கள் அடுத்தது யார்?

image

டி20 கிரிக்கெட்டின் அழகே அதன் அதிரடியில்தான் உள்ளது. பந்துவீச்சாளர் எவ்வளவு வேகமாகவும், சாமர்த்தியமாகவும் பந்துவீசினாலும், அதை பேட்ஸ்மேன் சிக்ஸருக்கு விரட்டுவதை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். கண்களை கவரும் அதிக டி20 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.

News November 1, 2025

எல்லை போராட்ட தியாகிகள் நாள்: CM

image

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் நிலையில், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட இன்றைய நாளை, எல்லை போராட்ட தியாகிகள் நாள் என்று கூறி, CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளை போராடி பெற்றுத்தந்த மார்ஷல் நேசமணி, ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு இந்த நாளில் வீரவணக்கத்தை செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நம் தலைவர்கள் வழியில் உரிமைகளை காப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

News November 1, 2025

இசை நிகழ்ச்சியில் ₹24 லட்சம் மதிப்புள்ள போன்கள் அபேஸ்!

image

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸ் சமீபத்தில் மும்பையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் வித்யா பாலன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பிரபலங்களுடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். மக்கள் என்ரிக்கின் இசையில் திளைத்துக்கொண்டிருந்த நேரத்தில், திருடர்கள் கைவரிசை காட்டி ₹24 லட்சம் மதிப்புள்ள 73 செல்போன்களை திருடிச்சென்றுள்ளனர்.

News November 1, 2025

ரயில்வேயில் 2,569 பணியிடங்கள்.. Apply Now

image

இந்தியா முழுவதும் Junior Engineer, Depot Material Superintendent உள்ளிட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மொத்த பணியிடங்கள் 2,569. இதில், சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் 160 பணியிடங்கள். விருப்பமுள்ளவர்கள் 30.11.2025 வரை rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை இளைஞர்கள் தவறவிட வேண்டாம்.

News November 1, 2025

நாட்டை உலுக்கிய துயரம்.. PM மோடி உருக்கமாக இரங்கல்

image

ஆந்திராவின் <<18168033>>ஸ்ரீகாகுளம் காசிபுக்கா வெங்கடேஸ்வரர் கோயில்<<>> கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. இத்தகைய துயர சம்பவத்தை அறிந்து இதயம் நொறுங்கிவிட்டதாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000-ம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

News November 1, 2025

BREAKING: லெஜெண்ட் விடை பெற்றார்

image

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் போபண்ணா, கலப்பு இரட்டையர் பிரிவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 2019-ம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2024-ல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கியது.

News November 1, 2025

புதுவை இந்தியாவுடன் இணைந்தது எப்படி தெரியுமா?

image

சுதந்திரத்துக்கு பிறகும் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மன்னர்களாலும், பிரெஞ்சு, டச்சு நாட்டினராலும் ஆளப்பட்டு வந்தன. 1954-ம் ஆண்டு வரை பிரான்ஸால் நேரடியாக ஆளப்பட்டு வந்த நிலையில், இந்தியாவுடன் இணைய விரும்பி புதுவை மக்கள் பிரதிநிதிகள் தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மானத்துக்கு 1962, நவ 1-ம் தேதி பிரெஞ்சு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியதால், புதுச்சேரி முறைப்படி இந்தியாவுடன் இணைந்தது.

News November 1, 2025

திங்கள்கிழமை அனைத்து மாவட்டத்திற்கும் HAPPY NEWS

image

தமிழகம் முழுவதும் தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு திங்கள்கிழமை முதல் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என TN அரசு அறிவித்துள்ளது. முக்கிய அம்சமாக, முதியோர்களின் வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 70 வயதை கடந்தவர்களுக்கு வீடு தேடி பொருள்கள் வழங்கப்பட இருந்தது. தற்போது, 65 வயது நிரம்பினாலே ரேஷன் பொருள்கள் வீட்டிற்கே கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!