news

News November 1, 2025

உலகக்கோப்பையை வென்றால் இந்திய மகளிருக்கு ₹125 கோடி

image

நாளை நடைபெற உள்ள மகளிர் ODI உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதில், இந்தியா கோப்பையை கைப்பற்றினால், ₹125 கோடி பரிசுத் தொகை வழங்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற ஆண்கள் டி20 உலக்கோப்பையில் வென்ற பின், இந்திய அணிக்கு ₹125 கோடி பரிசு வழங்கப்பட்டது. அந்த வகையில் சமமான பரிசுத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News November 1, 2025

அதிமுக மா.செ., கூட்டம் அறிவிப்பு

image

நவ.5-ம் தேதி அதிமுக மா.செ., கூட்டம் நடைபெறும் என EPS அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்து மா.செ.,க்களும் தவறாமல் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூத்த தலைவர் செங்கோட்டையன் நேற்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

News November 1, 2025

ரவிவர்மன் ஓவியமே ஐஸ்வர்யா ராய்

image

அழகின் உருவமான ஐஸ்வர்யா ராய், ஜீன்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். உலக அழகி பட்டம் வென்ற நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யாவின் கண்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. 50 வயதை கடந்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவரது சமீபத்திய போட்டோஸ், ரசிகர்களை மெய்மறக்க செய்கிறது. உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

News November 1, 2025

பிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தம் ❤️❤️PHOTO

image

அல்லு அர்ஜுனின் தம்பியும் நடிகருமான அல்லு சிரிஷ், நீண்ட கால காதலி நைனிகாவை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில், சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், குடும்பத்தினர் மத்தியில் மோதிரம் மாற்றிக் கொண்ட போட்டோக்கள் SM-ல் வைரலாகி வருகின்றன. தமிழில் கவுரவம் படத்தில் ஹீரோவாக நடித்த அல்லு சிரிஷ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

News November 1, 2025

தெருநாய்கள் விவகாரம்: தமிழக அரசு பதில் மனு

image

தெரு நாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதில், TN-ல் 138 கால்நடை மருத்துவமனைகள் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறியுள்ள அரசு, மாநகராட்சிகளில் மட்டும் 91 கருத்தடை மையங்கள் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

News November 1, 2025

அதிக கிரிமினல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள்

image

பிஹார் தேர்தலுக்காக பல வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில், கொலை உள்பட அதிக குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள வேட்பாளராக RJD வேட்பாளர் ரித்லால் ராய் (30 வழக்குகள்) உள்ளார். அவருக்கு அடுத்ததாக, JD (United) வேட்பாளர் ஆனந்த் சிங்கிற்கு எதிராக 28 கிரிமினல் வழக்குகளும், RJD வேட்பாளர் கரன்வீர் சிங்கிற்கு எதிராக 15 கிரிமினல் வழக்குகளும் உள்ளது வேட்புமனுவில் தெரியவந்துள்ளது.

News November 1, 2025

லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

வங்கிகளில் லோன் வாங்கியவர்களுக்கு நவம்பரில் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அக்டோபரில் இந்தியன் வங்கி, IDBI வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05% வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் EMI இந்த மாதம் முதல் குறைந்துள்ளது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு பயனளிக்கும். SHARE IT.

News November 1, 2025

ரோஹித்தின் உலக சாதனையை முந்திய பாபர் அசாம்!

image

T20 போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவின் சாதனையை பாகிஸ்தானின் பாபர் அசாம் முறியடித்துள்ளார். பாபர் அசாம் தற்போது T20-யில் 4,234 ரன்கள் அடித்துள்ளார். ரோஹித் 4,231 ரன்களுடன் 2-வது இடத்திலும், விராட் கோலி 4,188 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். 2024 T20 உலகக்கோப்பை தொடருடன் ரோஹித் & கோலி ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2025

நவ.1 ஏன் ‘தமிழ்நாடு நாள்’ அல்ல என்று தெரியுமா?

image

நவ.1 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் ஜூலை 18-ஐ தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடும். ஏன் தெரியுமா? என்ன தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும், 1967, ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு என பெயர் சூட்டும் வரை அது சென்னை மாகாணமாகவே இருந்தது. எனவே தான், அண்ணா தமிழ்நாடு என பெயர்சூட்டிய ஜூலை 18, தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டு, அதுவே தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

News November 1, 2025

தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

ஏற்ற இறக்கத்தை கண்டுவரும் தங்கம் விலை இந்த வாரம் மக்களுக்கு மகிழ்ச்சியையே கொடுத்துள்ளது. இந்த வார வர்த்தக முடிவில், 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,520 குறைந்திருப்பது சற்று நிம்மதியான விஷயம். அதாவது, கடந்த வார சனிக்கிழமையன்று ₹92,000-க்கு விற்பனையான 1 சவரன் தங்கத்தின் விலை, தற்போது ₹90,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்க்கெட் விடுமுறை என்பதால் நாளை தங்கம் விலையில் மாற்றம் இருக்காது.

error: Content is protected !!