India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியாவில் ரேபிஸ் நோய்த் தடுப்புக்காக ‘Abhayrab’ தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் போலி தொகுப்புகள் புழக்கத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 2023, நவ.1-ம் தேதி முதல் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள், ஆஸி.,-யில் பதிவு செய்யப்பட்ட மாற்று தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் ராகுல், சோனியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் சசி தாரூரும் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் நேஷனல் ஹெரால்டு வழக்கு, ஆரவல்லி பகுதி பிரச்னைகள், MGNREGA திட்டத்தில் மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

PM KISAN திட்டத்தில், நலிவடைந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 வழங்கி வருகிறது. இதனை உயர்த்தி வழங்குமாறு விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், PM KISAN திட்ட தவணை தொகையை ₹3,000-ஆக உயர்த்த அரசு திட்டமிட்டு இருப்பதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரியில் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

சூர்யாவின் 46-வது படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை குறித்து ஒரு தகவல் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி 45-வயது நாயகனாக வரும் சூர்யாவுக்கும், 20-வது பெண்ணான மமிதா பைஜூவுக்கும் இடையேயான காதல்தான் கதைக்கருவாம். கஜினி படத்தில் வருவது போல இதிலும் ஸ்டைலிஷ் கோடீஸ்வரராக சூர்யா அசத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. கதை எப்படி இருக்கு நண்பர்களே?

தவெகவில் தூத்துக்குடி மா.செ., பொறுப்பு வழங்கக் கோரி தர்ணாவில் ஈடுபட்ட <<18671377>>அஜிதா<<>>, தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. தனியார் ஹாஸ்பிடலில் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்றுவந்த அஜிதா, ICU-வுக்கு மாற்றப்பட்டுள்ளார். அஜிதாவின் உடல்நலம் குறித்த செய்தி, தவெகவினர் மற்றும் விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீமான், விஜய் <<18646020>>பாஜக பெற்றெடுத்த<<>> பிள்ளைகள் என திருமாவளவன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ‘என்னையும், தம்பி விஜய்யையும் பாஜக பெற்றபோது, எங்க அண்ணன் திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தாரு’ என கிண்டலாக சீமான் பதிலடி கொடுத்துள்ளார். நாதக பொதுக்கூட்டத்துக்கு பின் பேசிய அவர், தமிழகத்தின் பிரச்னைகளையும், அதற்கான தீர்வையும் படம் போட்டு காட்டுவேன்; பொறுத்திருந்து பாருங்கள் என்றும் குறிப்பிட்டார்.

நாங்கள் இந்தியாவிற்கு செல்ல மாட்டோம் என வங்கதேச இந்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்துக்கள் என்ற ஒரே காரணத்தால், வலதுசாரி இஸ்லாமியர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்தியாவின் ஏஜெண்டுகள் என முத்திரை குத்துகின்றனர். இந்தியாவிற்கு போகச் சொல்லி எங்களை மிரட்டுகின்றனர். நாங்கள் வங்கதேச இந்துக்கள். இங்குதான் பிறந்தோம், இங்கு தான் இறப்போம், இதுதான் எங்கள் நாடு என அவர்கள் கூறுகின்றனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு தயாராக உள்ளது, ஜன.10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இந்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஆஷஸ் தொடரின் முதல் 3 டெஸ்ட்டுகளை தோல்வியடைந்த இங்கிலாந்து, 4-வது போட்டியில் <<18683771>>போராடி வெற்றி<<>> பெற்றது. அதுமட்டுமின்றி ஆஸி., மண்ணில் 15 ஆண்டுகளாக சந்தித்து வந்த தொடர் தோல்விகளுக்கு அந்த அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அங்கு இதுவரை 18 போட்டிகளில் இங்கி., தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது. கடைசியாக 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியிருந்தது.

புதுச்சேரியில் மகளிர் உரிமைத்தொகை ₹1,000-ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவையில் நடைபெற்ற வீரதீர குழந்தைகள் தினவிழாவில் பேசிய அவர், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். TN-ல் உரிமைத்தொகையாக ₹1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இது உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் கூறியிருந்தார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.