India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக வழக்கு தொடர்ந்துள்ள ஜாய் கிரஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், ‘Carbon copy of his father face’ என கிரிஸில்டா இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். அதாவது, அப்பாவின் முக ஜாடையில் அப்படியே குழந்தை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, மாதம் ₹6.5 லட்சம் பராமாரிப்பு தொகையை கிரிஸில்டா கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில பொருள்களை வைக்கக்கூடாது. ➤துருப்பிடித்த பொருள்களை தூக்கி எரியுங்கள் ➤வீட்டின் மாடியை அழுக்காக வைத்திருக்க வேண்டாம் ➤பழைய பொருள்களை, அழுக்கான பொருட்களை வீட்டிற்குள் வைக்காதீங்க. இவற்றை வைத்திருந்தால் சனி பகவானின் கோபத்துக்கு ஆளாவீர்கள் எனவும், வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் உருவாகும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வாரந்தோறும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கிழமையில், பேரம் பேசி கால்நடைகள் வாங்கும் பழக்கம் நமது ஊர் சந்தைகளில் உள்ளது. அப்படித்தான் ராஜஸ்தானின் புஷ்கர் நகரிலும் ஒரு சந்தை நடந்துள்ளது. ‘Pushkar Mela’ என்ற பெயரில் திருவிழாவாக நடைபெற்றுள்ளது. இதில் ஒட்டகம் முதல் எருமை வரை எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள படங்களில் swipe செய்து பாருங்க. பிடிச்ச லைக் போடுங்க.

கரூர் துயரத்துக்கு பிறகு தவெகவில், உள்கட்சி கட்டமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மண்டலம் முதல் பூத் வரை வழக்கறிஞர் பிரிவு நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்திற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர், 10 இணை ஒருங்கிணைப்பாளர் என்றும், ஒரு கிளைக்கு 3 வழக்கறிஞர்கள், 25 பூத்துக்கு 1 வழக்கறிஞர் என நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வரலாற்றை மறைப்பவர்கள் (அ) திரிப்பவர்களே திராவிடர்கள் என்று சீமான் விமர்சித்துள்ளார். திராவிடம் என்பதே திரிபு என குறிப்பிட்ட அவர், தமிழர்களின் அடையாளங்களை திட்டமிட்டு மறைப்பவர்களே திராவிடர்கள் என்றும் கூறினார். சுயமரியாதை என கூறுவதற்கு திமுக, அதிமுகவில் ஒருவருக்காவது தகுதி இருக்கிறதா என்றும் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். சீமானின் திராவிடம் குறித்த பேச்சு பற்றி என்ன நினைக்கிறீங்க?

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, ITI தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ₹18,000 – ₹63,200 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. இது குறித்து மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். ஷேர் பண்ணுங்க!

விஜய் வர்மா உடனான காதலை திடீரென முறித்துக் கொண்டார் தமன்னா. ஆனால் காரணத்தை கூறவில்லை. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, யாராக இருந்தாலும் உறவுகளிடம் பொய் சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என தமன்னா பதிலளித்துள்ளார். பொய் பேசும் நபர்களை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். உங்கள் துணையிடம் நீங்கள் பொய் பேசுவீர்களா?

அதிமுக கூட்டணியில், 2026 பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சியின்(AMAK) தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிவித்துள்ளார். WAY2NEWS-க்கு சிறப்பு பேட்டியளித்த அவர், 234 தொகுதிகளிலும் குறைந்தபட்சம் தலா 10,000 பேருடன் AMAK அபார வளர்ச்சி அடைந்துள்ளது என்றார். வரும் தேர்தலில் நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதி (அ) சென்னை மதுரவாயலில் தான் போட்டியிட விரும்புவதாக கூறினார்.

சில உயிரினங்கள் வாழ்நாள் மிகவும் குறுகிய காலம் மட்டுமே. குறிப்பாக சில பூச்சி வகைகள், மீன்கள், எலி வகைகள் உள்ளிட்டவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் இறந்துவிடும். அவை எந்த உயிரினங்கள், எப்போது இறக்கும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த உயிரினங்கள் தொடர்பான சுவாரசியமான தகவலை, கமெண்ட்ல சொல்லுங்க.

ரஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘The Girlfriend’ படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் கதையை, தனது தோழியான நடிகை சமந்தாவிடம் படிக்க கொடுத்துள்ளார், இதன் இயக்குநர் ராகுல் ரவீந்திரன். அப்போது, இப்படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க ராகுல் திட்டமிட்டுள்ளார். ஆனால் சமந்தாவோ, இக்கதை தனக்கு பொருந்தாது, ரஷ்மிகாவை நடிக்க வையுங்கள் என கூறியுள்ளார். இதன் பிறகே ரஷ்மிகா படத்தில் கமிட்டாகியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.