news

News August 9, 2025

BREAKING: எல்லையில் மீண்டும் மோதல்.. 2 வீரர்கள் மரணம்

image

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் நமது ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். குல்காம் மாவட்டத்தில் தொடர்ந்து 8-வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இன்று அதிகாலையில் நடந்த பயங்கர மோதலில் இந்த துயரம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

News August 9, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹200 குறைந்தது

image

இந்த வாரம் தொடங்கியது முதலே ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று(ஆக.9) சவரனுக்கு ₹200 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,445-க்கும், சவரன் ₹75,560-க்கும் விற்பனையாகிறது. இதனால் நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

News August 9, 2025

திருப்புமுனையை ஏற்படுத்தும் இன்றைய பாமக பொதுக்குழு

image

மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னும் இருவரும் சமாதானம் ஆகவில்லை. இதற்கிடையில், தானே பாமக தலைவர் என்று ராமதாஸ் கூறிவரும் நிலையில், இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியே தலைவர் என்று தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

News August 9, 2025

அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம்

image

மூச்சுத்திணறல், இருமலுக்கு பயன்படுத்தும் இப்​ராட்​ரோபி​யம் உள்ளிட்டவை அவசரகால மருந்துகளாக உள்ளன. இதன் விலை உச்சவரம்பு 1 ML ₹2.96 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. மேலும், BP-க்கு பயன்படுத்தும் சோடியம் நைட்​ரோபுரஸைடு 1 ML ₹28.99, நெஞ்சு வலி சிகிச்சைக்கு பயன்படுத்தும் டில்​டி​யாசெம் 1 காப்சூல் ₹26.77-க்கு விற்பனை செய்ய கூறியுள்ளது. இதோடு, 37 மருந்துகளின் விலையை குறைக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

News August 9, 2025

₹10,000 செலுத்தி திருமணத்தில் பங்கேற்கலாம்!

image

ஃபிரான்ஸ் Startup நிறுவனமான Invitin, ஒரு புதிய ஐடியாவுடன் வந்துள்ளது. அந்நிறுவனம் மூலம் நடைபெறும் திருமணங்களில் ₹10 ஆயிரம் செலுத்தி யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். விருந்து, புதிய உறவுகளை உருவாக்குதல் என அனைத்து வசதிகளையும் பெறலாம். மணமக்களின் திருமண செலவுகளை குறைக்கும் வகையில் இந்த ஸ்டார்ட்அப் செயல்படுகிறது. இந்தியாவிலும் ‘Join My Wedding’ எனும் இந்த நடைமுறை அறிமுகமாகியுள்ளது.

News August 9, 2025

அதிமுகவுக்கு நோ! கூட்டணி பேச்சை தொடங்கிய விஜய்

image

தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையும் தீவிரமாகியுள்ளது. இதற்கிடையில், விஜய்க்கு துணை முதல்வர் பதவி, 75+ சீட் என்ற அடிப்படையில், அதிமுக கூட்டணியில் எந்த நேரத்திலும் தவெக இணையலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில் இணைய மறுத்துவிட்ட விஜய், தமிழ்நாட்டின் முக்கிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 9, 2025

விவசாயிகளை கட்டாயப்படுத்த வேண்டாம்: எம்.ஆர்.கே.

image

உரங்களுடன் பிற இடுபொருள்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிகளை மீறி உரங்களை பதுக்கினால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

News August 9, 2025

11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: IMD

image

வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. குடையை ரெடியா வையுங்க மக்களே..!

News August 9, 2025

யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள்…

image

நாம் பொதுவாகவே யாருடனாவது நம்மை ஒப்பிட்டுக்கொள்வோம். நம் கவலைகளில் பாதி, இந்த ஒப்பிடல் மூலம் தான் வரும். உங்களைவிட ஒருவர் வெற்றிகரமாக இருக்கிறார் என்றால் அவருடைய சூழல், குடும்ப வழிகாட்டல்கள் என அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால் நீங்கள் ஒன்றும் குறைவானவரில்லை. முதல் படியில் இருந்து நீங்கள் முன்னேறி வருவதற்கு மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். உங்களாலும் முடியும்!

News August 9, 2025

2025 வருமான வரி மசோதா வாபஸ்

image

கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்திய 2025 வருமான வரி மசோதாவை, நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளார். அதேநேரம், வரி செலுத்துவோருக்கு பயன் தரும் வகையில் ஆக.11-ல் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. TDS, TCS விரைவாகவும், எளிதாகவும் மாற்றும் வகையிலும், வீட்டுக் கடனுக்கான வட்டி டிடக்ஷனில் கூடுதல் பலன் போன்ற பல மாற்றங்களுடன் புதிய மசோதா தாக்கலாகிறது.

error: Content is protected !!