news

News November 2, 2025

திமுக ஆண்டது போதும்: அன்புமணி

image

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதை அரசு ஊழியர்கள், பெண்கள், மாணவர்கள் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று அன்புமணி சாடியுள்ளார். தமிழகத்தை திமுக ஆண்டது போதும், அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் தொண்டர்கள் மத்தியில் அவர் சூளுரைத்துள்ளார். இன்னும் 6 மாதங்களில் நமது கூட்டணி ஆட்சி வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எந்த கூட்டணியா இருக்கும்?

News November 2, 2025

ATM கட்டணத்தை உயர்த்தியது தபால்துறை

image

ATM கார்டு மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை தபால்துறை ₹3 உயர்த்தியுள்ளது. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் 3 முறைக்கு மேல், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறைக்கு மேல் பிற வங்கிகளின் ATM-களில் தபால் ATM கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தால் ₹23 மற்றும் GST வசூலிக்கப்படும். பண பரிவர்த்தனை அல்லாத பிற சேவைகளுக்கு ₹11 & GST வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

News November 2, 2025

விளம்பர சர்ச்சை: டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா PM

image

USA வரி விதிப்பு நடவடிக்கைக்காக டிரம்ப்பை விமர்சித்து கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையானது. இதனையடுத்து, கனடா உடனான அனைத்து வகை வர்த்தக பேச்சுக்களும் முடிவுக்கு வருவதாகவும், கனடாவிலிருந்து USA-க்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு, 10% கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி டிரம்ப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

News November 2, 2025

வாழ்க்கையில் ஒருமுறையாவது இங்கெல்லாம் போகணும்!

image

அனைவரும் கால்களில் சக்கரத்தை சுற்றிக்கொண்டு ஏதாவது ஒன்றை தேடி, ஓடிக்கொண்டே இருக்கிறோம். அப்படி ஓடும் அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு ஆசை, நின்று நிதானமாக எங்கேயாவது அழகிய இடத்திற்கு சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்பது. வாழ்க்கையில் ஒருமுறையாவது இங்கு செல்ல வேண்டும் என்று தோன்றும். அப்படிப்பட்ட சில இடங்கள் பற்றி அறிய மேலே ஸ்வைப் பண்ணுங்க…

News November 2, 2025

தேர்தலில் வெற்றி யாருக்கு.. புதிய கருத்துக்கணிப்பு

image

பிஹாரில் அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், JVC Poll – Times Now நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதில், நிதிஷ் தலைமையிலான NDA கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 இடங்களில் NDA 120 – 140 வரையும், தேஜஸ்வி தலைமையிலான மகாகட்‌பந்தன் (MGB) 93 – 112 இடங்கள் வரையும் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

சிக்கன், முட்டை விலை நிலவரம்!

image

ஞாயிற்றுக்கிழமையான இன்று(நவ.2) நாமக்கல் மண்டலத்தில் சிக்கன், முட்டை விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. மொத்த விலையில் கறிக்கோழி 1 கிலோ ₹106, முட்டைக்கோழி 1 கிலோ ₹108-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலிருந்த முட்டை, இந்த வாரத்தில் ₹5.40 ஆகவே நீடிக்கிறது. சென்னையில் 1 கிலோ கோழிக்கறி ₹160 முதல் ₹200 வரை விற்பனையாகிறது. உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 2, 2025

பிஹாரில் 160 தொகுதிகளில் வெற்றி உறுதி: அமித்ஷா

image

பிஹார் தேர்தலில் 243 தொகுதிகளில் குறைந்தது 160 தொகுதிகளை NDA கூட்டணி வென்று, 5வது முறையாக ஆட்சியமைக்கும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீராகியுள்ளது மக்களுக்கு தெரியும் என கூறிய அவர், இந்தியாவிலேயே அரசியல் அறிந்த மாநிலம் பிஹார் தான் என்றார். மேலும், CM வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.

News November 2, 2025

FLASH: கேன் வில்லியம்சன் T20 போட்டிகளில் இருந்து ஓய்வு!

image

நியூசி., அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச T20 போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார். 2011-ல் T20-ல் அறிமுகமான அவர், 93 போட்டிகளில் விளையாடி 33 சராசரியுடன் 2,575 ரன்களை குவித்துள்ளார். அதில் 18 அரை சதங்களும் அடங்கும். நியூசி., கேப்டனாக 75 போட்டிகளில் செயல்பட்டார். இவரது கேப்டன்சியில் 3 முறை நியூசி., T20 WC-யில் பங்கேற்றது. IPL-ல் SRH, GT அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

News November 2, 2025

‘SIR’ விவகாரத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

image

தமிழ்நாட்டில் ‘SIR’ வரும் 4-ம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில், ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. இதில், பங்கேற்க அதிமுக, தவெக உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SIR-ஐ அவசரமாக செய்யக் கூடாது. நடைமுறை சிக்கல்களை சரி செய்ய வேண்டும். SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதித் திட்டமா என பல கோணங்களில் ஆலோசிக்கப்படுகிறது.

News November 2, 2025

தங்கம், வெள்ளி விலை மேலும் குறைகிறது

image

தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான அடிப்படை விலையை மத்திய அரசு மாற்றியமைத்திருக்கிறது. இதன்படி, 10 கிராம் தங்கத்துக்கு 45 டாலர்கள், 1 கிலோ வெள்ளிக்கு 107 டாலர்கள் வரையிலும் குறைத்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த குறைப்பின் வாயிலாக தங்கம், வெள்ளி இறக்குமதியாளர்களுக்கு வரிச்சுமை ஓரளவுக்கு குறையும். அதன் எதிரொலியாக உள்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!