news

News November 2, 2025

BREAKING: விஜய் அறிவித்தார்

image

SIR-க்கு எதிராக அனைத்து கட்சியும் ஒன்றிணைய வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தவெக உறுதியாக இருப்பதாக விஜய் அறிவித்துள்ளார். அதே சமயம், SIR எதிர்ப்பை வாக்கு அரசியலுக்காக திமுக பயன்படுத்துவதாகவும், அதனால்தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார். மேலும், SIR-க்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறிய அவர், திமுக இதை செய்யாதது ஏன் எனவும் கேட்டுள்ளார்.

News November 2, 2025

ALERT: வங்கக்கடலில் மீண்டும் உருவானது புயல் சின்னம்!

image

மேலடுக்கு சுழற்சியால் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை 5.30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மரை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு நவ.5-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News November 2, 2025

340 பணியிடங்கள்; ₹40,000 முதல் சம்பளம்!

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்கள் உள்ளன. புரொபேஷனரி பொறியாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc படித்திருக்க வேண்டும். இதற்காக ₹40,000 முதல் – ₹1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். நவ.14-க்குள் <>bel-india.in<<>> -ல் அப்ளை பண்ணுங்க. வேலை தேடுவோருக்கு SHARE THIS.

News November 2, 2025

வங்கிக் கணக்கில் ₹2,000.. வந்தது புதிய அப்டேட்!

image

நீண்ட காலமாக PM கிசான் யோஜனா திட்டத்தின் 21-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு ₹2,000 வழங்கப்படும் என சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில், பிஹாரில் முதல்கட்ட தேர்தல் 6-ம் தேதி நடக்கவிருப்பதால், அதற்கு முன்னதாகவே நாளை அல்லது நாளை மறுநாள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 வரவு வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 2, 2025

அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

image

CM ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. நவம்பர் 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (SIR) தொடங்கவிருக்கிறது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள், தேமுதிக உள்ளிட்டவை பங்கேற்ற நிலையில், தவெக, நாதக உள்ளிட்ட 21 கட்சிகள் பங்கேற்கவில்லை.

News November 2, 2025

குழந்தைகள் புத்தகம் வாசிப்பது ஏன் அவசியம்?

image

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் கூட மொபைலில் தான் மூழ்கியுள்ளனர். ஏன், பெற்றோர்களே போனை கையில் கொடுக்கின்றனர். அது ஆபத்து எனக்கூறும் டாக்டர்கள், குழந்தைகளுக்கு புத்தகம் வாசிப்பதை கற்று கொடுக்க சொல்கின்றனர். புத்தகம் வாசித்தால் கவனச்சிதறல் குறையும், மன அழுத்தம் குறையும், நினைவாற்றல் அதிகரிக்கும், அறிவாற்றல் மேம்படும், சிந்தனை திறன் வலுவாகும், சொல்வளம் பெருகும் என அறிவுறுத்துகின்றனர்.

News November 2, 2025

அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த பாமக, தவெக!

image

CM ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை PMK, TVK புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SIR விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் 10 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தை ஏற்கெனவே TMC, AMMK, NTK உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதேநேரம், திமுக கூட்டணியில் இல்லாத DMDK சார்பில், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி பங்கேற்கிறார்.

News November 2, 2025

Opinion poll: பிஹாரில் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள்

image

பிஹார் தேர்தலில் எந்தெந்த கட்சி, எவ்வளவு தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற <<18175298>>கருத்துக்கணிப்பு <<>>வெளியாகியுள்ளது. அதன்படி NDA கூட்டணியில் BJP 70-81, JD(U) 42-48, LJP (RV) 5-7, HAM(S) 2, RLM 1-2 இடங்களிலும், மகாகட்‌பந்தன் (MGB) கூட்டணியில், RJD 69-78, Congress 9-17, CPI (ML) 12-14, CPI 1, CPM 1-2 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது. அதேபோல் AIMIM, BSP உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து 8-10 இடங்கள் வரை பெறலாம்.

News November 2, 2025

சற்றுமுன்: பிரபல தமிழ் நடிகர் கவலைக்கிடம்

image

பிரபல இயக்குநரும், நடிகருமான வி.சேகர் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகியுள்ளது. 1990-ல் ‘நீங்களும் ஹீரோதான்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான இவர், பல படங்களை இயக்கியதோடு, ஒருசில படங்களில் நடித்துள்ளார். வீட்டில் திடீரென மயங்கி விழுந்த வி.சேகர், தற்போது ICU-வில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் தடைப்பட்டிருப்பதால் ஆபரேஷன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News November 2, 2025

SIR மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக முயற்சி: உதயநிதி

image

SIR-ஐ திமுக கூட்டணி கட்சிகள் எதிர்த்து வரும் நிலையில், இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து பேட்டியளித்த DCM உதயநிதி, SIR மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் செய்ததுபோல, தனக்கு எதிரான வாக்குகளை நீக்குவதே பாஜகவின் திட்டம் என விமர்சித்த அவர், தமிழகத்தில் அவர்களின் முயற்சி வெற்றிபெறாது என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!