news

News November 2, 2025

வங்கிக் கணக்கில் ₹2,000.. வந்தது புதிய அப்டேட்!

image

நீண்ட காலமாக PM கிசான் யோஜனா திட்டத்தின் 21-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு ₹2,000 வழங்கப்படும் என சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில், பிஹாரில் முதல்கட்ட தேர்தல் 6-ம் தேதி நடக்கவிருப்பதால், அதற்கு முன்னதாகவே நாளை அல்லது நாளை மறுநாள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 வரவு வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 2, 2025

அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

image

CM ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. நவம்பர் 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (SIR) தொடங்கவிருக்கிறது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள், தேமுதிக உள்ளிட்டவை பங்கேற்ற நிலையில், தவெக, நாதக உள்ளிட்ட 21 கட்சிகள் பங்கேற்கவில்லை.

News November 2, 2025

குழந்தைகள் புத்தகம் வாசிப்பது ஏன் அவசியம்?

image

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் கூட மொபைலில் தான் மூழ்கியுள்ளனர். ஏன், பெற்றோர்களே போனை கையில் கொடுக்கின்றனர். அது ஆபத்து எனக்கூறும் டாக்டர்கள், குழந்தைகளுக்கு புத்தகம் வாசிப்பதை கற்று கொடுக்க சொல்கின்றனர். புத்தகம் வாசித்தால் கவனச்சிதறல் குறையும், மன அழுத்தம் குறையும், நினைவாற்றல் அதிகரிக்கும், அறிவாற்றல் மேம்படும், சிந்தனை திறன் வலுவாகும், சொல்வளம் பெருகும் என அறிவுறுத்துகின்றனர்.

News November 2, 2025

அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த பாமக, தவெக!

image

CM ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை PMK, TVK புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SIR விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் 10 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தை ஏற்கெனவே TMC, AMMK, NTK உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதேநேரம், திமுக கூட்டணியில் இல்லாத DMDK சார்பில், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி பங்கேற்கிறார்.

News November 2, 2025

Opinion poll: பிஹாரில் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள்

image

பிஹார் தேர்தலில் எந்தெந்த கட்சி, எவ்வளவு தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற <<18175298>>கருத்துக்கணிப்பு <<>>வெளியாகியுள்ளது. அதன்படி NDA கூட்டணியில் BJP 70-81, JD(U) 42-48, LJP (RV) 5-7, HAM(S) 2, RLM 1-2 இடங்களிலும், மகாகட்‌பந்தன் (MGB) கூட்டணியில், RJD 69-78, Congress 9-17, CPI (ML) 12-14, CPI 1, CPM 1-2 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது. அதேபோல் AIMIM, BSP உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து 8-10 இடங்கள் வரை பெறலாம்.

News November 2, 2025

சற்றுமுன்: பிரபல தமிழ் நடிகர் கவலைக்கிடம்

image

பிரபல இயக்குநரும், நடிகருமான வி.சேகர் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகியுள்ளது. 1990-ல் ‘நீங்களும் ஹீரோதான்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான இவர், பல படங்களை இயக்கியதோடு, ஒருசில படங்களில் நடித்துள்ளார். வீட்டில் திடீரென மயங்கி விழுந்த வி.சேகர், தற்போது ICU-வில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் தடைப்பட்டிருப்பதால் ஆபரேஷன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News November 2, 2025

SIR மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக முயற்சி: உதயநிதி

image

SIR-ஐ திமுக கூட்டணி கட்சிகள் எதிர்த்து வரும் நிலையில், இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து பேட்டியளித்த DCM உதயநிதி, SIR மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் செய்ததுபோல, தனக்கு எதிரான வாக்குகளை நீக்குவதே பாஜகவின் திட்டம் என விமர்சித்த அவர், தமிழகத்தில் அவர்களின் முயற்சி வெற்றிபெறாது என்று குறிப்பிட்டுள்ளார்.

News November 2, 2025

திமுக ஆண்டது போதும்: அன்புமணி

image

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதை அரசு ஊழியர்கள், பெண்கள், மாணவர்கள் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று அன்புமணி சாடியுள்ளார். தமிழகத்தை திமுக ஆண்டது போதும், அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் தொண்டர்கள் மத்தியில் அவர் சூளுரைத்துள்ளார். இன்னும் 6 மாதங்களில் நமது கூட்டணி ஆட்சி வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எந்த கூட்டணியா இருக்கும்?

News November 2, 2025

ATM கட்டணத்தை உயர்த்தியது தபால்துறை

image

ATM கார்டு மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை தபால்துறை ₹3 உயர்த்தியுள்ளது. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் 3 முறைக்கு மேல், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறைக்கு மேல் பிற வங்கிகளின் ATM-களில் தபால் ATM கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தால் ₹23 மற்றும் GST வசூலிக்கப்படும். பண பரிவர்த்தனை அல்லாத பிற சேவைகளுக்கு ₹11 & GST வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

News November 2, 2025

விளம்பர சர்ச்சை: டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா PM

image

USA வரி விதிப்பு நடவடிக்கைக்காக டிரம்ப்பை விமர்சித்து கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையானது. இதனையடுத்து, கனடா உடனான அனைத்து வகை வர்த்தக பேச்சுக்களும் முடிவுக்கு வருவதாகவும், கனடாவிலிருந்து USA-க்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு, 10% கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி டிரம்ப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

error: Content is protected !!