India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. தீபாவளிக்கு படத்தின் அப்டேட் ஏதாவது கிடைக்கும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், கரூர் சம்பவத்தால் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், நவம்பர் முதல் வாரத்தில் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த எட்வினா ஜேசன், பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் 55.43 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் பெண்கள் மெட்லி ரிலே போட்டியில் அவரது இறுதி ஓட்டம் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வெல்ல உதவியது. இந்நிலையில், அவருக்கு TN அரசின் ₹25 லட்சம் ஊக்கத் தொகையை, DCM உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மகளிர் ODI உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மரிசேன் கேப் படைத்துள்ளார். அவர் 44 விக்கெட்களை வீழ்த்தி, இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமியின்(43) சாதனையை முறியடித்தார். மேலும், ODI உலகக்கோப்பை பைனலுக்கு முதல் முறையாக தகுதி பெற்ற தென்னாப்பிரிக்க அணி என்ற பெருமையையும் லாரா வோல்வார்ட் தலைமையிலான SA பெண்கள் அணி படைத்துள்ளது.

நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் மோசடி நடந்துள்ளதாக ED குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக புயலை கிளப்பியுள்ளது. இதனால், செந்தில் பாலாஜி, பொன்முடியை போலவே கே.என்.நேருவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், கே.என்.நேரு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறை பணி நியமன மோசடியில் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்களின் உதவியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக ED குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே, உறுதி செய்த பட்டியல் உதவியாளர்களின் WhatsApp உரையாடலில் மீட்கப்பட்டதாகவும், ஹவாலா பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்திய ₹10 நோட்டின் படங்களை, WhatsApp-ல் பரிமாறி கொண்டதாகவும் ED கூறியுள்ளது.

மழைக்காலத்தில் அடிக்கடி ஏற்படும் காய்ச்சலில் இருந்து விடுபட மிளகு கசாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் *கைப்பிடி மிளகை வெறும் வாணலியில் வறுத்து, பிறகு அதில், 1 டம்ளர் தண்ணீர் & துளசியை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். இதனை வடிகட்டி, தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்தால், மிளகு கசாயம் ரெடி. இதனை காலை, மாலை என இரு வேளைகளுக்கு கொடுக்கலாம். SHARE IT.

நடிகர் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவுடன் இணைய உள்ளார். Time Travel கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தில் SK-வுக்கு ஜோடியாக ‘லோகா’ நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஜோடி ஏற்கெனவே ‘ஹீரோ’ படத்தில் நடித்திருந்த நிலையில், மீண்டும் இணைய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக சந்தையில் கடந்த 17-ம் தேதி புதிய உச்சமாக $4,379-க்கு விற்பனையான 1 அவுன்ஸ் தங்கம் இன்று $3,949 ஆக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பின் தாக்கத்தால் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நேற்று (அக்.29) இதன் விலை ₹2000 உயர்ந்தது. ஆனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததால், நம்மூரிலும் இன்று விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல் கொள்முதல் தொடர்பாக திமுகவை விஜய் விமர்சித்திருந்தார். இந்நிலையில், விவசாயம் பற்றி தெரியாமல் புதுப்புது தலைவர்கள் எல்லாம் அறிக்கை விடுவதாக அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். கொரோனா காலத்தில் விஜய் எங்கு சென்றார் என கேள்வி எழுப்பிய அவர், மக்களின் கஷ்ட காலத்தில் களத்தில் நிற்பவரே சிறந்த தலைவர் எனவும் தெரிவித்தார். மக்களின் முதல்வராக ஸ்டாலின் செயல்படுவதாகவும் கூறினார்.

2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்காக டிஜிட்டல் முறையில் முன்-சோதனை எடுக்கப்படவுள்ளது. வீட்டு பட்டியல் & வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவ.10 – 30 வரையிலும், நவ.1 – 7 வரையும் சுய கணக்கெடுப்பு செய்வதற்கான சோதனையும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), ஆர்.கே.பெட் (திருவள்ளூர்), மாங்காடு (காஞ்சி) ஆகிய 3 இடங்களில் முன்-சோதனை நடத்தப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.