news

News November 2, 2025

‘பூத் கமிட்டி ஆக்டிவேஷன்’ அதிமுக புது ரூட்டு!

image

அதிமுக IT விங் பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘பூத் கமிட்டி ஆக்டிவேஷன்’ பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இதில், ஒவ்வொரு பூத்துக்கும் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது. அவர்கள் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். மேலும், தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து விட்டனரா, ஓட்டு போட வரும் நபர் அந்த பகுதியை சேர்ந்தவர் தானா என்பதை ஆய்வு செய்யவார்களாம்.

News November 2, 2025

அக்டோபரில் உச்சம் தொட்ட UPI பரிவர்த்தனை!

image

கடந்த அக்டோபரில் 2,070 கோடி UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ₹27.28 லட்சம் கோடியாம். NPCI தரவுப்படி, இது செப்டம்பர் மாதத்தை விட பரிவர்த்தனையில் 5%, பண மதிப்பில் 10% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் தினமும் சராசரியாக 66.8 கோடி பரிவர்த்தனைகளும், ₹88,000 கோடி பணமும் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. நீங்க UPI மூலம் எவ்வளவு செலவு செஞ்சீங்க?

News November 2, 2025

நைஜீரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

image

நைஜீரியாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள்
கொல்லப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள USA அதிபர் டிரம்ப், அந்நாட்டுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிறிஸ்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறினால், ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். நைஜீரிய அரசு உடனடியாக செயல்படவில்லை என்றால், அனைத்து அமெரிக்க உதவிகளும் நிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 2, 2025

தொற்று ஏற்படும் அபாயம்..இந்த தைலம் யூஸ் பண்ணாதீங்க!

image

ஹாங் தாய் ஹெர்பல் இன்ஹேலர் தைலத்தில் பாக்டீரியா, பூஞ்சை கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், 2024 டிசம்பர் 9 அன்று தயாரிக்கப்பட்ட சுமார் 2 இலட்சம் இன்ஹேலர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், தாய்லாந்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதன் தயாரிப்பு நிலையங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டுவருகிறது. இதனை சுவாசிப்பதால் மூக்கு &தொண்டையில் தொற்று ஏற்படுகிறதாம் மக்களே. உஷார்! SHARE.

News November 2, 2025

நெட் இல்லாமலும் Gmail செக் பண்ணலாம்; இதோ Trick

image

முக்கியமான மெயிலை செக் பண்ணும்போது இண்டர்நெட் கட் ஆகிடுச்சுனா? கவலையவிடுங்க. Gmail-ல் மெயில்களை Offline-லயும் Access பண்ணலாம். ➤உங்கள் Laptop-ல் Gmail-ஐ Logon செய்யுங்கள் ➤செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்து ‘Quick Settings’ என்ற ஆப்ஷனை அழுத்துங்க ➤See All Settings என்ற ஆப்ஷன் காட்டும் ➤அதை க்ளிக் செய்தால் Offline என்ற ஆப்ஷன் வரும் ➤அதற்குள் சென்று Enable செய்யுங்க. பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News November 2, 2025

இன்னும் ஒரு போட்டிதான்..

image

உலகக்கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நடப்பு சாம்பியன் ஆஸி., மகளிர் அணியை வீட்டுக்கு அனுப்பி, இந்திய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துவிட்டது. இன்று தென்னாப்பிரிக்க அணியை மட்டும் வீழ்த்தி விட்டால் போதும் கோப்பை கனவை இந்தியா நிறைவு செய்து, ரசிகர்களையும் Weekend-ல் குதூகலத்தில் ஆழ்த்தி விடும். கோப்பை கனவு நிறைவேறும் என நினைக்கிறீங்களா?

News November 2, 2025

Kebab-க்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்

image

லக்னோவின் புகழ்பெற்ற அவதி உணவுக் கலாச்சாரத்துக்கு ’சிட்டி ஆஃப் காஸ்ட்ரானமி’ பட்டத்தை UNESCO வழங்கியுள்ளது. இதன்மூலம், கலூட்டி கபாப், பிரியாணி, டோக்கரி சாட் ஆகிய உணவுகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தனித்துவமான உணவுக் கலாச்சாரம், சமையல் கலையை அங்கீகரிக்கவே ’சிட்டி ஆஃப் காஸ்ட்ரானமி’ பட்டம் வழங்கப்படுகிறது. இது லக்னோவின் உணவுப் பாரம்பரியத்தை உலகளவில் பிரபலப்படுத்தும்.

News November 2, 2025

BREAKING: விஜய் அறிவித்தார்

image

SIR-க்கு எதிராக அனைத்து கட்சியும் ஒன்றிணைய வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தவெக உறுதியாக இருப்பதாக விஜய் அறிவித்துள்ளார். அதே சமயம், SIR எதிர்ப்பை வாக்கு அரசியலுக்காக திமுக பயன்படுத்துவதாகவும், அதனால்தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார். மேலும், SIR-க்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறிய அவர், திமுக இதை செய்யாதது ஏன் எனவும் கேட்டுள்ளார்.

News November 2, 2025

ALERT: வங்கக்கடலில் மீண்டும் உருவானது புயல் சின்னம்!

image

மேலடுக்கு சுழற்சியால் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை 5.30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மரை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு நவ.5-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News November 2, 2025

340 பணியிடங்கள்; ₹40,000 முதல் சம்பளம்!

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்கள் உள்ளன. புரொபேஷனரி பொறியாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc படித்திருக்க வேண்டும். இதற்காக ₹40,000 முதல் – ₹1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். நவ.14-க்குள் <>bel-india.in<<>> -ல் அப்ளை பண்ணுங்க. வேலை தேடுவோருக்கு SHARE THIS.

error: Content is protected !!