news

News April 2, 2025

வக்ஃபு நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதோரா?: அமித்ஷா

image

வக்ஃபு வாரிய நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதோர் நியமிக்கப்பட மாட்டர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இஸ்லாமியர் அல்லாதோரை வக்ஃபு நிர்வாகத்தில் நியமிக்கும் வகையில் எந்த சரத்தும் மசாேதாவில் இல்லை என்றும், 1995ஆம் ஆண்டு சட்டத்தில் கவுன்சில், போர்டு தொடர்பாக உள்ள சரத்துகள் மசோதா மூலம் திருத்தப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 2, 2025

அமெரிக்க டிவி நடிகை பேடி மலோனி காலமானார்

image

லிட்டில் ஹவுஸ் ஆன் பிரெய்ரர், ஸ்டார் வார்ஸ் ஹாலிடே ஸ்பெஷல் உள்ளிட்ட அமெரிக்க டிவி தொடர்களில் நடித்தவர் பேடி மலோனி. 2010ம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவாலும், வயோதிகம் காரணமாகவும் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் மலோனி (82) உயிரிழந்ததாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 2, 2025

சொந்த மண்ணில் திணறும் RCB

image

குஜராத் அணிக்கு எதிரான IPL போட்டியில் RCB அணி 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற GT அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய RCBயின் துவக்க வீரர் கோலி 7 ரன்களில் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி, RCB 6.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்துள்ளது.

News April 2, 2025

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்.. சட்டம் சொல்வதென்ன?

image

தீவிரவாத செயல்களில் ஈடுபடுதல் அல்லது அதற்கான முயற்சியில் இருப்போருக்கு அடைக்கலம் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 113ஆவது பிரிவின் 6ஆவது உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், அந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

News April 2, 2025

பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்…!

image

சூரிய பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகும்போது சித்திரை மாதம் (ஏப்.14) பிறக்கிறது. அதன்படி, விசுவாசுவ புத்தாண்டு தொடங்கியதும், 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறதாம். *ரிஷபம் – நிதிநிலை மேம்படும், வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். *துலாம் – எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு. *மீனம் – பழைய முதலீட்டில் லாபம் கிடைக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

News April 2, 2025

விற்பனையில் நம்பர் 1 இடத்தை பிடித்த வேகன்ஆர்

image

2024-25 நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் என்ற சாதனையை மாருதி சுசூகியின் வேகன்ஆர் பெற்றுள்ளது. வேகன்ஆர் மாடல் கார் 1.98 விற்பனையாகியுள்ளன. இதற்கடுத்து 2ஆவது அதிகபட்சமாக டாடாவின் பன்ச் கார்கள் 1.96 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிறகு ஹூயின்டாயின் கிரேட்டா கார்கள் 1.94 லட்சமும், மாருதியின் எர்டிகா 1.90 லட்சமும், பிரெஸா 1.89 லட்சமும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நீங்கள் எந்த கார் வாங்கினீர்கள்?

News April 2, 2025

மீண்டும் ரயில் தடம் புரண்டது

image

ஆந்திராவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசாகப்பட்டினத்தில் இருந்து சம்பல்பூர் சென்ற நாகவள்ளி எக்ஸ்பிரஸ் ரயில், விஜயநகரம் அருகே தடம்புரண்டது. அந்த நேரத்தில் ரயில் மெதுவாக சென்றதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் ஒடிஷாவில் ரயில் தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News April 2, 2025

பணியின் இறுதிநாளில் உயிரை விட்ட சோகம்…!

image

ஜார்கண்ட் ரயில் விபத்தில் உயிரிழந்த லோகோ பைலட்டுக்கு அன்றுதான் கடைசி பணி நாள் என்ற சோக செய்தி வெளியாகியுள்ளது. சரக்கு ரயில்கள் நேற்று மோதிய விபத்தில் 2 லோகோ பைலட்டுகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். அதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கங்கேஸ்வர் மாலும் ஒருவர். மகிழ்ச்சியுடன் ஓய்வு நாட்களை கழித்திருக்க வேண்டிய அவர், இப்போது உயிருடன் இல்லை. பணியின் கடைசி நாள், அவரது வாழ்வின் கடைசி நாளாக மாறியுள்ளது.

News April 2, 2025

தட்கல் டிக்கெட் கேன்சல்.. பணம் திருப்பி தரப்படுமா?

image

ரயிலில் அவசர பயணத்திற்காக தட்கல் டிக்கெட் வசதி அமலில் உள்ளது. ஆனால் இந்த டிக்கெட்டை ஏதேனும் காரணத்திற்காக பயணிகள் கேன்சல் செய்தால், டிக்கெட்டுக்கான பணம் திருப்பித் தரப்படுமா, தரப்படாதா என சந்தேகம் இருக்கும். தட்கல் டிக்கெட் கன்பர்ம் ஆகியிருந்தால், அதற்கான பணம் திருப்பித் தரப்படாது. ஆனால் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் எனில், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டபிறகு பணம் திருப்பித் தரப்படும்.

News April 2, 2025

CISFஇல் 1,161 காலியிடங்கள்.. நாளையே கடைசி நாள்

image

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) உள்ள 1,161 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். கான்ஸ்டபிள் நிலையிலான இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி <>cisfrectt.cisf.gov.in.<<>> என்ற இணையதளத்தில் நடைபெறுகிறது. இந்த வேலைக்கான கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பாக 18-23 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SHARE IT.

error: Content is protected !!