news

News April 3, 2025

வக்ஃபு விவகாரம்.. காங். MLA மரண எச்சரிக்கை

image

வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறினால் உயிரை மாய்த்து கொள்வேன் என பீகார் காங். MLA இஷார்குல் ஹுசைன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்னை மட்டும் அல்ல, அடுத்ததாக குருத்வாரா, தேவாலயங்கள், கோயில்களின் நிலங்களை கைப்பற்ற அரசு இதுபோன்றதொரு மசோதாவை கொண்டுவரும் எனவும் அவர் கூறியுள்ளார். முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இப்படி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News April 3, 2025

இந்தியாவில் அதிகம் வாங்கப்பட்ட கார் இதுதான்

image

இந்தியாவில் அதிக பயணிகள் வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுசூகி முதலிடத்தில் உள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 17.60 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதற்கு அடுத்ததாக ஹுண்டாய் 5.98 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக 1.98 லட்சம் பேர் மாருதி சுசூகி வேகன் ஆர் காரை வாங்கியுள்ளனர். 1.96 லட்சம் பேர் டாடா பன்ச் காரை வாங்கியுள்ளனர்.

News April 3, 2025

கர்நாடகாவில் பைக் டாக்சிக்கு தடை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

image

கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களின் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்க அந்த மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்சி இயக்குதலுக்கான தனி விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்கவும் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அதேபோல், பைக் டாக்சிக்கான உரிய சட்டங்கள் வரும்வரை பைக்குகளை வணிக போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க உத்தரவிட முடியாது எனவும் கூறியுள்ளது.

News April 3, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 03) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 3, 2025

USA அதிபராக 4 முறை பதவி வகித்த 2ம் உலகப் போர் ஹீரோ

image

USA அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அதிபராக முடியும். ஆனால் அதிபர் டிரம்ப், 3ஆவது முறை அதிபராவேன் என கூறி வருகிறார். இது சாத்தியமா? இதற்கு முன், 3 முறை அதிபராக யாரும் இருந்துள்ளனரா? என்ற கேள்விக்கு ஆம் என்பதே பதிலாகும். எப்.டி. ரூஸ்வெல்ட் 1933-1945 வரை 4 முறை பதவி வகித்துள்ளார். பாெருளாதார மந்தநிலை, 2ம் உலக போரே அவர் 4 முறை அதிபராக தேர்வாக காரணமாக அமைந்தது.

News April 3, 2025

வக்ஃப் சொத்துகள் எவ்வளவு தெரியுமா?

image

இஸ்லாமியர்களால் தானமாக வழங்கப்படும் வக்ஃப் சொத்துகளை, அச்சமூகத்தினரே நிர்வகிக்கின்றனர். இச்சொத்துகளை நிரந்தரமாக குத்தகைக்கு விடவோ, விற்கவோ முடியாது. விவசாய நிலங்கள் முதல் கல்வி நிலையங்கள் வரை, வக்ஃப் வாரிய கட்டுப்பாட்டில் சுமார் 9.4 லட்சம் ஏக்கர் நிலம் (ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பு) உள்ளது. ரயில்வே, ராணுவத்துக்கு அடுத்து, நாட்டில் அதிக நிலம் வைத்துள்ள உரிமையாளர் வக்ஃப் வாரியம் தான்.

News April 3, 2025

தென்னிந்தியாவில் பேய் மழை கொட்ட போகுது: IMD

image

மத்திய மற்றும் தென்னிந்தியாவில் அடுத்த சில நாட்களில் கன மழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. கேரளா, மாஹே, தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அப்போ, குடையை எடுத்து ரெடியா வைங்க.

News April 3, 2025

வக்ஃப் சொத்து என்பது என்ன?

image

வக்ஃப் சட்டம் 1995-ன் படி, எந்தவொரு முஸ்லிமும் தனது அசையும் மற்றும் அசையா சொத்துகளை கடவுளின் (அல்லாஹ்) பெயரில் பக்தி, தர்மம் அல்லது மத நோக்கத்திற்காக நிரந்தரமாக அர்ப்பணித்தால், அத்தகைய அர்ப்பணிப்பு வக்ஃப் என்றும், அத்தகைய சொத்து வக்ஃப் சொத்தும் எனவும் அழைக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் வழங்கும் இந்த சொத்துகளை அச்சமூகத்தினரே நிர்வகிக்கின்றனர். இதற்காக மத்திய, மாநில வக்ஃப் வாரியங்கள் உள்ளன.

News April 3, 2025

ராசி பலன்கள் (03.04.2025)

image

➤மேஷம் – உறுதி ➤ரிஷபம் – பெருமை ➤மிதுனம் – சுகம் ➤கடகம் – உயர்வு ➤சிம்மம் – தெளிவு ➤கன்னி – சுபம் ➤துலாம் – இரக்கம் ➤விருச்சிகம் – அலைச்சல் ➤தனுசு – பயம் ➤மகரம் – அமைதி ➤கும்பம் – குழப்பம் ➤மீனம் – சாதனை.

News April 3, 2025

வக்ஃப் (திருத்த) சட்ட மசோதா என்பது என்ன?

image

நாடு முழுவதும் உள்ள வக்ஃப் வாரியங்களின் செயல்பாட்டை திருத்தியமைத்து, அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்பை உறுதிப்படுத்த புதிய சட்ட மசோதா வழி செய்கிறது. இதற்காக1995-ல் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு கூடுதல் உரிமைகள் வழங்கவும் இதில் வழி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!