news

News April 3, 2025

கோலி வசமான IPL வரலாற்றின் மிக மோசமான சாதனை

image

IPL தொடரில் இதுவரை அதிக போட்டிகளில் தோல்வியடைந்த வீரர் என்ற மிக மோசமான சாதனை விராட் கோலி வசமாகியுள்ளது. இதுவரை 255 IPL போட்டிகளில் விளையாடிய அவர், 127ல் தோல்வியடைந்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் தினேஷ் கார்த்திக் (125), ரோஹித் (123), தோனி (112) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதென்னடா கிங்கிற்கு வந்த சோதனை என RCB ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

News April 3, 2025

இந்தியாவில் எந்தெந்த துறைகள் பாதிக்கும்?

image

டிரம்பின் அதிரடி வரி விதிப்பால் இந்திய ஜவுளிகள், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஜினியரிங் பொருட்கள் மற்றும் நகை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 26% வரி விதிப்பால், இந்த துறைகள் உடனடியாக பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது. மருந்து பொருட்கள் ஏற்றுமதி பாதிக்குமா என்பது போக, போகத் தான் தெரியுமாம். இதனால், இந்திய பொருளாதாரத்திலும் பாதிப்பு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

News April 3, 2025

‘Ghibli’ செய்வோர் ஜாக்கிரதை.. சைபர் கிரைம் எச்சரிக்கை

image

சோஷியல் மீடியாக்களில் உங்களது புகைப்படங்களை பயன்படுத்தி மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். டிரெண்டிங் மோகத்தில் நீங்கள் பதிவிடும் போட்டோ, பிறந்தநாள் தகவல்களை திருடி, அனுமதியின்றி உங்கள் தரவுகளை எடுக்க முடியும். இதனால், விழிப்போடு இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. தற்போது டிரெண்டாகும் OpenAI ஜிபிலி செய்தவர்கள் அவர்களது போட்டோ, DOB பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

News April 3, 2025

எந்த நாட்டுக்கு அதிக வரி விதிப்பு?

image

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பில் எந்த நாட்டிற்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? கம்போடியாவுக்கு. மிக அதிகமாக 49% வரி விதிக்கப்பட்டுள்ளது. லாவோஸ் 48%, மடகாஸ்கர் 47%, வியட்நாம் 46%, இலங்கை, மியான்மர் நாடுகளுக்கு முறையே தலா 44% வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஆஸ்திரேலியா, சிலி, கொலம்பியா, சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2025

சீரியலில் நடிக்க நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்ட்?

image

நடிகை ரவீனா ‘சிந்து பைரவி’ தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி, பிறகு 2 ஹீரோயின் கதை என்பது தெரிந்து, அதிலிருந்து விலகினார். இதனால், தயாரிப்பு நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் அவருக்கு சீரியல்களில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டதாக தகவல் பரவியது. இதற்கு விளக்கமளித்த ரவீனா, புகார் அளிக்கப்பட்டது உண்மைதான், ஆனால் பிரச்னையைப் பேசி தீர்த்தாகி விட்டது என்றும், சீரியலில் நடிக்க தடை இல்லை எனவும் கூறி இருக்கிறார்.

News April 3, 2025

இஸ்லாமியர்களை பயமுறுத்தும் திமுக: நயினார் நாகேந்திரன்

image

மத்திய அரசு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் திமுக திட்டமிட்டு எதிர்ப்பதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில், பேரவையை போராட்டக் களமாக <<15975951>>CM ஸ்டாலின்<<>> மாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு செயல்படுவதாகவும் விமர்சித்தார்.

News April 3, 2025

லாலு பிரசாத் கவலைக்கிடம்

image

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் (76) உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருதய நோயாளியான அவருக்கு, வேறு சில உடல் உபாதைகளும் உள்ளன. பாட்னா ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனையடுத்து, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ்-க்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

News April 3, 2025

மூக்கையாவுக்கு மணிமண்டபம்; கார்ல் மார்க்ஸூக்கு சிலை

image

உசிலம்பட்டியில் வி.கே.மூக்கையா தேவருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்தார். பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றிய அவர், நியாயத்திற்கு ஒரு மூக்கையா என அண்ணா புகழாரம் சூட்டியதை நினைவுகூர்ந்தார். அதே போல், கார்ல் மார்க்ஸ் சிலையும் சென்னையில் நிறுவப்படும் என அறிவித்தார்.

News April 3, 2025

வெள்ளி விலை கிலோவுக்கு ₹2,000 குறைந்தது

image

சென்னையில் வெள்ளி விலை இன்று (ஏப்.3) கிராமுக்கு 2 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ₹112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ₹2,000 குறைந்து ₹1,12,000க்கும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு விலை உயர்வைக் கண்டு வந்த வெள்ளி, இன்று <<15975872>>தங்கம்<<>> விலை உயர்ந்தபோதும் விலை சரிவைக் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

News April 3, 2025

போர் அடிக்குது’னு ரீல்ஸ் பாக்குறீங்களா..?

image

தொடர்ந்து ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருப்பதும் ஒருவித போதைக்கு அடிமையான நிலை தான் என மனநல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக, brain rot (மனநல குறைபாடு) மற்றும் கண் நோய்கள் அதிகரிக்கிறதாம். குழந்தைகளில் சுறுசுறுப்பு தன்மை குறைந்து, dry eye syndrome பாதிப்பு அதிகரிக்கிறதாம். மேலும், பெரியவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை பிரச்னைகள் உண்டாகிறதாம். SHARE IT.

error: Content is protected !!