India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்றைய PM மோடி, 2012-ல் குஜராத் CM-மாக இருந்தபோது பேசியதை, இன்று CM ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். மத்திய அரசு நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்துகிறது என்றும், மத்திய- மாநில உறவுகளுக்கான சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளையும், மத்திய-மாநில நிதிசார் உறவுகள் தொடர்பான நீதிபதி மதன்மோகன் கமிஷன் பரிந்துரைகளையும் மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும் எனவும் அப்போது மோடி வலியுறுத்தியிருந்தார்.
வில்வித்தை பயிற்சியாளரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார். ஹுசைனி உயிரிழக்கும் முன்பு, தனது வீட்டை அவரிடம் தற்காப்புக் கலை பயின்ற ஆந்திர துணை முதல்வரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாணுக்கு எழுதி வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீட்டை தனது நினைவிடமாக மாற்ற ஹுசைனி கோரிக்கை விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணியும் சற்றுநேரத்தில் ஈடர்ன் கார்டன் மைதானத்தில் மல்லுக்கட்ட ரெடியாகி வருகின்றன. கடந்த ஐபிஎல் ஃபைனலில் ஹைதராபாத்தை வீழ்த்தியே கொல்கத்தா அணி கோப்பையை வென்றது. இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை மோதிய நிலையில், கொல்கத்தா 19 முறை, ஹைதராபாத் 9 முறை வென்றுள்ளன. இன்னைக்கு யார் ஜெயிப்பாங்க?
ரயில் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்கையில் சில நேரம் வெயிட்டிங் லிஸ்ட் வரும். அந்த டிக்கெட்டில் நாம் பயணிக்க முடியாது. எனினும் டிக்கெட் கன்பர்ம் ஆகும் என்ற நம்பிக்கையில் பயணிகள் அதை வைத்திருப்பர். அந்த டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு கவுன்டரில் கொடுத்து கேன்சல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பணம் திருப்பி தரப்படும். இல்லையேல் பணம் திருப்பித் தரப்பட மாட்டாது.
திமுக கூட்டணியை பிளவுப்படுத்த முடியாது என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய அவர், கூட்டாட்சி என்பது ஒன்றிய அரசுக்கு அலர்ஜியாகி விட்டதாக விமர்சித்தார். மாநில உரிமையை மத்திய அரசு விரும்பவில்லை எனவும், மத்திய பாஜக அரசால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தமிழகமும், கேரளாவும்தான் என்றும், மாநில சுயாட்சி, திமுகவின் உயர்க் கொள்கை என்றும் கூறினார்.
வார இறுதிநாள் விடுமுறையையொட்டி, 627 சிறப்பு பஸ்களை 2 நாட்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இன்று 245 பஸ்களும், நாளை 240 பஸ்களும் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து இன்றும், நாளையும் தலா 51 பஸ்களும் இயக்கப்படுகின்றன. மேலும், மாதவரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இன்றும், நாளையும் தலா 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. SHARE IT.
சொத்து விவரங்களை பொது வெளியில் வெளியிட சுப்ரீம் கோர்ட் (SC) நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். அண்மையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் ஷர்மா வீட்டில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதனால் சர்ச்சை உருவான நிலையில், டெல்லியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சொத்து விவரங்களை சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.
அமெரிக்க பாடகி உட்பட 6 பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவுடன் ஏப். 14-ல் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. தொழிலதிபர் ஜெப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், மனிதர்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்பி வருகிறது. இதுவரை 10 முறை சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், 11-வது முறையாக செல்லும் குழுவில் பெண்கள் மட்டுமே உள்ளனர். அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்ட 6 பேருடன் ராக்கெட் ஏவப்பட உள்ளது.
வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். பாஜக அரசின் பிளவுவாத அரசியல், இஸ்லாமிய சகோதரர்களை பாதுகாப்பற்ற நிலையிலும், அச்சத்திலும் உறைய வைத்திருக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனநாயக விழுமியங்களை மறுக்கும் பாஜக அரசை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இம்மசோதாவை திரும்ப பெறாவிட்டால் தவெக போராடும் எனவும் எச்சரித்துள்ளார்.
கைலாசா நாடு இருப்பதையே பலரும் ஏற்கவில்லை. அதற்குள் நித்தியானந்தா உயிருடனேயே இல்லை என்ற செய்தியும் பரவியது. இதனால், அவர் நேரலையில் வந்து விளக்கம் அளித்தார். அப்போது, உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் 2 வருடமாக ஈடுபட்டு வருவதால், நேரலையில் வருவதை குறைத்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை அறிந்து, ‘என் தலைவன் AI வரைக்கும் போயிட்டார்’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.