India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாக உள்ளதாக அப்படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியா அல்லது டிரெய்லர் குறித்த அப்டேட்டா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எது வந்தாலும் சரி என கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், இசைப்பணிகளும் முடிந்துவிட்டன.
பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாழ்நாள் முழுக்க சிறப்பு தரிசனம் செய்ய தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கினால், வாழ்நாள் முழுவதும் ஆண்டுக்கு 4 முறை சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்களாம். ஒவ்வொரு முறையும் வேத ஆசிர்வாதம், 5 கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளி டாலர் வழங்கப்படுமாம். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?
3 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 20 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற சாதனையை கொல்கத்தா அணி படைத்துள்ளது. ஹைதராபாத் அணியுடனான நேற்றையை போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், SRH எதிராக 20 வெற்றிகளை கொல்கத்தா அணி பதிவு செய்துள்ளது. அதேபோல், பஞ்சாப் அணிக்கு எதிராக 21 வெற்றிகளையும், பெங்களூரு அணிக்கு எதிராக 20 வெற்றிகளையும் அந்த அணி பதிவு செய்துள்ளது.
*1855 – தமிழறிஞர் மனோன்மணீயம் சுந்தரனார் பிறந்தநாள். *1905 – ஹிமாச்சலப் பிரதேசம், காங்ரா, தரம்சாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர். 1972 – காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் இறந்த தினம். *1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், பவுல் ஆலன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. *1976 – நடிகை சிம்ரன் பிறந்தநாள். *1979 – ‘ஜோக்கர்’ புகழ் கீத் லெட்ஜர் பிறந்தநாள்.
தங்களுக்கு 25 வயதில் பையன் இருந்தும், அப்பா கேரக்டரில் நடிக்க சில ஹீரோக்கள் தயங்குவதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ கதை பல ஹீரோக்களிடம் சொல்லப்பட்ட பிறகே தன்னிடம் வந்ததாகவும், கதை பிடித்திருந்ததால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபகாலத்தில் கேட்ட கதைகளிலேயே இந்த கதைதான் முழுத் திருப்தியை தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வேலையில்லாத இளைஞர்களை பணக்காரர்களின் டெலிவரி ஏஜெண்ட்களாக மாற்றுவதுதான் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வேலையா என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பியுள்ளார். சீன ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செமி கண்டக்டர், ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துவதாகவும், இந்திய நிறுவனங்களும் எதிர்கால தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
டார்க் வெப்பில் குழந்தைகள் ஆபாச வீடியோ தளமான Kidflix-ஐ ஜெர்மன் அதிகாரிகள் முடக்கியுள்ளனர். உலகம் முழுவதும் 18 லட்சம் பேர் இந்த வீடியோக்களை பார்த்ததும், குழந்தைகளை துன்புறுத்தி வீடியோக்களை அப்லோடு செய்ததும் தெரியவந்துள்ளது. மொத்தம் 72,000 வீடியோக்கள் இந்த தளத்தில் இருந்துள்ளது. 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 நாடுகளின் உதவியோடு ஜெர்மன் அதிகாரிகள் இந்த ஆப்ரேஷனை முடித்துள்ளனர்.
*உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்துத்தான் முன்னேற்றமோ வீழச்சியோ ஏற்படுகிறது. *மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் நிவர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் ஒருபோதும் தேவையில்லை. *.சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள்.
பாகிஸ்தானை ‘ஹிந்து ராஷ்டிரா’-வாக மாற்றுவோம் என மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவை ‘ஹிந்து பாகிஸ்தான்’ என மாற்ற விரும்புவதாக தாக்கரே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், ரானே இவ்வாறு பதிலளித்துள்ளார். முன்னதாக, கேரளாவை குட்டி பாகிஸ்தான் எனவும், அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என கூறியவர்தான் ரானே.
பெங்களூருவைச் சேர்ந்த OkCredit நிறுவன CEO ஹர்ஷ் போகர்னா செய்த செயல், மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்துள்ளது. தனது நிறுவனம் பொருளாதார சிக்கலில் தள்ளாட, 70 பேரை அவர் பணிநீக்கம் செய்துள்ளார். ஆனால், அவர்களின் நோட்டீஸ் பீரியட் முடிவதற்குள் 67 பேருக்கு மற்ற நிறுவனங்களில் வேலை வாங்கி தந்துள்ளார். மீதமுள்ள 3 பேருக்கு 2 மாத சம்பளம் வழங்கி வழியனுப்பி வைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.