news

News April 4, 2025

ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கை ஒட்டி, இன்று (ஏப்.4) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த மாதம் 10ஆம் தேதி வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News April 4, 2025

ப்ளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடக்கம்

image

ப்ளஸ் 2 தேர்வு எழுதிய 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. இப்பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், 46 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இப்பணிகள் வரும் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், மே 9ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும் எனவும் கூறியுள்ளனர்.

News April 4, 2025

தமிழகம் முழுவதும் தவெக இன்று ஆர்ப்பாட்டம்

image

வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக TVK சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். ஆட்சி அதிகாரம் இருந்தால், எந்தவொரு சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற மனநிலை கொண்ட ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த கதி வரலாற்றில் உள்ளதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கையில் எடுத்துள்ளதாக பாஜக அரசையும் அவர் கண்டித்துள்ளார்.

News April 4, 2025

‘நம்ம சாலை’ செயலி மூலம் 13,300 புகார்களுக்கு தீர்வு!

image

விபத்தில்லா மாநிலம் என்ற கனவை நனவாக்க கடந்த 2023ல் TN அரசு ‘நம்ம சாலை’ செயலியை அறிமுகம் செய்தது. இதன்மூலம் 13,300 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. குண்டும் குழியுமான சாலைகளை கண்டதும் ஃபோட்டோவுடன் செயலியில் பதிவேற்ற வேண்டும். பழுது பார்த்த ஃபோட்டோ புகாரளித்த நபரின் ஃபோனுக்கு அனுப்பப்படும். யாருக்காவது அப்படி ஃபோட்டோ வந்திருந்தால் பகிருங்கள்!

News April 4, 2025

ஒரு நாள் முழுவதும் செம எனர்ஜியா இருக்கணுமா?

image

ஒரு நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட கீழ்காணும் உணவுகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், இயற்கை சர்க்கரை, கார்போஹைட்ரேட் உடனடி ஆற்றலை கொடுக்கிறது. பாதாமில் உள்ள மெக்னீசியமும் புரதமும் எனர்ஜி பூஸ்டர் என அழைக்கப்படுகிறது. முட்டையில் உள்ள புரதம் தசைகளை வலுப்படுத்தும். பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து உடனடி ஆற்றலைத்தரும்.

News April 4, 2025

‘கூலி’ படத்தின் மாஸ் அப்டேட் இன்று

image

ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாக உள்ளதாக அப்படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியா அல்லது டிரெய்லர் குறித்த அப்டேட்டா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எது வந்தாலும் சரி என கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், இசைப்பணிகளும் முடிந்துவிட்டன.

News April 4, 2025

இத பண்ணா… திருப்பதியில் வாழ்நாள் சிறப்பு தரிசனம்!

image

பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாழ்நாள் முழுக்க சிறப்பு தரிசனம் செய்ய தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கினால், வாழ்நாள் முழுவதும் ஆண்டுக்கு 4 முறை சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்களாம். ஒவ்வொரு முறையும் வேத ஆசிர்வாதம், 5 கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளி டாலர் வழங்கப்படுமாம். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?

News April 4, 2025

IPL-ல் வரலாறு படைத்த KKR

image

3 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 20 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற சாதனையை கொல்கத்தா அணி படைத்துள்ளது. ஹைதராபாத் அணியுடனான நேற்றையை போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், SRH எதிராக 20 வெற்றிகளை கொல்கத்தா அணி பதிவு செய்துள்ளது. அதேபோல், பஞ்சாப் அணிக்கு எதிராக 21 வெற்றிகளையும், பெங்களூரு அணிக்கு எதிராக 20 வெற்றிகளையும் அந்த அணி பதிவு செய்துள்ளது.

News April 4, 2025

ஏப்ரல் 04: வரலாற்றில் இன்று

image

*1855 – தமிழறிஞர் மனோன்மணீயம் சுந்தரனார் பிறந்தநாள். *1905 – ஹிமாச்சலப் பிரதேசம், காங்ரா, தரம்சாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர். 1972 – காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் இறந்த தினம். *1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், பவுல் ஆலன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. *1976 – நடிகை சிம்ரன் பிறந்தநாள். *1979 – ‘ஜோக்கர்’ புகழ் கீத் லெட்ஜர் பிறந்தநாள்.

News April 4, 2025

டாப் ஹீரோக்களை பொளந்து விட்ட சசிகுமார்

image

தங்களுக்கு 25 வயதில் பையன் இருந்தும், அப்பா கேரக்டரில் நடிக்க சில ஹீரோக்கள் தயங்குவதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ கதை பல ஹீரோக்களிடம் சொல்லப்பட்ட பிறகே தன்னிடம் வந்ததாகவும், கதை பிடித்திருந்ததால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபகாலத்தில் கேட்ட கதைகளிலேயே இந்த கதைதான் முழுத் திருப்தியை தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!