news

News November 2, 2025

SIR மேற்கொள்வதில் அவசரம் ஏன்?: கமல்

image

தகுதியான ஒருவரின் பெயர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். CM ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அவர், வாக்களர் பட்டியலை சரிபார்ப்பது அவசியம்தான் ஆனால் அதில் அவசரம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 2026 தேர்தலுக்கு பிறகே SIR பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 2, 2025

மெஸ்ஸியின் டூரில் அதிரடி மாற்றம்

image

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி டிசம்பர் இந்தியா வரவுள்ளார். கொச்சியில் கால்பந்து விளையாட்டில் பங்கேற்க இருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டு, சுற்றுப்பயணத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அட்டவணையில் முதலில் அகமதாபாத் நகருக்கு அவர் செல்வதாக இருந்த நிலையில், புதிய அட்டவணையில் அகமதாபாத்துக்கு பதிலாக, அவர் ஹைதராபாத் வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் சென்னைக்கும் வந்திருக்கலாம்ல?

News November 2, 2025

நடிகர் அஜித்துக்கு உதயநிதி ரியாக்‌ஷன்

image

கரூர் துயர சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் கூறியது எந்த கருத்தாக இருந்தாலும் அது பாராட்டதக்கதுதான் என DCM உதயநிதி கூறியுள்ளார். ஆனாலும், இதற்கு முறையாக யார் பேட்டி கொடுக்கனுமோ அவர் இன்னும் கொடுக்கவில்லை என்றார். முன்னதாக அஜித்குமார் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கரூர் துயர சம்பவத்தில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாகவும், தனி ஒருவர் மீது குறை கூறுவது நியாயமாகாது எனவும் பேசியிருந்தார்.

News November 2, 2025

அய்யோ சாமி! BREAKING NEWS ஆக்காதீங்க! செல்லூர் ராஜு

image

செங்கோட்டையன் நீக்கம் குறித்து செல்லூர் ராஜு விளக்கமளித்தார். அப்போது, எனக்கும்தான் மன வருத்தம் இருக்கும், அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது; அதை EPS-யிடம் தான் கூற வேண்டும் என்றார். உடனே, உங்களுக்கு என்ன மனவருத்தம் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். சுதாரித்துக் கொண்ட அவர், எனக்கு மனவருத்தம் இல்லை; EPS என்னை நன்றாக வைத்துள்ளார். இதை ஒரு BREAKING NEWS-ஆக போட்டு விடாதீங்க என கேட்டுக்கொண்டார்.

News November 2, 2025

3-வது T20: இந்தியா பவுலிங்.. அணியில் 3 மாற்றங்கள்!

image

ஓவல் மைதானத்தில் நடக்கும் 3-வது T20-யில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சஞ்சு, ராணா, குல்தீப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர். பிளேயிங் XI: அபிஷேக் சர்மா, கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஜிதேஷ், துபே, அக்சர், சுந்தர், அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி, பும்ரா.

News November 2, 2025

SIR-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு!

image

தேர்தல் ஆணையம் SIR-ஐ திரும்ப பெறவில்லை என்றால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், SIR-ஐ ஏற்க முடியாது எனவும், இது வாக்குரிமைக்கு எதிரானது, சட்டவிரோதமானது எனவும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

News November 2, 2025

SIR-ஐ கடுமையாக எதிர்க்க வேண்டும்: திருமா

image

வாக்களர் பட்டியலைச் சீர்செய்வது என்பதைவிட, குடியுரிமையைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே கருதவேண்டி உள்ளதாக SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் திருமா தெரிவித்துள்ளார். அதாவது, CAA, NRC ஆகிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில்தான் தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது. எனவே, SIR நடவடிக்கையை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டுமென அனைத்து கட்சிகளிடமும் வலியுறுத்தினார்.

News November 2, 2025

இந்தாண்டு இறுதிக்குள் வருகிறது பறக்கும் கார்!

image

இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகப்படுத்தி டெமோ காட்டவுள்ளதாக SpaceX தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த டெமோ நிகழ்ச்சி தொழில்நுட்ப வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், இது பறக்கும் கார் தானா அல்லது என்னவென்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். என்னவா இருக்கும்?

News November 2, 2025

கரூரில் வியாபாரிகளை விசாரிக்கும் CBI

image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக CBI தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2 நாள்களாக விஜய் பேசிய இடத்தை அளவீடு செய்தனர். 3-வது நாளான இன்று வேலுச்சாமிபுரத்தில் உள்ள வியாபாரிகள் 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களுக்கு ஏற்கெனவே CBI சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று ஆஜராகினர். 8 பேரிடம் சம்பவம் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.

News November 2, 2025

BREAKING: SIR-ஆல் தமிழ்நாட்டிற்கு பெரிய ஆபத்து

image

SIR பணிகளால் தமிழ்நாட்டிற்கு பெரிய ஆபத்து ஏற்படும் என வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த பணிகளால் வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வாக்களிக்கும் நிலை உருவாகும் எனவும், இதனால் தமிழர்களின் உரிமை பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் திருமா, பெ.சண்முகம், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்களும் SIR பணிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!