India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

Whatsapp-ல் கடந்த சில நாள்களாக, RTO Challan என்ற பெயரில் மெசேஜ் வருகிறது. அதில், உங்க வண்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, உடனே Check பண்ணுங்க, இல்லையேல் FIR போடப்படும் என தகவலும் சேர்த்து அனுப்பப்படுகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால், ஒரு APK File டவுன்லோடாகி, போனில் இருக்கும் அனைத்து தகவலையும் திருடி விடுவதாக கூறப்படுகிறது. எனவே, இது போன்ற மெசேஜுகள் வந்தால், மக்களே உஷாரா இருங்க. SHARE IT.

அனைவருக்கும் ஓரளவு சமைக்க முடியும். ஆனால், சிலரால் மட்டுமே சுவையாக சமைக்க தெரியும். ஆனால், இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. உங்களின் உணவும் டெஸ்ட்டியாக இருக்க, சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்து டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள். அதே போல, உங்களுக்கு தெரிஞ்ச சில சமையல் டிப்ஸையும் கமெண்ட் பண்ணுங்க.

இந்தியாவுக்கு எதிரான 3-வது T20-ல் ஆஸி.,யின் டிம் டேவிட் அதிரடி காட்டி வருகிறார். இதுவரை 3 சிக்ஸர், 7 பவுண்டரி பறக்கவிட்டுள்ளார். தற்போது 10 ஓவர்களில் ஆஸி., அணி 84/4 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. டிராவிஸ் ஹெட், இங்கிலிஸ், ஓவன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அரைசதம் கடந்துள்ள டிம் டேவிட் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளார். மேலும், T20I-களில் அவர் 1,000 ரன்களை கடந்துள்ளார்.

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரில் El கேரக்டரில் நடித்த மில்லி பாபி ப்ரவுன், டேவிட் ஹார்பர் மீது bullying, harassment குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் கசிந்துள்ளது. இறுதி சீசன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், அவர் இதுகுறித்து NETFLIX-யிடம் புகார் அளித்திருக்கிறார். இதன் மீதான விசாரணை மாதக்கணக்கில் நடந்ததாக கூறப்படுகிறது. இது பாலியல் ரீதியான குற்றச்சாட்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SIR தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம், CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, நியாயமான முறையில் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அருகே ஹண்டிங்டன் ரயிலில் சென்றுகொண்டிருந்த பயணிகள் மீது சரமாரியாக கத்திகுத்து தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தால் பலத்த காயங்களுடன் 10 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ரயிலில் நடந்த கொடூரமான சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது என UK PM கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை முதல் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என TN அரசு அறிவித்துள்ளது. முக்கிய அம்சமாக, முதியோர்களின் வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 70 வயதை கடந்தவர்களுக்கு வீடு தேடி பொருள்கள் வழங்கப்பட இருந்தது. தற்போது, 65 வயது நிரம்பினாலே ரேஷன் பொருள்கள் வீட்டிற்கே கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும் அதன் பயனையும் நேரடியாக விவசாயிகளின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்கிறது உழவரைத் தேடி வேளாண்மை திட்டம். இதன் கீழ், விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது & 4-வது வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த கிராமங்களில் நடக்கும். விவசாயிகளே, உங்களுக்கு சந்தேகங்கள், கோரிக்கைகள் இருந்தால் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம். அனைவரும் தெரிந்துகொள்ள SHARE THIS.

எங்காவது வைத்துவிட்டால், அவசரத்துக்கு தேட முடியாது என்ற காரணத்தால், பல பெண்களும் தாலியில் Safety Pin-ஐ மாட்டி வைப்பார்கள். ஆனால், இரும்பினால் செய்யப்படும் Safety pin-ஐ தாலியுடன் கோர்த்து வைத்திருப்பது நல்லதல்ல என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஜோதிடத்தின் படி, இரும்பு சனி பகவானின் பார்வை பெற்ற உலோகமாகும். இது எதிர்மறை ஆற்றலை கொடுக்கும் என்பதால், தாலியுடன் போட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். SHARE IT.

குடும்பங்கள் கொண்டாடும் படங்களை இயக்கிய இயக்குநர் வி.சேகர் மரணப்படுக்கையில் இருக்கிறார். தற்போது அவரின் உடல்நிலை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் குணமடைந்து மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிய சினிமா பிரபலங்கள் ஹாஸ்பிடலுக்கு நேரில் செல்லவுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.