India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் தான் இல்லையென அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநிலத் தலைவருக்கான தேடல் நடைபெற்று வரும் நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று EPS கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலை இவ்வாறு கூறியிருக்கிறார்.
கார் பார்க்கிங் விவகாரத்தில் நடிகர் <<15987085>>தர்ஷன்<<>> கைதாகி இருக்கிறார். ஐகோர்ட் நீதிபதியின் மனைவி, மகன், மற்றும் மருமகள் ஆகியோரைத் தாக்கியதாக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தகராறைத் தொடர்ந்து இருதரப்பும் புகார் அளித்திருந்தனர். அப்போது பேட்டியளித்த போது தர்ஷன் கண்ணீர் சிந்தி அழுத காட்சிகள் வைரலானது.
பிரதமர் மோடி வருகைக்காக மசூதி மினாரை மூடுவதுதான் திராவிட மாடலா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில்வே பாலத்தை திறக்க 6ம் தேதி பிரதமர் ராமேஸ்வரம் வருகிறார். இதனிடையே மசூதி, கலங்கரை விளக்குபோல உள்ளதாக கூறி காவல்துறை அதனை மூடியதற்கு சீமான் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மசூதியை மறைப்பது பாஜகவின் விருப்பமா? திமுகவின் முடிவா? என்றும் சீமான் வினவியுள்ளார்.
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக, ஏப்.10-ல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நாளில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியாக இருப்பதால், இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
பணத்துக்கு கொடுக்கும் மதிப்பு உயிருக்கு இல்லாததால் புனேவில் பரிதாபமாக கர்ப்பிணியின் உயிர் பறிபோனது. புனேவில் வலியில் துடித்த கர்ப்பிணிக்கு பணம் கட்டினால்தான் அட்மிஷன் என ஹாஸ்பிடலில் கண்டிஷன் போட்டுள்ளனர். இதனால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அப்பெண் உயிரிழந்துள்ளார். வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் உலகத்தை பார்க்காமலேயே மாண்டனர்.
அதிபர் ட்ரம்ப்பின் புதிய வரிவிதிப்பால் அமெரிக்க பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதனால், சென்செக்ஸ் 914 புள்ளிகள் சரிந்து 75,381 புள்ளிகளிலும், நிப்ஃடி 343 புள்ளிகள் குறைந்து 22,906 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. பங்குகள் விலை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ₹8.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வக்ஃப் மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கு எதிரான மோடி அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக காங்கிரஸ் குரல் கொடுக்கும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் <<15987205>>இன்று<<>> சவரனுக்கு ₹1,280 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், 60 நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரி(Reciprocal Tariff) விதித்ததை தொடர்ந்து சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், USA பொருளாதாரத்தில் மந்த நிலை இருக்கும் எனக் கூறப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் லாபம் பார்க்க விற்பனை செய்ததன் எதிரொலியே விலை குறையக் காரணமாம்.
➥வீட்டிற்கென பட்ஜெட் போடும் போது, அதில் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும் ➥சிறு சிறு செலவுகளை தினசரி செய்தாலும், அதை கணக்கிடுங்கள் ➥வெளியில் சாப்பிடாமல், வீட்டு உணவிற்கு முன்னுரிமை அளியுங்கள் ➥OTT தளங்களில் தேவையற்ற ஆட்டோமேடிக் பேமெண்ட் ஆப்ஷனை தவிருங்கள் ➥ஷாப்பிங்கின் போது, முக்கிய தேவைகளுக்கு முன்னுரிமை அளியுங்கள் ➥சேமிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
அதிமுக – தவெக கூட்டணி பேச்சு முறிவுக்கு பாமக முக்கிய காரணம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. 80 தொகுதிகள், துணை முதல்வர் பதவி தரப்படும் என EPS தரப்பு கூறியதற்கு விஜய் சம்மதம் தெரிவித்திருக்கிறார். பின்பு, PMKவும் கூட்டணியில் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், வட மாவட்டங்களில் விஜயகாந்த் பார்முலாவை பின்பற்ற முடிவெடுத்துள்ள விஜய், பாமக கூட்டணிக்கு வந்தால், நாங்கள் வர மாட்டோம் என கூறிவிட்டாராம்.
Sorry, no posts matched your criteria.