news

News April 4, 2025

8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

தமிழ்நாட்டில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு டிஜிபி பொறுப்பை ரூபேஸ் குமார் மீனா கூடுதலாக கவனிக்க உள்ளார். தீயணைப்புத்துறை டிஜிபியாக சீமா அகர்வாலும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக சந்தோஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து துணை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

News April 4, 2025

பதற்றமா… இது காரணமாக இருக்கலாம்!

image

உணவு, Gut health ஆகியவற்றுக்கும், நமது மனநிலைக்கும் தொடர்புள்ளது. பழம், காய்கறிகளை குறைவாக சாப்பிடுவோருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக, கனடாவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவில் ஒரு நாளைக்கு குறைந்தது 3 காய்கறி (அ) பழங்கள் இல்லையெனில், அவருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு 24% அதிகரிக்கிறது. அதேபோல், உடல்கொழுப்பின் அளவு 36%-க்கு அதிகமானாலும், பதற்றம் வரும் ஆபத்து 70% அதிகரிக்கிறது.

News April 4, 2025

டெல்லிக்கு செல்ல மாட்டேன்: அண்ணாமலை

image

தமிழக பாஜக தலைவருக்கான தேர்தல் போட்டியில் தான் இல்லையென்று அறிவித்திருக்கும் அண்ணாமலை, டெல்லி அரசியலுக்கு போக மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். அடுத்த தலைவருக்காக தான் யாரையும் கைகாட்டவில்லை என்றும் பாஜக நன்றாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதிமுக குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

News April 4, 2025

தலைவர் போட்டியில் நான் இல்லை: அண்ணாமலை

image

தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் தான் இல்லையென அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநிலத் தலைவருக்கான தேடல் நடைபெற்று வரும் நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று EPS கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலை இவ்வாறு கூறியிருக்கிறார்.

News April 4, 2025

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது!!

image

கார் பார்க்கிங் விவகாரத்தில் நடிகர் <<15987085>>தர்ஷன்<<>> கைதாகி இருக்கிறார். ஐகோர்ட் நீதிபதியின் மனைவி, மகன், மற்றும் மருமகள் ஆகியோரைத் தாக்கியதாக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தகராறைத் தொடர்ந்து இருதரப்பும் புகார் அளித்திருந்தனர். அப்போது பேட்டியளித்த போது தர்ஷன் கண்ணீர் சிந்தி அழுத காட்சிகள் வைரலானது.

News April 4, 2025

மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? – சீமான்

image

பிரதமர் மோடி வருகைக்காக மசூதி மினாரை மூடுவதுதான் திராவிட மாடலா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில்வே பாலத்தை திறக்க 6ம் தேதி பிரதமர் ராமேஸ்வரம் வருகிறார். இதனிடையே மசூதி, கலங்கரை விளக்குபோல உள்ளதாக கூறி காவல்துறை அதனை மூடியதற்கு சீமான் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மசூதியை மறைப்பது பாஜகவின் விருப்பமா? திமுகவின் முடிவா? என்றும் சீமான் வினவியுள்ளார்.

News April 4, 2025

அக்.1-ல் ‘இட்லி கடை’யை திறக்கிறார் தனுஷ்…!

image

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக, ஏப்.10-ல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நாளில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியாக இருப்பதால், இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

News April 4, 2025

ஹாஸ்பிடலின் பணத்தாசை.. பறிபோன கர்ப்பிணியின் உயிர்

image

பணத்துக்கு கொடுக்கும் மதிப்பு உயிருக்கு இல்லாததால் புனேவில் பரிதாபமாக கர்ப்பிணியின் உயிர் பறிபோனது. புனேவில் வலியில் துடித்த கர்ப்பிணிக்கு பணம் கட்டினால்தான் அட்மிஷன் என ஹாஸ்பிடலில் கண்டிஷன் போட்டுள்ளனர். இதனால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அப்பெண் உயிரிழந்துள்ளார். வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் உலகத்தை பார்க்காமலேயே மாண்டனர்.

News April 4, 2025

இந்திய பங்குச் சந்தையில் ₹8.5 லட்சம் கோடி இழப்பு

image

அதிபர் ட்ரம்ப்பின் புதிய வரிவிதிப்பால் அமெரிக்க பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதனால், சென்செக்ஸ் 914 புள்ளிகள் சரிந்து 75,381 புள்ளிகளிலும், நிப்ஃடி 343 புள்ளிகள் குறைந்து 22,906 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. பங்குகள் விலை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ₹8.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News April 4, 2025

வக்ஃப் மசோதா: நீதிமன்றத்தை நாடும் காங்கிரஸ்

image

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கு எதிரான மோடி அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக காங்கிரஸ் குரல் கொடுக்கும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!