India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்மையில் ICICI வங்கி, மினிமம் பேலன்ஸை ₹50,000-மாக <<17350157>>உயர்த்தியது<<>> வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, மினிமம் பேலன்ஸ் நிர்ணயிப்பது அந்தந்த வங்கிகளின் விருப்பம். இது RBI வரம்புக்கு உட்பட்டதல்ல என்று தெரிவித்துள்ளார். அனைவருக்கும் வங்கிக் கணக்கு அவசியம் என அரசு வலியுறுத்தும் நிலையில், மினிமம் பேலன்ஸை உயர்த்துவது சரியா?
ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதியை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் அதற்காக இன்று முதல் செப்டம்பர் 8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் நம் `நண்பர்கள்’ ஆகிவிடமாட்டார்கள். `நண்பேண்டா’ என டயலாக் பேசினாலும், உண்மையான நட்புணர்வு கொண்ட நண்பர்கள் இக்காலத்தில் குறைவே. நுகர்வு கலாசாரமும், அதற்கான பணநாட்டமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மனிதர்களை தங்களுக்குள் நெருங்கிப் பழகவிடாமல் தடுக்கின்றன. அப்படி பழகினாலும் அது மேம்போக்காக, பொழுதை போக்கும் நட்பாகவே உள்ளது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? உங்க best friend யார்?
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு செயல்படாத பேங்க் அக்கவுண்டை தவறுதலாக கொடுத்துவிட்டால் கவலை வேண்டாம். முதலில் பேங்குக்கு சென்று அந்த அக்கவுண்டை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில், புதிய அக்கவுண்ட் தொடங்கி அதற்கான தகவலை தாலுகா ஆபிஸில் சமர்பிக்க வேண்டும். அதன்பின், மகளிர் உரிமைத் தொகை புதிய அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும். SHARE IT.
பாலியல் பலாத்கார <<16987106>>வழக்கில்<<>> சிக்கியுள்ள RCB வீரர் யஷ் தயாளுக்கு உ.பி., கிரிக்கெட் சங்கம் (UPCA) தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 17-ம் தேதி தொடங்கவுள்ள UP T20 தொடரில் விளையாட அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த தொடரில் கோரக்பூர் லயன்ஸ் அணிக்காக விளையாட ₹7 லட்சத்துக்கு தயாள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எனினும், இதுகுறித்து அந்த அணி தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.
Whatsapp Web-ல் நீங்கள் யாருக்கு Chat செய்கிறீர்கள் என்பதை மறைக்க சிம்பிள் டிரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.
★Chrome Webstore-ஐ ஓபன் செய்து, அதில் ‘Privacy Extension for WhatsApp Web’ என்பதை செலக்ட் செய்யவும்.
★Extension add ஆனதும், Browser-ஐ Restart பண்ணுங்கள்.
★மீண்டும் Whatsapp Login செய்தவுடன் Extension தானாகவே Add ஆகி, Chat-களின் பெயர்கள் மறைக்கப்பட்டு விடும். SHARE IT.
RRB-ல் காலியாகவுள்ள 272 Nursing Superintendent பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 20- 43 வயதுக்குட்பட்ட B.Sc Nursing படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும். இதற்கு மாதச் சம்பளமாக ₹44,900 வழங்கப்படும். வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <
அணு ஆயுத போருக்கே அஞ்சாத தங்களுக்கு அண்டை நாட்டில் இருந்து மிரட்டல் விடுக்க வேண்டாம் என பாக்.,க்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு 2-வது முறையாக USA சென்றுள்ள பாக்., ராணுவ தளபதி ஆசிம் முனீர், காஷ்மீர் பாகிஸ்தானின் நாடி நரம்பு எனவும், சிந்து நதிக்கு இடையே IND அணை கட்டினால் தகர்ப்போம் என்றும் பேசினார். USA உதவியுடன் நீங்கள் ஆட வேண்டாம் எனவும் இந்தியா வார்னிங் கொடுத்துள்ளது.
☛நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் குடியுங்கள். ☛ஓட்டல் உணவுகளை தவிருங்கள். ☛குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் உட்கொள்வதை தவிருங்கள். ☛சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தால் சளி பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். ☛தெருவில் விற்கும் உணவுகள், நீண்ட நாள் ஆன திண்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. ☛நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு, ஆடாதோடை இலை போன்றவற்றில் கஷாயங்களை எடுப்பது நல்லது. SHARE IT.
மாணவர்கள், ஆசிரியர்களுக்காக புதிய சமுதாய வானொலி நிலையத்தை CBSE தொடங்கவுள்ளது. ஏற்கனவே ‘ஷிக்ஷா வாணி’ பாட்காஸ்ட் மூலம் பாடங்கள் ஆடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், NCERT பாடத்திட்டத்தின்படி, பாடங்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. புதிய வானொலி நிலையம் தொடங்கப்பட்டதும், மாணவர்களின் கற்றலை மேலும் எளிதாக்கும் வகையில் பாடங்கள் ஒளிபரப்பாகும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களே ரெடியா..!
Sorry, no posts matched your criteria.