India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏப்.15-ல் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சுக்கிரன் இடம்பெயர்கிறார். இதனால், 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *மிதுனம்) நிதிச் சிக்கலுக்கு தீர்வு, பதவி உயர்வு கிடைக்கும். *கும்பம்) பணவரவுகள் அதிகரிக்கும், லக்ஷ்மி கடாட்சம் உறுதியாக இருக்கும். *கடகம்) வியாபாரத்தில் வளர்ச்சி. சொந்த வீடு, வாகன கனவுகள் நனவாகும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
நகைக்கடன் விதிகளை மாற்றியதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் வட்டியை மட்டும் செலுத்தி நகைக் கடன்களை புதுப்பிக்கும் முறையை ரிசர்வ் வங்கி அண்மையில் ரத்து செய்தது. இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
CSK அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கடந்த போட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகவுள்ளது. இதுகுறித்து பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் கேப்டன் ஆகலாம். ஆனால், இப்போது ஏதும் சொல்ல முடியாது” என்றார். தோனி மீண்டும் கேப்டன் ஆனால் மாற்றம் இருக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், அந்த அணியின் பிளேயிங் XI-ல் நட்சத்திர ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுக்கு இடமில்லை. கடந்த போட்டிகளில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அவர், முழங்கால் காயம் காரணமாக இன்று விளையாடவில்லை என கேப்டன் ஹர்திக் தெரிவித்துள்ளார். ரோஹித் இல்லாமல் மும்பை களமிறங்குவதை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழகத்தில் இரவு 10 மணி வரை ராணிப்பேட்டை, வேலூர், தேனி, தென்காசி, கோவை, மதுரை, விருதுநகர், நெல்லை & குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 5) சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்பு, கட்டணம் தொடர்பான பிரச்னைகள், சேதமடைந்த மின் கம்பங்கள், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம் ஆகியவை தொடர்பான பிரச்னைகளுக்கு இங்கு தீர்வு காணலாம். நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை Executive Engineer/O&M அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். #SHAREIT
ஹர்திக் பாண்டியாவின் MI, ரிஷப் பண்ட்டின் LSG ஆகிய அணிகள் சற்று நேரத்தில் களமிறங்க உள்ளன. இவ்விரு அணிகளும் இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடி தலா 1 வெற்றியை பதிவு செய்துள்ளன. 2-வது வெற்றியை பெற இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும். நேருக்குநேர் மோதிய 6 போட்டிகளில் LSG 5 முறையும், MI 1 முறையும் வென்றுள்ளன. இன்று வெல்லப் போவது யார்?
ஆன்லைன் ரம்மியால் தனிநபர் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுவதாக TN அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், நள்ளிரவு 12- அதிகாலை 5 மணி வரை விளையாடக் கூடாது என அரசு உத்தரவிட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், விளையாடுபவர்களின் விவரங்களை கேட்பதால் அந்தரங்க உரிமைக்கு பாதிப்பு ஏற்படாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று சுமார் $6 டாலர்கள் சரிந்த Brent கச்சா எண்ணெய், $64.22 டாலர்களுக்கு விற்பனையாகிறது. 2022ஆம் ஆண்டில், கச்சா எண்ணெய் $110 டாலருக்கு மேல் விற்றபோது இந்தியாவில் பெட்ரோல் விலை சற்று ஏறக்குறைய ₹100ஆக இருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் $65க்கு விற்கும்போதும் பெட்ரோல் விலை ₹100ஆகவே உள்ளது.
ரஜினியின் கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14-ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி விசில் அடிப்பது போன்ற புதிய போஸ்டரை வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூலி படத்துக்கு யாரெல்லாம் வெய்ட்டிங்?
Sorry, no posts matched your criteria.