news

News April 5, 2025

கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை?

image

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை அமைக்கப்படுமா என சட்டப்பேரவையில் பழனி எம்எல்ஏ செந்தில் குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, மாற்றுப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதாகவும், அப்பணிகள் முடிந்ததும் மாற்றுப்பாதை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

News April 5, 2025

இன்று மின்வாரிய சிறப்பு முகாம்

image

தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்பு, கட்டணம் தொடர்பான பிரச்னைகள், சேதமடைந்த மின் கம்பங்கள், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம் ஆகியவை தொடர்பான பிரச்னைகளுக்கு இங்கு தீர்வு காணலாம். இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை Executive Engineer/O&M அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். #SHAREIT

News April 5, 2025

குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல் வருகிறதா?

image

வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்கள் மூலம் குழந்தைகளின் இருமலை குணப்படுத்த முடியும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஒரு ஸ்பூன் தேன் கொடுத்தால், அது சளியை மெல்லியதாகவும், வெளியேற்றவும் உதவுகிறது. நீராவி பிடிக்கும் சிகிச்சையின் மூலம் தொண்டை, மார்பில் உள்ள சளியை தளர்த்தலாம். வெதுவெதுப்பான மூலிகை டீ, சூப் அல்லது இஞ்சி தண்ணீர் கொடுக்கலாம்.

News April 5, 2025

ஜிவி- சைந்தவிக்கு டைவர்ஸ் வழங்குமா கோர்ட்?

image

விவாகரத்து வழக்கு தொடர்பாக ஜி.வி. பிரகாஷ்குமாரும், சைந்தவியும் வரும் செப்.25ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறுதி தீர்ப்பு வழங்கும் முன் இருவரும் நேரில் ஆஜராவது முக்கியம். விவாகரத்து பெறுவதில் இருவரும் உறுதியாக இருந்தால், அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும். இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றத்தை நாடினர்.

News April 5, 2025

ChatGPT ஷாக்.. மஸ்க் எப்போ ஆதார் கார்டு வாங்குனாரு!

image

AI டெக்னாலஜி உலக அரசுகளுக்கு தலைவலியாக மாறியுள்ளது. தேவையான தகவல்களை AI டெக்னாலஜியிடம் கொடுத்தால் அரசு ஆவணங்களை அப்படியே போலியாக தயாரித்து கொடுக்கிறது. ChatGPTயின் புதிய படம் உருவாக்கும் அம்சத்தை பயன்படுத்தி ஆரியபட்டா, எலான் மஸ்கின் போலி ஆதார், பான் கார்டுகள் தயாரிக்கப்பட்டு, அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த டெக்னாலஜியை சைபர் கிரிமினல்கள் பயன்படுத்தினால் என்ன ஆகும்?

News April 5, 2025

மணிப்பூரில் அமைதி திரும்புமா?

image

குக்கி -மெய்தி இன பிரதிநிதிகள் இன்று டெல்லியில் நடைபெற உள்ள அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர். இரு தரப்பினரிடையே மத்தியஸ்தம் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்த பல கட்ட முயற்சிகளின் விளைவாக இன்றைய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மணிப்பூரில் 2023ல் தொடங்கிய கலவரத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த பிப்.13 முதல் அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

News April 5, 2025

ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

image

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

News April 5, 2025

1 விக்கெட் எடுத்தவருக்கு ஆட்ட நாயகன் விருது

image

MIக்கு எதிரான நேற்றைய போட்டியில், LSG பவுலர் திக்வேஷ் சிங் ரதிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 4 ஓவர்களை வீசி 21 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை அவர் கைப்பற்றினார். குறிப்பாக MI வேகமாக ரன்களை எடுத்துக் கொண்டிருந்ததை கட்டுப்படுத்தி, 24 பந்துகளுக்கு 46 ரன்கள் என அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த நமன் திர்ரை அவர் அவுட்டாக்கினார். இதனால், 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்றது.

News April 5, 2025

இந்தியாவில் புதிய சட்டம் அமலானது

image

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் மசோதா 2025-க்கு குடியரசு தலைவர் முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இது தற்போது சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்தின் படி, ஒருவர் தெரிந்தே போலி பாஸ்போர்ட், விசாவை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைவது, தங்குவது, வெளியேறுவது கண்டறியப்பட்டால் இனி 7 ஆண்டு சிறை, ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். விமானங்கள், கப்பல்கள் வெளிநாட்டு பயணிகளின் தகவல்களை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.

News April 5, 2025

மாதம் ₹8.30 லட்சம் சம்பளம்.. ஆனாலும் புலம்பும் நபர்!

image

பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் மாதம் ₹8.30 லட்சம் சம்பளம் வாங்கியும், செலவுகளுக்கு போதவில்லை என புலம்பி தள்ளுகிறார். வீட்டு வாடகை ₹1.5 லட்சம், கார் EMI ₹80,000, உணவு ஆர்டருக்கு ₹70,000, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட ₹1.2 லட்சம் செலவு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், சம்பளத்தை விட ₹57,000 கூடுதலாக, அதாவது மாதம் ₹8.87 லட்சம் தனக்கு செலவாவதாக புலம்பியுள்ளார்.

error: Content is protected !!