India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கச்சத்தீவு தேவாலய பெருவிழாவுக்கு செல்லும் போதெல்லாம் தமிழக மக்கள் மறக்காமல் வாங்கி வருவது என்ன தெரியுமா? ராணி சோப்பு தான். அதன் சந்தன நறுமணம் மக்களை ஈர்த்து வருகிறது. இலங்கையின் சுதேசி தயாரிப்பான ராணி சோப்பு 1941 முதல் சந்தைகளில் விற்பனையாகிறது. தரம், சருமத்தை பாதிக்காத தன்மையே வர்த்தக அளவில் வெற்றியடைய காரணம். அடுத்த முறை கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல நேர்ந்தால் ராணியை மறந்துடாதீங்க!
மாநிலத் தலைவர் பதவியில் நீட்டிக்க வாய்ப்பில்லை என்பதால் அண்ணாமலை விரக்தியில் புலம்புவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். அண்ணாமலையின் பேச்சு BJP- ADMK கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார். மாநில உரிமைக்காக பேசாத அண்ணாமலை போன்றோர், மத்திய அரசுக்கு ஆதரவாக பேசுவது வாடிக்கை என்றும், பாஜகவின் அரசியல் நாடகங்களை திசை திருப்ப, திமுக அரசு மீது குற்றஞ்சாட்டுகின்றனர் என்றும் விமர்சித்தார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2 ஆவது நாளாக குறைந்துள்ளது. இன்று (ஏப்.5) காலை நேர வர்த்தகப்படி சவரனுக்கு ₹720 குறைந்து 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,310க்கும் சவரன் ₹66,480க்கும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் திடீரென இறங்குமுகத்தில் இருப்பதால் தங்கம் வாங்க நினைத்தவர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் கருத்து என்ன?
சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சதீஷ்குமாருக்கு மருந்து நிர்வாகத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு தர்பூசணியில் ரசாயன கலப்பு தொடர்பாக சதீஷ்குமார் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையான நிலையில், இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2024-25ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69%ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் மற்ற மாநிலங்களை விட பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது. 2023-24இல் ₹15,71,368 கோடியாக இருந்த GDP 2024-25இல் ₹17,23,698 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சி 8.21%ஆகவும், ராஜஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 7.28%ஆகவும் உள்ளன.
ராமேஸ்வரத்திற்கு நாளை முதல் நேரடியாக மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்குகிறது. பாம்பனில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து, ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் அங்கிருந்து தாம்பரத்திற்கு மீண்டும் ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார். இனி நேரடியாக ராமேஸ்வரம் செல்ல முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் <<15989289>>ரவிக்குமார்<<>> உடல்நலக்குறைவால் நேற்று மறைந்த நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். ராடான் நிறுவனத்தில் ஒரு அங்கமாக இருந்து பல வெற்றிக்கு பாடுபட்டவர் என புகழாரம் சூட்டியுள்ள ராதிகா, குடும்ப உறுப்பினரை இழந்ததை போல் மிகவும் வருத்தமடைந்ததாக கூறியுள்ளார். அவரது சிரிப்பும், ஆழமான குரலும் எப்போதும் இதயத்தில் நிலைத்திருக்கும் என்றும் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக நியமன உறுப்பினர் இளையராஜா வாக்களித்துள்ளார். இவரைத் தவிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் ஜி.கே.வாசன் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். அதன்படி தமிழகத்தில் 2 பேர் மட்டுமே மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அன்புமணி வாக்கெடுப்பைப் புறக்கணிக்க, திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.
பிரபல, இந்தி, மராத்தி நடிகர் விலாஸ் உஜ்வானே(62) காலமானார். சினிமா, சீரியல்கள், மேடை நாடகங்களில் தனது ஆசாத்திய நடிப்பு, கம்பீர குரலால் மக்கள் மனதை கொள்ளை கொண்ட அவர், 2017இல் Brain Strokeஆல் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் பல்வேறு உடல்நல பிரச்னைகளை சந்தித்து வந்த நிலையில், மும்பையில் திடீரென உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். RIP!
உலக நாடுகள் மீதான ரெசிப்ரோக்கல் வரி(Reciprocal Tariff) விதிப்பால் அமெரிக்கப் பங்குச்சந்தை 2ஆவது நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. Dow Jones பங்குச்சந்தையில் 2,200 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடியை இழந்துள்ளனர். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு சுமார் $10 டிரில்லியன் டாலரை அமெரிக்க முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.