news

News April 5, 2025

தேசப்பற்றுக்கு முன் உயிரும் துட்சமே! சல்யூட் சார்

image

குஜராத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜெட் விமானத்தில் ஏற்பட்ட விபத்தில் பைலட் சித்தார்த் யாதவ் (28) உயிரிழந்தார். விமானத்தை ஆளில்லாத இடத்தில் தரையிறக்கியதன் மூலம், மக்களின் உயிருக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார் சித்தார்த். இந்த விபத்தில் சித்தார்த்தின் கோ- பைலட் காயத்துடன் உயிர்தப்பினார். மரணத்திலும் நாட்டுக்கும், சக பைலட்டுக்கும் முன்னுரிமை கொடுத்த இவரே உண்மையான வீரர். சல்யூட் சார்.

News April 5, 2025

பசங்களிடம் ரொம்ப கண்டிப்பா இருக்கீங்களா? ப்ளீஸ் நோட்

image

பெற்றோர்கள் வளர்க்கும் விதம், குழந்தைகளின் ஆயுட்காலத்தை எப்படி பாதிக்கிறது என ELSA அமைப்பு ஆய்வு செய்தது. அதில், மிகக் கட்டுப்பாட்டுடன் வளரும் ஆண் குழந்தைகள் 80 வயதிற்கு முன் இறப்பதற்கு 12% அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுவே, பெண் குழந்தைகளுக்கு 22% வாய்ப்பு அதிகமாம். குழந்தைகளுக்கு கவனிப்பும், கண்டிப்பும் தேவைதான். ஆனால், அது வெளியில் சொல்ல முடியாத மன அழுத்தத்தைக் கொடுக்கும் அளவில் இருக்கக் கூடாது.

News April 5, 2025

மோடி சந்திப்பு: ஓபிஎஸ்-க்கு YES.. இபிஎஸ்-க்கு NO?

image

ADMK – BJP கூட்டணியை உறுதி செய்யும் வகையில் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றம் செய்யப்பட இருக்கிறார். இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணம் EPS எனச் சொல்லப்படுகிறது. கடந்த 2 நாள்களாக இந்த விவகாரம் அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், நாளை தமிழகம் வரும் மோடியை சந்திக்க OPS, TTV-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இபிஎஸ் சந்திப்பு இன்னும் உறுதியாகவில்லை. இது புதிய புதிராக உள்ளது.

News April 5, 2025

முட்டை விலை கடும் சரிவு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இரண்டாவது நாளாக 20 காசுகள் குறைந்துள்ளது. இதனால், ₹4.25க்கு விற்பனையாகிறது. சில்லறை விலையில் ₹5 முதல் ₹5.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. 2 நாள்களில் மட்டும் 40 காசுகள் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை, நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உங்கள் ஊரில் முட்டை விலை என்ன?

News April 5, 2025

REST IN PEACE… தனக்குத்தானே இரங்கல் போஸ்டர்

image

வேலை கிடைக்காத விரக்தியில் தனக்குத் தானே இளைஞர் ஒருவர் இரங்கல் போஸ்டர் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த பிரசாந்த் ஹரிதாஸ் என்பவர் LinkedIn செயலில் 3 ஆண்டுகளாக வேலை தேடியுள்ளார். ஆனால், அவரை எந்த நிறுவனமும் பணிக்கு எடுக்கவில்லை. இதனால், விரக்தியடைந்த அவர், அதே செயலியில் தனக்குத்தானே இரங்கல் போஸ்டரை பதிவு செய்துள்ளார்.

News April 5, 2025

கனடாவில் இந்தியர் குத்தி படுகொலை!

image

கனடாவின் ஒட்டாவாவில் இந்தியர் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்லப்பட்ட இந்தியர் யார், எதற்காக படுகொலை செய்யப்பட்டார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து காவல்துறை விசாரிப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது. கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

News April 5, 2025

2 நாளில் தங்கம் விலை ₹2000 குறைவு

image

கடந்த சில மாதங்களாகவே மக்களை கதிகலங்க வைத்தது ஆபரணத் தங்கத்தின் விலை. இந்நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ₹1,280, இன்று ₹720 என 2 நாளில் ₹2000 குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலை நேற்று ₹4, இன்று ₹5 என கிராமுக்கு ₹9, கிலோவுக்கு ₹9,000 குறைந்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் குறையும் என கூறப்படுவதால், பெண்கள், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News April 5, 2025

பஸ்ஸில் மகன்கள் கண்முன்னே தாய் பலாத்காரம்!

image

கர்நாடகாவில் இரு மகன்கள் கண்முன்னே பஸ்ஸில் தாய் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. தாவணகரேவில் தனியார் பஸ் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 3 பேர் சிக்கியுள்ளனர். உள்ளூர் போலீசார் வழக்கை மூடி மறைக்க முயன்ற நிலையில், விஜயநகர் எஸ்.பி. தலையிட்டதால் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்னும் எத்தனை நிர்பயாக்களுக்கு இந்த கொடூரம் நடக்கும்? என நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.

News April 5, 2025

மோடி பயணத்தால் மீன்பிடி உரிமை கிடைக்குமா?

image

பிரதமர் மோடி இலங்கை சென்றுள்ள நிலையில், TN மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு வலுவாக எழுந்துள்ளது. ஆழ்கடலில் மீன்பிடி உரிமை, கச்சத்தீவு உள்ளிட்ட கோரிக்கைகள் மீண்டும் வலுத்துள்ளன. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூட மீன்பிடி உரிமையை நாம் பெற்றே ஆக வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். திமுக MP டி.ஆர்.பாலுவும் கச்சத்தீவுக்காக மக்களவையில் குரல் எழுப்பியிருந்தார்.

News April 5, 2025

வெள்ளி விலை கடும் சரிவு!

image

சென்னையில் வெள்ளி விலை இன்று(ஏப்.5) ஒரே நாளில் கிராமுக்கு ₹5 சரிந்துள்ளது. 1 கிராம் ₹103க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,03,000க்கும் விற்பனையாகிறது. நேற்று கிராமுக்கு ₹4, நேற்று முன்தினம் ₹2 என 3 நாள்களில் மட்டும் கிராமுக்கு ₹11, கிலோவுக்கு ₹11,000 குறைந்துள்ளது. தங்கத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு விலை உயர்ந்து வந்த வெள்ளி சரிவைக் கண்டுள்ளது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. உங்களுக்கு எப்படி?

error: Content is protected !!