news

News April 5, 2025

2 நாளில் தங்கம் விலை ₹2000 குறைவு

image

கடந்த சில மாதங்களாகவே மக்களை கதிகலங்க வைத்தது ஆபரணத் தங்கத்தின் விலை. இந்நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ₹1,280, இன்று ₹720 என 2 நாளில் ₹2000 குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலை நேற்று ₹4, இன்று ₹5 என கிராமுக்கு ₹9, கிலோவுக்கு ₹9,000 குறைந்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் குறையும் என கூறப்படுவதால், பெண்கள், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News April 5, 2025

பஸ்ஸில் மகன்கள் கண்முன்னே தாய் பலாத்காரம்!

image

கர்நாடகாவில் இரு மகன்கள் கண்முன்னே பஸ்ஸில் தாய் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. தாவணகரேவில் தனியார் பஸ் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 3 பேர் சிக்கியுள்ளனர். உள்ளூர் போலீசார் வழக்கை மூடி மறைக்க முயன்ற நிலையில், விஜயநகர் எஸ்.பி. தலையிட்டதால் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்னும் எத்தனை நிர்பயாக்களுக்கு இந்த கொடூரம் நடக்கும்? என நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.

News April 5, 2025

மோடி பயணத்தால் மீன்பிடி உரிமை கிடைக்குமா?

image

பிரதமர் மோடி இலங்கை சென்றுள்ள நிலையில், TN மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு வலுவாக எழுந்துள்ளது. ஆழ்கடலில் மீன்பிடி உரிமை, கச்சத்தீவு உள்ளிட்ட கோரிக்கைகள் மீண்டும் வலுத்துள்ளன. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூட மீன்பிடி உரிமையை நாம் பெற்றே ஆக வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். திமுக MP டி.ஆர்.பாலுவும் கச்சத்தீவுக்காக மக்களவையில் குரல் எழுப்பியிருந்தார்.

News April 5, 2025

வெள்ளி விலை கடும் சரிவு!

image

சென்னையில் வெள்ளி விலை இன்று(ஏப்.5) ஒரே நாளில் கிராமுக்கு ₹5 சரிந்துள்ளது. 1 கிராம் ₹103க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,03,000க்கும் விற்பனையாகிறது. நேற்று கிராமுக்கு ₹4, நேற்று முன்தினம் ₹2 என 3 நாள்களில் மட்டும் கிராமுக்கு ₹11, கிலோவுக்கு ₹11,000 குறைந்துள்ளது. தங்கத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு விலை உயர்ந்து வந்த வெள்ளி சரிவைக் கண்டுள்ளது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. உங்களுக்கு எப்படி?

News April 5, 2025

ராணி சோப்பு தெரியுமா?

image

கச்சத்தீவு தேவாலய பெருவிழாவுக்கு செல்லும் போதெல்லாம் தமிழக மக்கள் மறக்காமல் வாங்கி வருவது என்ன தெரியுமா? ராணி சோப்பு தான். அதன் சந்தன நறுமணம் மக்களை ஈர்த்து வருகிறது. இலங்கையின் சுதேசி தயாரிப்பான ராணி சோப்பு 1941 முதல் சந்தைகளில் விற்பனையாகிறது. தரம், சருமத்தை பாதிக்காத தன்மையே வர்த்தக அளவில் வெற்றியடைய காரணம். அடுத்த முறை கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல நேர்ந்தால் ராணியை மறந்துடாதீங்க!

News April 5, 2025

ADMK- BJP கூட்டணி உறுதி: திருமா சொல்லும் காரணம்

image

மாநிலத் தலைவர் பதவியில் நீட்டிக்க வாய்ப்பில்லை என்பதால் அண்ணாமலை விரக்தியில் புலம்புவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். அண்ணாமலையின் பேச்சு BJP- ADMK கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார். மாநில உரிமைக்காக பேசாத அண்ணாமலை போன்றோர், மத்திய அரசுக்கு ஆதரவாக பேசுவது வாடிக்கை என்றும், பாஜகவின் அரசியல் நாடகங்களை திசை திருப்ப, திமுக அரசு மீது குற்றஞ்சாட்டுகின்றனர் என்றும் விமர்சித்தார்.

News April 5, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹720 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2 ஆவது நாளாக குறைந்துள்ளது. இன்று (ஏப்.5) காலை நேர வர்த்தகப்படி சவரனுக்கு ₹720 குறைந்து 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,310க்கும் சவரன் ₹66,480க்கும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் திடீரென இறங்குமுகத்தில் இருப்பதால் தங்கம் வாங்க நினைத்தவர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் கருத்து என்ன?

News April 5, 2025

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் டிரான்ஸ்பர்!

image

சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சதீஷ்குமாருக்கு மருந்து நிர்வாகத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு தர்பூசணியில் ரசாயன கலப்பு தொடர்பாக சதீஷ்குமார் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையான நிலையில், இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News April 5, 2025

பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய உச்சம்

image

2024-25ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69%ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் மற்ற மாநிலங்களை விட பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது. 2023-24இல் ₹15,71,368 கோடியாக இருந்த GDP 2024-25இல் ₹17,23,698 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சி 8.21%ஆகவும், ராஜஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 7.28%ஆகவும் உள்ளன.

News April 5, 2025

நாளை முதல் ராமேஸ்வரத்திற்கு நேரடி ரயில்!

image

ராமேஸ்வரத்திற்கு நாளை முதல் நேரடியாக மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்குகிறது. பாம்பனில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து, ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் அங்கிருந்து தாம்பரத்திற்கு மீண்டும் ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார். இனி நேரடியாக ராமேஸ்வரம் செல்ல முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!