news

News August 12, 2025

தங்கம் விலை 2 நாளில் ₹1200 குறைந்தது

image

கடந்த வாரம் முழுவதும் ஏறுமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கம், இந்த வாரம் இறங்கு முகத்தில் இருக்கிறது. குறிப்பாக, வாரத்தின் முதல் நாளான நேற்று சவரனுக்கு ₹560, இன்று ₹640 என 2 நாளில் மொத்தம் ₹1200 குறைந்துள்ளது. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள நகைப்பிரியர்கள், வரும் நாள்களில் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கின்றனர். தற்போதைய சூழலும் அப்படிதான் அமைந்திருக்கிறது.

News August 12, 2025

BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு

image

பலூசிஸ்தான் விடுதலைப் படை(BLA) மற்றும் அதன் துணை அமைப்பான மஜீத் படைப்பிரிவை பயங்கரவாத அமைப்புகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என கோரி BLA அந்நாட்டுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது கவனிக்கதக்கது.

News August 12, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

image

1. முதல்முதலில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பெண்மணி யார்?
2. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை கொண்டது?
3. சுப்பிரமணிய பாரதியார் எப்போது சென்னையில் சுயராஜ்ய நாளை கொண்டாடினார்?
4. செஸ் விளையாட்டை கண்டுபிடித்த நாடு எது?
5. நிலவு இல்லாத கோள்கள் எவை?
பதில்கள் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.

News August 12, 2025

மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராவோம்: விஜய்

image

‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற கருத்தை முன்வைத்து ஆக.21-ல் மதுரையில் மாநாடு நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராவோம்; நாம் மாற்று சக்தி அல்ல; முதன்மை சக்தி என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் எனக் கூறியுள்ள அவர், மதுரை மாநாட்டில் கொள்கை எதிரி, அரசியல் எதிரியை சமரசமின்றி எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

கூலி பீவர்.. ₹4,500க்கு விற்பனையாகும் FDFS டிக்கெட்!

image

வரும் 14-ம் தேதி வெளியாக இருக்கும் ‘கூலி’ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் முதல் காட்சியை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள், மாநிலம் கடந்து சென்று கள்ள சந்தையில் பல ஆயிரங்களை செலவு செய்து டிக்கெட் வாங்கியுள்ளனர். சென்னையின் பல முக்கிய திரையரங்குகளில் கள்ளச் சந்தையில் ₹4,500-க்கு டிக்கெட் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீங்க டிக்கெட் வாங்கியாச்சா?

News August 12, 2025

Asia Cup.. பெஸ்ட் பிளேயிங் XI எது?

image

செப்டம்பரில் தொடங்கும் Asia Cup-ல் யார் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அபிஷேக் சர்மா, கில், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜுரெல், அக்சர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 19 அல்லது 20-ம் தேதி அணி அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. நீங்க ஒரு பெஸ்ட் பிளேயிங் XI-யை கமெண்ட் பண்ணுங்க?

News August 12, 2025

CM பொறுப்புடன் பேச வேண்டும்: நயினார் கண்டனம்

image

வாக்கு மோசடியில் ECI ஈடுபட்டதாக <<17367499>>ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு <<>>நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ECI-யின் மீது குற்றம்சாட்டுவது அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம் என தெரிவித்த அவர், CM பொறுப்புடன் பேச வேண்டும் என வலியுறுத்தினார். வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ECI கேட்ட விளக்கத்துக்கு ராகுல் பதில் அளிக்காமல், அதை நியாயப்படுத்த முயல்வது தவறு எனவும் விமர்சித்துள்ளார்.

News August 12, 2025

BREAKING: ஸ்டிரைக் தொடரும்.. தமிழக அரசுக்கு நெருக்கடி

image

பணி நிரந்தரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால், பல லட்சம் பேர் வந்து செல்லும் பொதுவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதால், தமிழக அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால், உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு தரப்பில் சற்றுமுன் அழைப்பு விடுத்தது. ஆனால், அதை புறக்கணித்த தூய்மைப் பணியாளர்கள், ஸ்டிரைக் தொடரும் என அறிவித்துள்ளனர்.

News August 12, 2025

தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப அரசு உத்தரவு

image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

News August 12, 2025

வனத்தின் பாதுகாவலன்: உலக யானைகள் தினம்!

image

▶ ஒரு வளர்ந்த யானை ஒரு நாளுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்கிறது.
▶யானைகளின் சாணத்தின் மூலம் 50 வகையான தாவரங்கள் காட்டில் விதைக்கப்படுகின்றன.
▶ யானை குட்டிகள் பிறந்த 2 மணி நேரத்தில் நடக்கத் தொடங்கிவிடும்.
▶ ஆப்பிரிக்காவின் சவன்னா வகை யானைகள் தான் உலகின் பெரிய விலங்கினமாம். இதன் எடை 6000 கிலோ▶ யானைகள் அருமையாக நீந்தும் திறன் கொண்டவை. இவற்றால் தொடர்ந்து 6 மணி நேரம் நீந்த முடியும்.

error: Content is protected !!