India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் சுரண்டையில், பள்ளியிலேயே மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் உயிரிழந்த 9ஆம் வகுப்பு மாணவி மானசாவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
கொழும்புவில் இலங்கை அதிபர் அநுரா குமார திசநாயகேவை, பிரதமர் மோடி சந்தித்த நிலையில் இரு நாட்டுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இரு தரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைக்குப் பின் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், டிஜிட்டல் மயம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும், இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களிலும் கையெழுத்தாகியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் நாதக சார்பில் இடும்பாவனம் கார்த்திக் போட்டியிடுவார் என்று சீமான் அறிவித்துள்ளார். திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி கணக்குகளை தொடங்கி இருக்கும் நிலையில், தனித்து களம் காணும் முடிவோடு சீமான் அடுத்தடுத்து வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இதுவரை தேர்தலில் போட்டியிடாத இடும்பாவனம் கார்த்திக், தனது சொந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மீனவர் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் அணுக இரு நாடுகளும் ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ‘செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு‘ என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டினார்.
அமெரிக்கா விதித்த 26% வரி விதிப்பு இந்திய ஏற்றுமதியாளர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. தவிர 10% அடிப்படை வரியும் அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. புதிய வரி விதிப்பு அடுத்த வாரம் அமலுக்கு வரவுள்ள நிலையில், பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் இந்திய, அமெரிக்க அதிகாரிகள் இறங்கியுள்ளனர். அதற்கேற்றபடி, அதிபர் டிரம்பும் இந்தியாவுடன் வர்த்தக உடன்பாடு பேச்சுவார்த்தையை தீவிரமாக்கியுள்ளார்.
சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாமல் பல கட்சிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக K.P.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். சைதை துரைசாமி ஒரு சந்தர்ப்பவாதி எனவும் அதிமுகவுக்காக கடுமையாக உழைத்தவர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார். ADMK ஒன்றுபட வேண்டும், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என கூறியிருந்த நிலையில், முனுசாமியின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. அதாவது 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் பாட புத்தகத்தின் பாடத்திட்டங்கள் 40% அளவிற்கு குறைக்கப்படுகின்றன. 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முறையே 238, 236, 228 பக்கங்களை கொண்ட குறைக்கப்பட்ட தமிழ் பாடப் புத்தகங்கள், வரும் ஜூன் மாதம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என பாடநூல் கழக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
TET தேர்வில் தேர்ச்சி என்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது. TET தேர்வில் தேர்ச்சி பெறாத சிறுபான்மை பள்ளி ஆசிரியருக்கு பணி வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளது. குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும் TET தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனுதாரருக்கு பணி வழங்க முடியாது என்றும் ஆணையிட்டது.
சென்னை ஏர்போர்ட் சுங்கத்துறை அதிகாரிகள் 10 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுங்கத்துறை முதன்மை ஆணையர் சீனிவாச நாயக், கூடுதல் துணை ஆணையர் பெரியண்ணன், துணை ஆணையர்கள் சரவணன், அஸ்வத் பாஜி, பாபுகுமார் ஜேக்கப், உதவி ஆணையர் சுதாகர் உள்ளிட்ட 10 பேர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுங்கத்துறை முதன்மை ஆணையராக தமிழ்வளவன் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
<<15987879>>எம்புரான்<<>> பட இயக்குநர் பிருத்விராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோல்டு, ஜன கண மன, கடுவா போன்ற படங்களுக்கு இணை தயாரிப்பாளராக அவர் இருந்த நிலையில், படங்களின் கணக்கு விவரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் ஆபீஸில் நடைபெற்ற ED சோதனையில், கணக்கில் வராத ₹1.5 கோடி பிடிபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.