news

News April 5, 2025

எலுமிச்சை விலை கடும் சரிவு.. விவசாயிகள் கவலை!

image

எலுமிச்சை விலை கடும் சரிவு விவசாயிகளுக்கு கவலையை அளித்துள்ளது. கோடைக்காலத்தில் ஜூஸுக்காக எலுமிச்சை அதிகம் விற்பனை ஆகும் என்பதால் நல்ல விலை கிடைக்கும். இதனை நம்பி எலுமிச்சை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இந்தாண்டு அதிர்ச்சியே மிஞ்சியது. கடந்தாண்டு 1 கிலோ ₹250- ₹300 வரை விற்கப்பட்ட எலுமிச்சை தற்போது ₹50- ₹70 மட்டுமே விற்பனையாகிறது. இதனால், புளியங்குடி, மணப்பாறை விவசாயிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

News April 5, 2025

ஐஸ்கிரீமில் சோப்பு தூள் கலப்பு.. எச்சரிக்கை

image

கோடை வெயில் தொடங்கி விட்டதால், ஐஸ்கிரீம், குளிர்பானங்களை மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் ‘கிரீம்’ உருவாக்க துணிகளுக்கான சலவை சோப்பு தூளும், குளிர்பானங்களில் நுரையை அதிகரிக்க ‘பாஸ்போரிக்’ அமிலமும், சர்க்கரைக்கு பதிலாக சுவை & நிறத்தை மேம்படுத்த சாக்ரினும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதை உட்கொள்பவர்களுக்கு பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

News April 5, 2025

மாணவர்கள் தவறான முடிவை எடுக்க வேண்டாம்: ராமதாஸ்

image

நீட் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார். மாணவர்களின் மன அழுத்தங்கள், மன உளைச்சல்களை புரிந்துகொள்ள முடிவதாக கூறிய அவர், அதற்கான தீர்வு தற்கொலை அல்ல என்றும் வலியுறுத்தியுள்ளார். குழந்தைகள் டாக்டருக்கு படிப்பதுதான் தங்களுக்குப் பெருமை என்ற மாயையில் இருந்து பெற்றோர்களும் விடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

News April 5, 2025

கோவை, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை!

image

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(MET) கணித்துள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நள்ளிரவு முதலே கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவது கவனிக்கத்தக்கது.

News April 5, 2025

BREAKING: இன்றுடன் ஓய்வு பெறுகிறாரா தோனி?

image

எம்.எஸ்.தோனி இன்றுடன் ஓய்வு பெறவுள்ளதாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் இது உறுதி செய்யப்படவில்லை. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை திடீரென அறிவித்தார் என்பதால், இப்பவும் அப்படியே செய்து விடுவாரோ என்ற எண்ணத்தில், ‘கடவுளே.. இது உண்மையாக இருக்கக்கூடாது’ என ரசிகர்கள் பதிவிட தொடங்கி விட்டனர். முன்னதாக, தோனி மீது நடப்பு சீசனில் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

News April 5, 2025

இந்திய பாதுகாப்புக்கு இலங்கை அதிபர் உறுதி!

image

இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், எந்த செயலும் இலங்கை மண்ணில் நடக்காது என அதிபர் அநுர குமார திசநாயக உறுதியளித்துள்ளார். இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் சேவைக்காக இந்தியா வழங்கிய ₹300 கோடி நிதிக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தையும் இலங்கை நன்கு உணர்ந்துள்ளது என்றார்.

News April 5, 2025

கிறிஸ்தவர்களை குறிவைக்கும் RSS : ராகுல் குற்றச்சாட்டு

image

இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃப் மசோதா, எதிர்காலத்தில் பிற பிரிவினரை குறிவைக்க முன்மாதிரியாக உள்ளது என்று மக்களவையில் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். RSS-ன் கவனம், கிறிஸ்தவர்கள் மீது திரும்ப நீண்ட நேரம் ஆகாது; பாஜக அரசின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஒரே கேடயம் அரசியலமைப்புச் சட்டம்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

News April 5, 2025

சற்றுமுன்: பள்ளியிலேயே மாணவி மரணம்

image

தென்காசி மாவட்டம் சுரண்டையில், பள்ளியிலேயே மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் உயிரிழந்த 9ஆம் வகுப்பு மாணவி மானசாவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

News April 5, 2025

டிஜிட்டல்மயம், பாதுகாப்பு துறைகளில் ஒப்பந்தம்!

image

கொழும்புவில் இலங்கை அதிபர் அநுரா குமார திசநாயகேவை, பிரதமர் மோடி சந்தித்த நிலையில் இரு நாட்டுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இரு தரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைக்குப் பின் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், டிஜிட்டல் மயம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும், இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களிலும் கையெழுத்தாகியுள்ளன.

News April 5, 2025

சொந்த மண்ணில் போட்டியிடும் இடும்பாவனம் கார்த்திக்

image

2026 சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் நாதக சார்பில் இடும்பாவனம் கார்த்திக் போட்டியிடுவார் என்று சீமான் அறிவித்துள்ளார். திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி கணக்குகளை தொடங்கி இருக்கும் நிலையில், தனித்து களம் காணும் முடிவோடு சீமான் அடுத்தடுத்து வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இதுவரை தேர்தலில் போட்டியிடாத இடும்பாவனம் கார்த்திக், தனது சொந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

error: Content is protected !!