India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கம்போடியாவில் ஒரு எலி உலக சாதனை படைத்திருக்கிறதாம். அதுவும் நிலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்து கொடுத்து மனிதர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறதாம். ஆப்ரிக்கன் எலியான அதன் பெயர் ரோனின். கம்போடியா ராணுவத்தில் கடந்த 2021 முதல் பணியாற்றி வருகிறது. தற்போது வரை 109 கண்ணிவெடிகளை மோப்பம் பிடித்து அகற்ற உதவி இருக்கிறது ரோனின். சாதிக்க பிறந்த எலி!
தோனி இன்றோடு ஓய்வு பெறவிருப்பதாக தகவல் வெளியாகும் சூழலில் அவரது பெற்றோர் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனால், CSK மற்றும் தோனியின் ரசிகர்கள், அவர் உண்மையில் ஓய்வு பெறுகிறாரோ என்ற கலக்கத்தில் உள்ளனர். முன்னதாக ஒருமுறை, தான் சென்னை மைதானத்தில்தான் ஓய்வை அறிவிப்பேன் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவளித்ததால் அதிருப்தியடைந்து, JDU-வில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். JDU-ன் பீகார் மாநில பொதுச் செயலாளர் முகமது சித்திகி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷாநவாஸ் மாலிக் உள்ளிட்ட 4 பேர் ஏற்கெனவே விலகினர். இந்நிலையில், இளைஞரணி துணைத் தலைவர் தப்ரீஸ் ஹாசனும் விலகியுள்ளார். அடுத்தடுத்து தலைவர்கள் விலகுவது JDU தலைவர் நிதிஷ்குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் கடன்சுமை தாங்காமல், பெண் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜாம் நகர் மாவட்டத்தில் பானு பென் ஜீவாபாய் என்பவர் தனது 4 குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக உறவினர்களிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல. அந்த எண்ணம் எழுந்தால் 104 என்ற எண்ணை அழைக்கவும்.
அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த CSK அணி, இன்று இரண்டு மாற்றங்களுடன் களம் இறங்கியுள்ளது. DC உடனான இன்றைய போட்டியில், தொடக்க வீரர் கான்வே விளையாடவுள்ளார். ராகுல் திரிபாதிக்கு பதிலாக முகேஷ் சவுத்ரி விளையாடவுள்ளார். கடந்த போட்டியில் விளையாடிய ஜேமி ஓவர்டனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ருதுராஜ் விளையாடும் தகுதியுடன் இருப்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை.
தங்கம் விலை கடந்த 2 நாள்களாக சரிந்து வரும் நிலையில், பாதியாக குறையும் என பலரும் சோஷியல் மீடியாவில் கருத்து கூறி வருகின்றனர். இது தொடர்பாக பொருளாதார வல்லுநர்களிடம் கேட்டபோது, உலக அளவில் முதலீட்டுக்காக தங்கம் வாங்குவது குறைந்தது மற்றும் டிரம்பின் புதிய வரி விதிப்பே காரணம் என்றனர். மேலும், ஒரு சில நாள்களுக்கு இந்த நிலை நீடிக்கும் ஆனால், பாதியாகக் குறைய வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளனர்.
பெரும்பாலும் ஏன் பீர் பாட்டில்கள் பச்சை அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கிறது என நீங்கள் யோசித்தது உண்டா? அதற்கு பின்னால் ஒரு விஞ்ஞானம் இருக்கிறது. ஆம், பீர் transparent பாட்டில்களில் வைக்கப்பட்டால், சூரியனின் UV கதிர்களால் அவை பாதிக்கப்படுமாம். 2 ஆம் உலகப் போரின்போது, பிரவுன் பாட்டில்களுக்கு திடீர் பற்றாக்குறை வந்ததால், பச்சை நிற பாட்டில்கள் சந்தைக்கு வந்தன. SHARE IT.
CSK அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற DC பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்று CSK மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என CSK ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இன்னைக்கு யார் ஜெயிப்பாங்க என நீங்க நினைக்கிறீங்க?
எலுமிச்சை விலை கடும் சரிவு விவசாயிகளுக்கு கவலையை அளித்துள்ளது. கோடைக்காலத்தில் ஜூஸுக்காக எலுமிச்சை அதிகம் விற்பனை ஆகும் என்பதால் நல்ல விலை கிடைக்கும். இதனை நம்பி எலுமிச்சை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இந்தாண்டு அதிர்ச்சியே மிஞ்சியது. கடந்தாண்டு 1 கிலோ ₹250- ₹300 வரை விற்கப்பட்ட எலுமிச்சை தற்போது ₹50- ₹70 மட்டுமே விற்பனையாகிறது. இதனால், புளியங்குடி, மணப்பாறை விவசாயிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கோடை வெயில் தொடங்கி விட்டதால், ஐஸ்கிரீம், குளிர்பானங்களை மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் ‘கிரீம்’ உருவாக்க துணிகளுக்கான சலவை சோப்பு தூளும், குளிர்பானங்களில் நுரையை அதிகரிக்க ‘பாஸ்போரிக்’ அமிலமும், சர்க்கரைக்கு பதிலாக சுவை & நிறத்தை மேம்படுத்த சாக்ரினும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதை உட்கொள்பவர்களுக்கு பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.